சில வேளைகளில், எக்ஸெல் ஒர்க்புக் ஒன்றின் இரண்டு பகுதிகளில், ஒரே நேரத்தில் பணியாற்ற வேண்டியதிருக்கும். ஒவ்வொரு முறையும் அங்கும் இங்குமாகச் சென்று பணியாற்றுவது சற்று சிரமமான காரியம். கவனம் சிதறும் வாய்ப்புகள் உள்ள செயலும் கூட.
ஆனால், விண்டோஸ் இதற்கு ஒரு நல்ல வழி தருகிறது. இரண்டு விண்டோக்களில் ஒரே ஒர்க்புக்கினைத் திறந்து நாம் விரும்பும் இடங்களில் செயல்பட வாய்ப்பு உள்ளது. இது எக்ஸெல் 97 முதல் இன்றைய எக்ஸெல் 2007 வரை கொண்டிருக்கும் ஒரு வசதி ஆகும்.
முதலில் ஒரு விண்டோவில் குறிப்பிட்ட ஒர்க்புக்கினைத் திறந்து செயல்படவும். இதற்கு Window மெனுவில் New Window என்பதில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2007 என்றால், ரிப்பனில் வியூ டேப் திறந்து அதில் விண்டோ குரூப் என்பதில் நியூ விண்டோ தேர்ந்தெடுக்கவும்.
எக்ஸெல் இந்த கட்டளைகளுக்கு, புதிய விண்டோ ஒன்றினைத் திறக்கும். நீங்கள் இரண்டு விண்டோக்களிலும், ஒரே ஒர்க்புக்கின் இரு வேறு இடங்களில் உங்கள் எடிட்டிங் வேலையை மேற்கொள்ளலாம்.
இங்கு ஒன்றை நீங்கள் கவனிக்கலாம். ஒவ்வொரு விண்டோவின் டைட்டில் பாரிலும், ஒர்க்புக்கின் பெயருடன், விண்டோவின் எண்ணும் காட்டப்படும்.
Book1:1 மற்றும் Book1:2 என அவை இருக்கும். இதே முறையில் தான் விண்டோவின் மெனு மற்றும் டாஸ்க் பாரில் காட்டப்படும். ஒவ்வொரு விண்டோவும், அதே ஒர்க்புக்கின் இரு வேறு தோற்றங்களைக் காட்டுகின்றன. ஒன்றில் ஏற்படுத்தப்படும் மாற்றம் அடுத்த விண்டோவிலும் ஏற்படுத்தப்படும். எனவே மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை இரண்டிலும் ஏற்படுத்திப் பின்னர், சேவ் செய்து ஒரே ஒர்க்புக்காகப் பார்க்கலாம்.
Shift+F11- புதிய ஒர்க் ஷீட்
எக்ஸெல் ஒர்க்புக்கில் புதிய ஒர்க் ஷீட் ஒன்றை இணைப்பது சில சமயம் பல இடங்களில் இழுபறி வேலை போல் இருக்கலாம். பல மெனுக்களில் சென்று அவற்றை இழுத்துப் பின் இன்ஸெர்ட் தேர்ந்தெடுப்பது நேரம் இழுக்கும் வேலையாக இருக்கலாம். இவற்றைத் தவிர்க்க ஒரு சிறிய ஷார்ட் கட் கீ உள்ளது. அதுதான் Shift+F11. இந்த இரண்டையும் அழுத்தினால் அப்போது இருக்கும் ஒர்க் ஷீட்டிற்கு முன் புதிய ஒர்க்ஷீட் ஒன்று இணைக்கப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக