வெள்ளி, 26 டிசம்பர், 2014

சுனாமியின் தசாப்த நினைவலைகள்

மனி­தனை மனிதன் நோவினை செய்யும் செயற்­பா­டுகள் தலை­வி­ரித்­தாடும் இந்த உலகில் இறைவனின் சோத­னை­களும் தண்­டனை களும் மனி­தனைப் பந்­தா­டிக்­கொண்­டி­ருக்­ கி­ன்றன.

கொலை, கொள்ளை, விப­சாரம், திரு ட்டு, வன்­மு­றைகள், துஷ்­பி­ர­யோ­கங்­கள், இலஞ்சம், ஊழல், மோசடி என பஞ்­சமா பாதகச் செயல்கள் தினமும் உல­கிலும் நம்­நாட்­டிலும் அதி­க­ரித்­துக்­கொண்டு செல்­வதை காணக் கூடிய நிலையில், இறை­வ னின் சோத­னையின் வெளிப்­பா­டாக ஏற்­படும் பூகம்பம், பூமி­யதிர்ச்சி, சூறா­வளி, வெள்ளம், மண்­ச­ரிவு என இயற்கை அன ர்த்­தங்­களும் மனி­தனை சோத­னைக்­குள்­ளா க்கிக் கொண்­டி­ருக்­கி­ன்றன.



தற்­போது நமது நாட்டில் 7ஆவது ஜனா ­தி­பதித் தேர்த­லுக்­கான சூறா­வளிப் பிர­சா­ரங்கள் மிக வேக­மாக அலை­வீசிக் ­கொண்­டி­ருக்கும் நிலையில் அந்த அலை­களில் மக்கள் அள்ளுண்டு திரியும் சூழ்­நி­லையில் இயற்­கையின் அசா­தா­ரண நிலை­யினால் ஏற்­பட்­டுள்ள வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவு கார­ண­மாக மக்கள் வெகு­வாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். ஏறக்­கு­றைய 5 இலட்­சத்­துக் கும் அதி­க­மான மக்கள் 14 மாவட்­டங்­களில் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்த இயற்­கையின் அனர்த்தம் தற்­போது மக்­களின் இயல்புவாழ்க்­கையைப் பாதித்­துள்­ள­போது, உல­கையே அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கிய சுனாமிப் பேரலை ஏற்­பட்டு அதன் ஒரு தசாப்த நிறைவு நினை­வ­லை­களை இன்று மக்கள் பெரும் சோகத்­துடன் நினைவு கூரு­கின்­றனர்.

இந்­நாட்டின் ஏனைய மாகா­ணங்­களை விட யுத்­தத்­தி­னாலும் சுனாமிப் பேர­லை­யி­னாலும் அதிகம் பாதிக்­கப்­பட்­டது வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளாகும். இன்றும் மழை வெள்ளத்­தினால் அதிகம் பாதிக்­கப்­பட்­டு ள்ள மாவட்­ட­மாக கிழக்கின் மட்­டக்­க­ளப்பு மாவட்டம் கரு­தப்­ப­டு­கி­றது.

இயற்­கையின் பாதிப்­புக்­க­ளினால் பாதிக்­கப்­படும் மக்­க­ளுக்­கான உத­வி­களும் நிவா­ர­ ணங்­களும் உரிய முறையில் வழங்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும். சுனாமி ஏற்­பட்டு 10 வரு­டங்கள் கடந்தும் அதனால் பாதிக்­கப்­பட்ட மக்­களில் பலர் இன்னும் அவர்­களின் வாழ்வை சீரான முறையில் கட்­டி­யெ­ழுப்ப முடி­யாத நிலையில் உள்­ளமை கவ­னத்­திற் ­கொள்­ளப்­பட வேண்­டி­ய­வை­யாகும். இலங்­கையில் ஏற்­பட்ட இயற்கை அனர்த்­தங்­க ளில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யது இந்த சுனா­மிதான். இன்று சுனா­மிக்கு வயது 10 ஆகும்.

சுனா­மியின் கோரம்

2004 டிசம்பர் 26ஆம் திகதி இந்­நூற்­றாண்டின் மறக்க முடி­யாத ஒரு நாள். சுனா மிப் பேரலை என பெயர் சூட்­டப்­பட்டு உல­கத்­தையே அதிரவைத்த நாள். ஆயிரம் ஆயிரம் கன­வு­க­ளோடு உயிர்கள் கடலில் சங்­க­மித்த நாள். அந்நாள் நம்மைக் கடந்து 10 வரு­டங்கள் ஆகி­விட்­டது. ஆனால், இன் னும் அதன் வடுக்கள் மாற­வில்லை. அதன் வேதனை நினை­வ­லைகள் தொட­ர­லை­க­ளாக மனங்­களில் சஞ்­ச­ரித்­துக்­கொண்­டி­ருக்­கி­றது வரு­டங்கள் 10 கடந்தும்.

அந்­நாளின் பின்னர் இந்த மண்ணில் பிறந்­த­வர்கள் அந்த நாள் பற்­றியும் சுனா மிப் பேரலை மனித வாழ்வில் ஏற்­ப­டுத்திய காயங்கள், அதன் வடுக்கள் பற்றியும் அறிந்து கொள்­வதும் அவ­சி­யம்தான்.

அந்­த­வ­கையில், சுனாமி என்­பது ஜப்­பா­ னிய மொழியில் உள்ள வார்த்தை. 'சு' என் றால் துறை­முகம், 'னாமி' என்றால் பேரலை என்று பெயர். சுனாமி என்­பது துறை­முகப் பேரலை. சில நிமி­டங்கள் முதல் சில நாட் கள் வரை கூட அதுவும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான இராட்­சத அலை­களை உரு­வாக்­கக்­கூ­டி­ய­துதான் இந்தச் சுனாமி.

பூகம்­பத்தால் சுனாமி ஏற்­ப­டு­கி­றது. அதா­வது பூகம்பம் என்­பது நிலப்­ப­கு­தியில், கடல் பகு­தியில், மலைப்­ப­கு­தியில் ஏற்­ப டும். நிலப்­ப­கு­தியில் வந்தால் நிலத்தில் உள்­ளவை அதிர்ந்து அழி­கி­றது. கடலில் வந்தால் கடலின் ஆழ்­ப­குதி பாதிக்­கப்­ப­டு­கி­றது. மலையில் வந்தால் எரி­ம­லை­யாக உரு­வெ­டுக்­கி­றது.

புவி­யியலை நோக்­கு­கையில், பல இல ட்சம் ஆண்­டு­க­ளுக்கு முன்பு ஒரே பிளேட் தான் இருந்­தது. அதன் மீதுதான் பூமி இருந்­தது. ஆனால் கண்­டங்­க­ளாக பிரிய, பிரிய அதன் தட்ப, வெப்ப, இயற்கை சூழ்­நி­லை­க­ளுக்கு ஏற்ப பல்­வேறு பிளேட்கள் உரு­வா­கின. இந்தப் பிளேட்கள் மீதுதான் ஒவ்­வொரு கண்­டமும் இருக்­கின்­றது. நிலம், கடல் எல்­லா­வற்­றையும் தாங்கி நிற்­பது இந்த பிளேட்­கள்தான். இதைத்தான் டெக்­டானிக் பிளேட்கள் என்று புவி­யியல் நிபு­ணர்கள் கூறு­கின்­றனர்.

யுரேஷின் பிளேட், அவுஸ்­தி­ரே­லியன் பிளேட் இரண்டும் இந்­தோ­னே­சி­யாவின் வடக்கே சுமாத்திரா தீவில் மோதி­ன. அத னால் பூகம்பம் ஏற்­பட்­டது. அதன் அலை­கள்தான் இந்­துமா சமுத்­தி­ரத்தில் சுனாமிப் பேர­லை­களை ஏற்­ப­டுத்­தி­யது. இவ்­வாறே 2004.12.26ஆம் திகதி சுனாமி ஏற்­பட்­டது.

2004 டிசம்பர் மாதம் 26 அன்று இந்­தோ­னே­சி­யாவின் சுமாத்­தி­ராவில் ஏற்­பட்ட பூக ம்­பத்­தினால் உரு­வான சுனாமிப் பேரலை, இந்­தோ­னேசி­யாவை மாத்­தி­ர­மல்­லாது இல ங்கை, இந்­தியா, தாய்­லாந்து, மாலை­தீவு, பங்­க­ளாதேஷ் என ஏறக்­கு­றைய 12 நாடு­க ளின் கரையோரப் பகு­தி­களை அழித்­தது. சுமார் 1,74,000 உயிர்­களை இந்தச் சுனாமி பேர­லைகள் காவு­கொண்­டன.

சர்­வ­தேச புள்­ளி­வி­ப­ரங்­க­ளின்­படி சுனா­மி­யினால் அதி­க­ளவு உயிர்கள் காவு­கொள்­ளப்­பட்ட நாடுகள் வரி­சையில் இந்­தோ­னே­சி­யாவே முதலிடத்தில் உள்­ளது. இந்­தோ­னே­சி­யாவில் 1,26,473 பேரையும், இந்­தி­யாவில் 10,749 பேரையும் தாய்­லாந் தில் 5,595 உயிர்­க­ளையும் சுனாமிப் பேர­லைகள் காவு­கொண்­டன. இலங்­கையில் சுனா­மி­யினால் உயிரிழந்­த­வர்கள் மற்றும் காணா­மல் ­போ­னோரின் மொத்த எண்­ணி க்கை 36,594 ஆகும்.

இலங்­கையின் வடக்கு, கிழக்கு தென், மேல், வடமேல் மாகா­ணங்­களின் கரை­யோ ரப் பிர­தே­சங்கள் சுனா­மி­யினால் பல­மா கத் தாக்­கப்­பட்­டன. யாழ்ப்­பாணம், கிளி­நொ ச்சி, முல்­லைத்­தீவு, அம்­பாறை, மட்­டக்­க­ள ப்பு, திரு­கோ­ண­மலை, காலி, மாத்­தறை, அம்­பாந்­தோட்டை, கம்­பஹா, புத்­தளம், கொழும்பு, களுத்­துறை ஆகிய மாவட்­டங்­க ளின் கரை­யோரப் பிர­தேசங்கள் சுனாமிப் பேர­லை­க­ளினால் மிக அதி­க­மாகப் பாதிக்­கப்பட்­டன.

புள்­ளி­வி­ப­ரங்­க­ளின்­படி மாவட்ட மட்­ட த்தில் உயிரிழந்தோர் மற்றும் காணாமல் போனோரின் மொத்த எண்­ணிக்­கையைப் பார்க்­கின்­ற­போது தென் மாகா­ணத்தின் காலி மாவட்­டத்தில் 1785 பேரும், அம்­பாந் ­தோட்டை மாவட்­டத்தில் 1102 பேரும், மாத்­தறை மாவட்­டத்தில் 1153 பேரு­ம், வட மாகா­ணத்தின் யாழ். மாவட்­டத்தில் 901 பேரும், கிளி­நொச்சி மாவட்­டத்தில் 06 பேரும் முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் 2652 பேரு­ம் பதிவாகியுள்ளனர்.

சுனாமி பேர­லை­யினால் கிழக்கு மாகா ணம் பாரிய அழிவைச் சந்­தித்­தது. புள்ளி விபரத்திணைக்­க­ளத்தின் தர­வு­க­ளின்­படி, கிழக்கு மாகா­ணத்தில் உயிரிழந்தோர், காணா­மல்­போனோர் எண்­ணிக்­கை­யா­னது அம்­பாறை மாவட்­டத்தில் 4,216 பேரும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 1,756 பேரும், திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் 761 பேரு­மாகும்

சுனா­மியும் வட, கிழக்கும்

சுனா­மி­யினால் பாதிக்­கப்­பட்ட மாகா­ண ங்­களில் அதி­க­ள­வி­லான இழப்பைச் எதிர் ­கொண்­டவை வடக்கு, கிழக்கு மாக­ணங்­க­ளாகும். வடக்கின் யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்­டங்­களும் கிழக்கின் அம்­பாறை, மட்­டக்­க­ளப்பு, திரு­ கோ­ண­மலை மாவட்­டங்­களும் சுனா­மி­யி னால் பாதிக்­கப்­பட்­டன. இம்­மா­வட்­டங்­க ளில் அதி­க­ளவு உயிர் மற்றும் சொத்­த­ழி வை எதிர்­கொண்ட மாவட்டம் என்றால் அது அம்­பாறை மாவட்­ட­மாகும்.

அதிலும் கல்­முனைத் தேர்தல் தொகு­தி யின் கரை­யோரத் தமிழ், முஸ்லிம் மக்களே அதி­க­ளவு பாதிக்­கப்­பட்­டனர். தொகை மதி ப்­பீட்டுப் புள்ளிவிப­ரத்­தி­ணைக்­க­ளத்தின் புள்ளிவிப­ரங்­களின் படி அம்­பாறை மாவட்­டத்தில் சுனாமிப்பேர­லை­யினால் 21,201 வீடுகள் முற்­றா­கவும் பகு­தி­யா­கவும் சேத­ம­டைந்­தன. இதில் அதி­க­ளவு பாதிக்­க­ப்பட்ட வீடு­களைக் கொண்ட பிர­தே­சமும் கல்­மு னைப் பிர­தே­சம்தான்.

இக்­கல்­முனைப் பிர­தே­சத்தின் முஸ்லிம் மற்றும் தமிழ் கிரா­மங்­களில் சுனா­மி­யி னால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக வீடு கள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளன. உதா­ர­ணத் ­திற்கு, சாய்ந்­த­ம­ருது வொலி­வே­ரியன் சுனாமி மீள்குடி­யேற்ற வீட்­டுத்­தொ­குதி, கல்­மு­னைக்­குடி கிறீன்பீல்ட் சுனாமி மீள் குடி­யேற்ற வீட்டுத் தொகுதி மற்றும் பாண்­டி­ருப்பு சுனாமி மீள்குடி­யேற்ற வீட்டுத் தொகுதி என்­ப­வற்றைக் குறிப்­பி­டலாம்.

இந்த வீட்­டுத்­தொ­கு­திகள் தன்­னார்வ தொண்டு நிறு­வ­னங்­களின் உத­வி­யுடன் அர­சாங்­கத்­தினால் நிர்­மா­ணிக்­கப்­பட்­டன. இருப்­பினும் போதிய அடிப்­படை வச­திகள் இல்­லா­மை­யினால் இம்மீள் குடி­யேற்­றத்தில் வாழும் மக்கள் சொல்­லொ ண்ணாத் துய­ரங்­களை கடந்த 10 வருடங்­ க­ளாக எதிர்­நோக்­கு­கின்­றனர். இக்­கு­டி­யேற்­றத்­திட்­டங்­களில் குடி­யி­ருக்கும் சிறார்­களு க்கு நிரந்­தர பாட­சா­லையோ, நூல­கமோ, விளை­யாட்டு மைதா­னமோ முறை­யாக அமைக்­கப்­ப­ட­வில்லை.

சாய்ந்­த­ம­ருது வொலி­வே­ரியன் வீட்­டுத் ­திட்­டத்தில் 200 குடும்­பங்கள் வாழ்­வ­தற்­கான வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள போதிலும், இவ்­வீட்­டுத்­திட்­டத்தில் அடி ப்­படை வச­திகள் சரி­யாக வழங்­கப்­ப­ட­வி ல்லை. கல்­மு­னைக்­கு­டியில் நிர்­மாணிக்­கப்­பட்­டுள்ள கிறீன் பீல்ட் வீட்­டுத்­தொ­குதி மக்கள் குடி­யி­ருப்­ப­தற்­கு­ரிய வச­தி­க­ளுடன் கொண்­ட­தாக அமைக்­கப்­ப­ட­வில்லை என இம்­மக்கள் குற்­றஞ்­சாட்­டு­கின்­றனர். இவ்­வீட்­டுத்­தொ­கு­தி­யி­லுள்ள சில வீடு­க­ளுக்கு இன்னும் அடிப்­படை வச­திகள் பெற்­றுக் ­கொ­டுக்­கப்­ப­ட­வில்லை. அவற்றில் சில வீடுகள் மக்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டாது அல்­லது மக்கள் அதில் வசிக்­காது இருட்­ட­றை­க­ளாகக் காட்­சி­ய­ளிப்­ப­தாக அப்­பி­ர­தேச மக்கள் குறிப்­பி­டு­வதைக் காண­மு­டி­கி­றது.

இவ்­வாறே மரு­த­முனை, பாண்­டி­ருப்பு மற்றும் காரை­தீவு பிர­தே­சங்­களில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள சுனாமி வீட்­டுத்­தொ­கு­தி­களின் நிலை­மை­களும் உள்­ளன. இவ்­வா­றான நிலைதான் வடக்கு மற்றும் கிழக்கில் சுனா­மி­யினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காகக் நிர்­மாணிக்­கப்­பட்ட வீட்­டுத் ­தொ­கு­தி­களின் நிலைமை காணப்­ப­டு­கி­றது. அது­மாத்­தி­ர­மின்றி, வடக்கு மற்றும் கிழக்குப் பிர­தே­சத்தின் சில பிர­தே­சங்­களில் சுனா­மி­யினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் இன்னும் நிரந்­தர வீடுகள் இல்­லாமல் தகரக்கொட்­டில்­களில் வாழ்­வ­தையும் காண­மு­டி­கி­றது.

அம்­பாறை மாவட்­டத்தின் கரை­யோர பிர­தே­சங்­களில் சுனா­மி­யினால் பாதிக்­கப்­பட்டு வீடு­களை இழந்த மக்­க­ளுக்­காக அக்­க­ரைப்­பற்று பிர­தே­சத்­துக்­கு­ரிய நுரைச்­சோ­லையில் சவூதி அர­சாங்­கத்­தினால் 500 வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டன.

இருப்­பினும் இவ்­வீ­டு­களைப் பகிர்ந்­த­ளிப்­பதில் உள்ளூர் அர­சியல் அதி­கா­ரத்­த­ர ப்­பின­ரி­டையே போட்­டிகள் நில­வின. இப்­போட்­டி­களின் கார­ண­மாக ஏற்­பட்ட இழு­ பறி நிலை­யி­னை­ய­டுத்து, பேரி­ன­வாதம் பாதிக்­க­ப்ப­டாத மக்­க­ளுக்கும் வீடு­களை வழங்க வேண்­டு­மென்று கோஷங்­களை எழும்பி அதில் வெற்­றியும் கண்­டது. இந்த வீட்­டுத்­தொ­கு­தியை பகிர்ந்­த­ளிப்பது தொடர்பில் நீதிமன்றம் வரை சென்ற பேரி­ன­வாதம் நீதிமன்றத் தீர்ப்­பையும் பெற்­றுக் ­கொண்­டது.

இவ்­வீட்­டுத்­தொ­கு­திகள் மூவின மக்­க­ளுக்கும் வழங்கப்பட வேண்­டு­மென நீதி­ மன்றம் உத்­த­ரவு பிறப்­பித்­துள்ள போதி லும், சுனா­மி­யினால் பாதிக்­க­ப்பட்ட மக்­க­ளுக்கு இது­ வரை இவ்­வீ­டுகள் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­ட­வில்லை. இதுபற்றி சம்­பந்­தப்­பட்ட தரப்­புக்­க­ளுடன் பேசி பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான முயற்­சி­களும் அதி­கா­ரத்­த­ரப்­பினர் எவ­ரி­னாலும் முறை­யாக மேற்­கொள்­ளப்­ப­ட­வில்­லை­யென்­றுதான் கூறவேண்டும். வீடு­களைப் பெற்­றுத்­தா­ருங்கள் என பாதிக்­கப்­பட்ட மக் கள் பல வரு­டங்­க­ளாக சாத்­வீகப் போராட்­டங்­களை முன்­னெ­டுக்­கின்­ற­போ­திலும் அவை கூட கைகூ­ட­வில்லை என வீடு களை எதிர்­பார்த்­தி­ருப்போர் வேத­னை­யு டன் கூறு­கின்­றனர்.

இயற்கை அனர்த்­தங்கள் இன, மத, பிர­தேச வேறு­பா­டுகள் பார்ப்­ப­தில்லை. மாறாக சகல தரப்­பி­ன­ரையும் அவை பாதிக்­கின்­றன. இவ்­வா­றுதான் சுனாமிப் பேர­லையும் சகல மக்­க­ளையும் பாதித்­தது. அவற்றின் பாதிப்­புக்கு வடக்கு. கிழக்கு கரை­யோரப் பிர­தே­சங்கள் பல ஆட்­கொள்­ளப்­பட்­டன. இருப்­பி­னும், தெற்குப் பிர­தே­சத்தில் பாதி க்­க­பட்ட மக்­களின் தேவை­களை, அவர்­களின் வாழ்­வாதா­ரத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு அளிக்­கப்பட்ட முக்­கி­யத்­து­வம், முன்­னுரிமை போல கிழக்­கிலும் வடக்­கிலும் சுனாமி­யினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் நலன்கள் தொடர்பில் செலுத்­தப்­பட்ட அக்­க­றையில் குறை­பாடு காணப்­ப­டு­வதை ஏற்­றுக்­கொள்­ளாமல் இருக்க முடி­யாது. இத ற்கு சிறந்த உதா­ர­ண­மாக இருப்­பது சுனா­மி­ யினால் பாதிக்­கப்­பட்ட மக்­களுக்­காக சவூதி அர­சாங்­கத்­தினால் கட்­டப்பட்ட நுரைச்­சோலை சுனாமி மீள்­கு­டி­யேற்ற வீடுகள் இன் னும் அந்த மக்­க­ளுக்கு வழங்­கப்­ப­டா­மை­யாகும்.

உண்­மையில் இந்த வீடுகள் சென்­ற­டை­ய­வேண்­டி­யது அம்­பாறை மாவட்­டத்தின் கரை­யோரப் பிர­தே­சத்தில் வாழ்ந்த சுனா­மி ­யினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கே­யாகும். ஆனால், கடலே இல்­லாத, சுனா­மியின் அழி­வு­களை அனு­ப­வித்­தி­டாத அதன் ஒரு சத­வீதப் பாதிப்­பை­யேனும் எதிர்­கொள்­ளா­த­வர்­க­ளுக்கு இந்த வீடுகள் பகிர்ந்­த­ளிக்­கப் ­ப­டு­வது மனச்­சாட்­சி­யுள்­ளவர்­களால் ஏற்­று க்­கொள்ள முடி­யா­தது. இதற்குக் காரணம் அர­சியல் அதி­காரப் போட்டி என்றால் அது மிகை­யா­காது.

சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து ஒரு தசாப்த காலம் கடந்தும் இன்னும் ஆயி­ர­மாயிரம் பேர் அது ஏற்­ப­டுத்­திய வர­லாற்று வடுக்­க­ளோடு வாழ்ந்துகொண்­டி­ருப்­பது வேத­ னை­ய­ளிக்கக் கூடி­யது. சுனா­மி­யினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் அடைந்த பலா­ப லன்­களை விட எவ்­வித பாதிப்­புக்­க­ளையும் எதிர்­கொள்­ளா­த­வர்­களே அதி­க­ளவில் நன் மையடைந்தார்கள் என்று சொல்லப்படுவ தில் யதார்த்தம் உள்ளது.

வசதியோடு வாழ்ந்தவர்கள் ஏழைகளாக் கப்பட்ட அதேவேளை, பணத்தை காணா தவர்கள் பலர் சுனாமியினால் பணக்காரர் களாக மாறினர். அதனால்தான் இந்தச் தங் கச் சுனாமி மீண்டும் ஒருமுறை வரமாட் டாதா என்று அங்கலாய்த்தவர்கள் அதிகம் பேர் என பலர் கூறியதைக் கேட்க முடிகி றது.

சுனாமி ஏற்பட்டு ஆண்டுகள் பத்து உருண்டோடிவிட்டன. ஒரு தசாப்தத்தை நிறைவு செய்துவிட்டது. இருப்பினும் சுனாமியின் பாதிப்புக்களைச் சுமந்து வாழ் பவர்கள் பலரின் வாழ்வு இன்னும் ஒளிமய மாகவில்லை. அவர்கள் இன்னுமே வேத னைகளைச் சுமந்து கொண்டே வாழ்கிறார் கள். இவர்களின் வாழ்வு ஒளிமய மாக வேண்டும். அவர்களின் ஏக்கங்கள் மறைந்து, 11ஆவது ஆண்டிலாவது துயர மில்லாத வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்க வேண்டும். சுனாமியின் நினை வலைகள் ஒவ்வொரு வருடமும் அவர்க ளின் இதயங்களில் சஞ்சரித்தாலும் சுனாமி யினால் அழிந்து போன அவர்களின் வாழ் வும் வாழ்வாதாரமும் கட்டியெழுப்பப்படு வதிலும் அவர்களுக்கான நிரந்தரமான வீடு கள் வழங்கப்படுவதிலும் இன்னும் வருட ங்கள் கடத்தப்படக் கூடாது என்பதே இக் கட்டுரையின் தாழ்மையான வேண்டுதலா கும்.

அதற்காக என்னென்ன நடவடிக்கைகள் யார் யார் செய்ய வேண்டுமோ, யார் யார் அதற்கான கடப்பாட்டில் உள்ளார்களோ அவர்கள் அவற்றை நிறைவேற்றி வைக்க வேண்டும். அதன் மூலம் சுனாமியினால் உண்மையாகப் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வு புதுப்பொலிவு பெறவேண்டும். அவையே காலத்தின் தேவையாகவும் மனி தாபிமானத்தை நேசிப்போரின் அவாவாக வும் இருக்கிறது.

– எம்.ஏ.ஸமட்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல