வியாழன், 25 டிசம்பர், 2014

'ஐ.எஸ்.' போராளிகள் மேற்குலக நாடுகள் நினைப்பதை விடவும் அபாயகரமானவர்கள் போராளிகளிடமிருந்து தப்பி வந்த ஜேர்மனிய ஊடகவியலாளர்

 Juergen Todenhoefer was the first Westerner given access to Mosul since Islamic State took over  (image:BBC)

மேற்­கு­லக நாடுகள் நினைப்­பதை விட ஐ.எஸ். போரா­ளிகள் மிகவும் பல­மா­ன­வர்­க­ளா­கவும் அபா­ய­க­ர­மா­ன­வர்­க­ளா­கவும் உள்­ள­தாக ஜேர்­ம­னிய ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

ஜுயர்கென் தொடென்ஹோபர் என்ற மேற்­படி ஊட­க­வி­ய­லாளர் ஈராக்கில் மொசூல் நகரில் ஐ.எஸ். போரா­ளி­க­ளுடன் 6 நாட்­களை செல­விட்­டி­ருந்தார்.



ஐ.எஸ். போராளி குழுவை பின்­பற்­று­ப­வர்கள் பெரிதும் தூண்­டப்­பட்­ட­வர்­க­ளா­ கவும் அந்­தப் ­போ­ராளி குழுவின் கொடூ­ர­மான தாக்­கு­தல்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிப்­ப­வர்­க­ளா­கவும் உள்­ள­தாக தொடென்­ஹோபர் தெரி­வித்தார்.

போரா­ளிகள் பரந்து காணப்­ப­டு­வதால் அவர்­களை வான் தாக்­கு­தல்­க­ளுக்கு இலக்கு வைப்­பது கடி­ன­மா­க­வுள்­ள­தாக அவர் கூறினார்.

மொசூல் நக­ரா­னது கடந்த ஜூன் மாதம் ஐ.எஸ். போரா­ளி­களால் கைப்­பற்­றப்­பட்­டி­ருந்­தது.

ஐ.எஸ். போரா­ளி­களின் பிராந்­தி­யத்­துக்குள் ஆழ­மாக ஊடு­ருவிச் சென்ற பின் உயி­ருடன் திரும்பி வந்த வெளி­நாட்­ட­வராக முன்னாள் ஜேர்­ம­னிய அர­சி­யல்­வா­தி­யான தொடென் ஹோபர் விளங்­கு­கிறார்.

அந்­தப்­ பி­ராந்­தி­யத்­துக்கு சென்ற பல மேற்­கு­லக நாட்­ட­வர்கள் ஐ.எஸ். போரா­ளி­களால் அண்­மையில் தலையை வெட்டி படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ளனர்.

ஆண்கள் எவ்­வாறு சரி­யான முறையில் பிரார்த்­தனை முத­லான கட­மை­களை செய்ய வேண்டும் என்றும் பெண்கள் எவ்­வாறு தமது உடலை முழு­மை­யாக மூடி ஆடை அணிய வேண்டும் என்றும் வலி­யு­றுத்தும் வழி காட்டல் குறிப்­புக்­களை உள்­ள­டக்­கிய சுவ­ரொட்­டி­களை மேற்­படி போரா­ளிகள் நக­ரெங்கும் ஒட்டி வைத்­துள்­ள­தாக தொடென் ஹோபர் கூறினார்.

மத நம்­பிக்­கை­யற்ற பெண்கள் அல்­லது ஆண்­களால் அணி­யப்­படும் ஆடை­களை அணி­யக்­கூ­டாது என அந்த சுவ­ரொட்­டிகள் அறி­வு­றுத்­து­வ­தாக அவர் தெரி­வித்தார்.

புத்­தக கடை­யொன்றில் அடி­மை­களை எவ்­வாறு நடத்­து­வது என்­பது உள்­ள­டங்­க­லான மத சட்­டங்கள் தொடர்­பான குறிப்­புக்­களும் புத்­த­கங்­களும் காணப்­பட்­ட­தாக அவர் கூறினார்.

ஐ.எஸ். போரா­ளி­களின் இலட்­சி­ய­மாக மத சுத்­தி­க­ரிப்பும் தமது பிராந்­தி­யத்தை விரி­வு­ப­டுத்­து­வதும் உள்­ள­தாக கூறிய அவர், இதற்கு முன் எந்­த­வொரு போர் வல­யத்­திலும் தான் காணாத உற்­சாகம் அங்கு காணப்­பட்­ட­தாக தெரி­வித்தார்.

"அவர்கள் மிகுந்த நம்­பிக்­கை­யுடன் உள்­ளார்கள். அவர்கள் தம்மை பற்­றிய நிச்­சய தன்­மை­யுடன் உள்­ளனர். இந்த வருட ஆரம்­பத்தில் ஒரு சில மக்­களே ஐ.எஸ். போரா­ளிகள் தொடர்பில் அறிந்­தி­ருந்­தனர். ஆனால் தற்­போது அவர்கள் பிரித்­தா­னியா அள­வான பிர­தே­சத்தை கைப்­பற்­றி­யுள்­ளனர். அவர்கள் ஒரு அணு குண்டு அல்­லது சுனாமி பேர­லை­போன்ற சக்தியுடன் நகர்ந்து வரு­கின்­றனர்" என தொடென் ஹோபர் கூறினார்.

தமது இஸ்­லா­மிய தேசம் செயற்­ப­டு­வதை ஐ.எஸ். போரா­ளிகள் காண்­பிக்க வேண்டும் என அவர்கள் மனதில் பாதிப்­பொன்றை தான் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­த­தாக கூறிய அவர், தமது உயிர்ப் ­பா­து­காப்­புக்­கான உத்­த­ர­வா­தத்தை பெற்ற பின் தனது மகன் அங்­குள்ள காட்­சி­களை பட­மாக்­கி­யுள்­ள­தாக தெரி­வித்தார்.

மொசூல் நக­ரி­லுள்ள கிறிஸ்­த­வர்­களும் ஷியா இனத்­த­வர்­களும் அச்சம் கார­ண­மாக வெளி­யே­றி­யுள்­ள­தாக குறிப்­பிட்ட அவர், ஐ.எஸ். போரா­ளிகள் தமது சொந்த நீதி முறை­மையை கொண்­டுள்­ளார்கள். நீதி­மன்­றங்­களில் ஐ.எஸ் போரா­ளி­களின் கொடிகள் பறக்­க­வி­டப்­பட்­டுள்­ளன எனக் கூறினார்.

தற்­போது மொசூல் நகரில் ஆயி­ரக்­க­ணக்­கான போரா­ளிகள் உள்­ளனர். அவர்கள் தம்மை இலக்கு வைத்து தாக்­கு­தல்கள் நடத்­தப்­ப­டு­வதை கடி­ன­மாக்கும் வகையில் நக­ரெங்கும் பரந்து காணப்­ப­டு­கின்­றனர் என அவர் தெரி­வித்தார்.

ஐ.எஸ். போரா­ளிகள் சிரி­யாவை விடவும் ஈராக்­கிய பிர­தே­சங்­களில் பலம் பெற்று விளங்­கு­வ­தாக தான் நம்­பு­வ­தாக அவர் கூறினார்.

மேற்­படி போரா­ளிகள் தனது வாழ்வில் தான் கண்­ட­வர்­க­ளி­லேயே மிகவும் கொடூ­ர­மான அபா­ய­க­ர­மான எதி­ரி­க­ளாக உள்­ள­தாக தெரி­வித்தார்.

"ஐ.எஸ். போரா­ளி­களை தடுத்து நிறுத்­தக்­கூ­டி­ய­வர்கள் எவ­ரையும் நான் காண­வில்லை. அரபு நாடுகள் மட்­டுமே அவர்­களை தடுத்து நிறுத்த முடியும்" எனத் தெரி­வித்த அவர், ஜேர்­மனை சேர்ந்த ஜிஹா­தி­யொ­ருவர் மூல­மாக அந்த பிராந்­தி­யத்­துக்கு சென்­ற­தா­கவும் இஸ்­லா­மிய தேசத்தின் அனு­ம­தியை பெற பல மாதங்கள் காத்­தி­ருந்­த­தா­கவும் கூறினார்.

தனக்கு பல தரு­ணங்­களில் பாது­காப்பு வழங்­கிய ஐ.எஸ். போராளிகள் எத்தருணத்திலும் மனதை மாற்றிக் கொள்ளலாம் என தான் அச்சமடைந்திருந்தாக அவர் தெரிவித்தார்.

தான் எதிர்பார்த்தது போன்று இறுதியில் ஐ.எஸ். போராளிகள் தன்னையும் தனது மகனையும் பணயக்கைதிகளாக பிடித்து வைக்க தீர்மானம் எடுத்ததாகவும் இதனையடுத்து தானும் தனது மகனும் தமது பொருட்களை எடுத்துக்கொண்டு சுமார் அரை மைல் தூரம் ஓடி எல்லையைக் கடந்து துருக்கிக்குள் பிரவேசித்ததாகவும் தொடென்ஹோபர் கூறினார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல