ஆந்திராவில் பெண்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அருள்வாக்கு கூறிவந்த டுபாக்கூர் சாமியாரை போலீசார் கைது செய்தனர். அவரை மனநிலை மையத்தில் சேர்க்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கமலாபுரம் என்ற ஊரில் இளைஞர் ஒருவர் காவி உடை அணிந்து தன்னை சாமியார் என்று கூறிக்கொண்டு உலா வந்தார். தங்கள் குடும்ப பிரச்சனை, மனக்குறைகள் போன்றவற்றை சாமியாரிடம் கூறி நிவாரணம் கேட்ட பெண்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து "அருள்வாக்கு" கூறி வந்திருக்கிறார்.
இந்த போலி சாமியார் பற்றி போலீசுக்கு ஏராளமான புகார்கள் சென்றன. சாமியார் பெண்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து மோசடி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் சாமியாரின் அறைக்குள் புகுந்து சோதனை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அவரை ஜனவரி 7-ந்தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
மேலும் அவரது நடவடிக்கைகள் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருப்பதால் சாமியாரை மனநல மையத்தில் சேர்க்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி அவர் மனநல மையத்தில் சேர்க்கப்பட்டார். போலி சாமியாரின் உதவியாளர் சுப்பா ரெட்டியும் கைது செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக