கணினியில் பிரச்சனையா, உடனே பொறியாளரை அழைக்காமல் உங்களால் என்ன செய்ய முடியும் என்று பாருங்கள். பொதுவாக கணினியில் அதிகம் ஏற்படும் பிரச்சனைகளை நீங்களே எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை சில பொறியாளர்களுடன் ஆலோசித்து அதன் தொகுப்பை தான் இங்க தொகுத்திருக்கின்றோம். [2014 ஆம் ஆண்டின் தலைசிறந்த தொழில்நுட்ப கருவிகள்] எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் முதலில் உங்கள் கணினியில் ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். இதற்கு முன் கணினியின் ஓஎஸ் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்து கொள்ளுங்கள், சரியான அப்டேட் செய்யப்படாத சமயங்களில் பாதிப்புகள் அதிகம் ஏற்படும்.
கணினி வேகம் குறைவாக இருக்கின்றது
ஓஎஸ் இருக்கும் ஹார்டு டிரைவ் ஸ்பேஸ் கனிசமான அளவு காலியாக இருக்க வேண்டும், அவ்வாறு இல்லாத சமயத்தில் ஸ்பேஸ் காலி செய்வது அவசியமாகின்றது.நீண்ட நேரம் எடுக்கும் பதிவிறக்கங்கள்
இதை சரி பார்க்க சிறந்தது Speedtest.net, இதன் மூலம் உங்களின் டவுன்லோடிங் வேகம் எப்படி உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.ரீஸ்டார்ட்டிங்
சில ஹார்டு வேர் பிரச்சனைகளை சரி செய்வது சிரமமாக தான் இருக்கும். கணினி அடிக்டி ரீஸ்டார்ட் ஆவதற்கு முக்கிய காரணம் வைரஸ், ஆட்வேர், அதிக படியான சூடாக இருக்கலாம். கணினியில் விசித்திர சத்தம் கேட்டால் அதை கழற்றி நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.பாப் அப்
இன்டெர்நெட் பயன்படுத்தாமல் இருந்தாலும் கணினியில் நிறைய விளம்பரங்கள் தெரிகின்றதா, அப்படியானால் உங்க கணினியில் ஆட்வேர் இன்ஸ்டால் செய்திருப்பீர்கள், இதை சரி செய்ய நிறைய டூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில பிசி ஸ்பீடு அப், பிசி ஸ்பீடு ப்ரோ, இவைகளில் எதையாவது பயன்படத்தலாம்கூகுள்
ப்ரவுஸர் ஹைஜாக் செய்பவர்கள் உங்களது தகவல்களை கூகுள் தேடல்களின் மூலம் சுலபமாக களவாட முடியும், இதை தவிற்க ரியல்-டைம் ஆன்டிவைரஸ் பயன்படுத்துவது சிறந்தது.வைபை
அடிக்கடி வைபை கனெக்ஷன் டிஸ்கனெக்ட் ஆனால் கணினி வைபை வட்டத்தில் இருக்கின்றதா என்பதை பாருங்கள், பின் கணினியின் வயர்லெஸ் டிரைவ்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் பாருங்கள்இன்டெர்நெட் பாதுகாப்பு
இணைய பாதுகாப்பு சான்றிதழ் சரி இல்லை என்ற பிரச்சனையா, பழைய கணினிகளில் சிமோஸ் பேட்டரி சரியாக வேலை செய்யாததால் இந்த பிரச்சனை ஏற்படுகின்றது, ிதை சரி செய்ய கணினியின் நேரம் மற்றும் தேதியை சரியாக வைத்தாலே போதுமானது.ப்ரின்டர்
ப்ரின்ட்ர் அப்டேட் சரியாக இருக்கின்றது, போதுமான பேப்பர் மற்றும் டோனர் என அனைத்தும் சரியாக இருக்கும் போதும் ப்ரின்ட் ஆகவில்லை என்றால், ப்ரின்டரை முழுமையாக கழற்றி மாட்டவும், அதன் பின் ப்ரின்டர் ஆஃப்லைன் சரி பார்க்க வேண்டும்ஈமெயில் அட்டாச்மென்ட்
சில சமயங்களில் ஈ மெயில் அட்டாச்மென்ட் டவுன்லோடு ஆகவில்லை என்றால், ஈமெயில் ஃபைல் எம்மாதிரியானது என்பதை பாருங்கள், அதன் பின் ஃபைல் எக்ஸ்டென்ஷனை ரீனேம் செய்தால் வேலை முடிந்ததுமென்பொருள்
அதிகம் பயன்படுத்தும் மென்பொருள் புதி கணினியில் வேலை செய்யாவிட்டால் ஜாவா மற்றும் ப்ளாஷ் ஸ்க்ரிப்ட்கள் தான் முக்கிய காரணமாக இருக்கும், இவைகளை அனைத்து பிரவுஸர்களும் இன்ஸ்டால் செய்ய உதவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக