எனக்குத் தெரியாது.
மிகக் குறைந்த பட்சம்
அமெரிக்கப் பனிப்பொழிவு பற்றியோ
மைத்திரிபால தடம்மாறுவது பற்றியோ
பெற்றோல் விலைக்குறைப்பு அரசியல் பற்றியோ
பந்து பட்டு அவுஸ்ரேலிய வீரர் மரணமானது பற்றியோ
நரேந்திரமோடி குப்பை கூட்டுவது பற்றியோ
பதுளை மண்சரிவு பற்றியோ
ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல்கள் பற்றியோ
எஸ் பொ காலமானது பற்றியோ
எனக்கெதுவும் தெரியவே தெரியாது.
வேண்டுமானால் கேளுங்கள்.
தெய்வம் தந்த வீட்டில்
சீதாவுக்கு பிறந்த நாள் கேக் வெட்டியது பற்றியும்
கத்தியின் இரண்டு வேட கதாநாயகன் பற்றியும்
சனிப்பெயர்ச்சி பலன்கள் பற்றியும்
திரிசாவின் நிச்சயதார்த்தம் பற்றியும்
லிங்கா படப் பாடல் பற்றியும்
ஊரில் யார், யாருடன்
இரகசியத் தொடர்பு வைத்திருக்கிறார் என்பது பற்றியும்
எந்தச் சாத்திரி சொல்வது
ஓரளவுக்கு சரியாயிருக்கிறது என்பது பற்றியும்
எவரெவர் தலைக்கு கறுப்பு மை
அடித்திருக்கிறார்கள் என்பது பற்றியும்
நித்தியானந்தாவின் திருவிளையாடல் என்று
பிரசுரமான கதைகள் பற்றியும்...
எங்கே?எப்போது?என்ன?
இலவசமாக கொடுக்கிறார்கள் என்பது பற்றியும்
இப்போ மிகப் புதிதாய்
குஸ்பு கொழுத்தி விட்டெரியும் சொற்பந்தம் பற்றியும்
மிகச் சரியாக சொல்லி விடுகின்றேன்.
தீபிகா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக