வெள்ளி, 2 ஜனவரி, 2015

உங்களை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய 15 விஷயங்கள்!!!

கொஞ்சமாக யோசித்து, வேகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் நாம் பயன்படுத்தும் பொருட்களின் விவரத்தைப் பற்றி சரியாக தெரிந்து கொள்வதில்லை; அது மருந்துகளாகட்டும், உணவு பொருட்களாகட்டும் அல்லது கருத்துக்களாகட்டும், அதை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள நமக்கு நேரமும் இருப்பதில்லை, அக்கறையும் இருப்பதில்லை. அப்படி நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய சில விஷயங்கள் நமக்கு தெரியாமலேயே நமக்கு பேராபத்துக்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.



அப்படிப்பட்ட சில விஷயங்கள் மிகவும் ஆபத்தானதாய் இருப்பதால், அதனால் நமக்கு ஏற்படும் தாக்கங்களின் அளவை விவரிக்க முடியாத அளவில் உள்ளது. இதில் பெரிய சோகம் என்னவென்றால் இதைப் பற்றி நமக்கு எதுவுமே தெரிவதில்லை. அதிகப்படியான கதிர்வீச்சு, நுண்ணலை போன்ற பல தீமையான விஷயங்களை நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் கொண்டுள்ளது. இவைகள் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கிறது. அவைகளைப் பற்றி தெரிந்து கொண்டு உஷாராக இருங்கள் நண்பர்களே!

உப்பு: உப்பு அல்லது சோடியம், இதய நோய்கள் மற்றும் வாதம் ஏற்படும் இடர்பாட்டை அதிகரிக்கும் என்பது நன்கு அறியப்பட்ட ஒன்றே. உலகத்தில் உள்ள மற்ற பகுதிகளை விட இந்தியாவில் சராசாரிக்கும் அதிகமான அளவில் உப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி நாம் கூடுதலாக பயன்படுத்தும் உப்பினால், அந்த உணவே நமக்கு கொஞ்சம் கொஞ்சமாக விஷமாக மாறி வருகிறது.

கைப்பேசிகள்: கைப்பேசியின் பயன்பாடு அதிகரித்துள்ள இன்றைய கால கட்டத்தில், ரேடியோ அதிர்வெண்களில் கதிரியக்க மாசுக்கள் உள்ளதாக ஆய்வுகள் கூறியுள்ளன. இது சில வகையான புற்றுநோய்களை உண்டாக்கும். அதனால் கைப்பேசிகளை எப்போதும் பேண்ட் பாக்கெட்டில் வைப்பதை தவிர்க்கவும். வேண்டுமானால் கைப்பேசிக்கு கதிர்வீச்சு தடுப்பை வாங்கவும். இருப்பினும் இதன் திறனைப் பற்றி விவாதங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. Show Thumbnail

உருளைக்கிழங்கு சிப்ஸ்: பொறித்த உருளைக்கிழங்கு சிப்ஸ் குடல், மார்பகம், சிறுநீர்ப்பை மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களை உண்டாக்கலாம். இதுப்போக சருமத்தில் பாதிப்பு மற்றும் தமனிகளில் அடைப்புகளும் ஏற்படும்.

வெள்ளை பிரட்: பாஸ்தாவுடன் சேர்த்த வெள்ளை பிரட் மற்றும் செறிவூட்டப்பட்ட கோதுமை மாவால் செய்யப்பட்ட எந்த ஒரு உணவானாலும் சரி, இரத்தக் கொதிப்பை அவைகள் அதிகரிக்கும். காலப்போக்கில் டைப் 2 சர்க்கரை நோய், இதய குழலிய நோய்கள் மற்றும் கீல்வாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். நல்லது என நினைக்கும் விஷயமெல்லாம் கெட்டதாக உள்ளதல்லவா?

வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காயில் உள்ள கசப்புத் தன்மைக்கு காரணம் அதிலுள்ள குகுர்பிடசின்ஸ் எனப்படும் நச்சுப் பொருளாகும். வெள்ளரிக்காயின் இரு பக்க நுனிகளை வெட்டுவதால், வெள்ளரிக்காயின் மற்ற பகுதி குகுர்பிடசின்ஸால் விஷமாக்கப்படுவது குறையும். அதை அப்படியே சாப்பிடுவதால் அனைத்து வகையான வயிற்று புழுக்கள் மற்றும் சுகவீனங்களும் ஏற்படும்.

உட்கார்வது: ஆய்வுகளின் படி, ஒரு நாளில் தொடர்ச்சியாக 3 மணிநேரத்திற்கு மேல் அமர்ந்திருந்தால், பெரிய அளவிலான ஆரோக்கிய இடர்பாடுகள் ஏற்படும். உறுப்புகளின் பாதிப்பு, தாமதமாகும் எதிர்வினைகள், தசை சீரழிவு, ஏன் மரணம் ஏற்படக்கூடிய அளவில் பாதிப்புகள் ஏற்படலாம்.

தூக்கம்: அதிகமாக தூங்கினால் உடல் எடை அதிகரிக்கும். தினமும் இரவில் 7-8 மணிநேரம் தூங்குபவர்களை விட, 9 மணிநேரத்திற்கு மேல் தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் இடர்பாடு 41% அதிகமாக உள்ளது என தூக்கத்தைப் பற்றிய ஆய்வுகள் கூறியுள்ளது.

சமையலறை மேடை: சமையலறை கிரானைட் மேடை சராசரி அளவை விட அதிகளவிலான ரேடானை வெளியிடுகிறது. ரேடான் வெளிப்பாடுக்கும் புற்றுநோய்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பயந்து விடாதீர்கள். இதனால் ஏற்படும் தாக்கத்தினால் நீங்கள் சாவதற்கு 100 வருடங்கள் ஆகும். அதனால் இது மிகவும் மெதுவாக கொல்லும் விஷயங்களில் ஒன்றாகும்.

சோடா பானங்கள்: குளிர் பானத்தில் அனைத்து விதமான செயற்கை உணவு சாயங்களும், பதப்பொருட்களும் (BVO - ப்ராமினேட்டட் வெஜிடபிள் ஆயில் போன்றவைகள்) உள்ளது. இது உங்கள் எடை, பற்கள், சருமம், இரத்தத்தில் உள்ள சர்க்கரை போன்றவைகளுக்கும் ஆபத்தே.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்: உங்கள் மனம் விரும்பும் உணவுகளான ஸ்பைசி சலாமி துண்டுகள், காக்டைல் சாசேஜ்கள், பன்றி இறைச்சி போன்றவைகள் அனைத்திலும் பதப்பொருட்கள் மற்றும் சேர்க்கைப் பொருட்கள் அடங்கியுள்ளது. இதய நோய், புற்றுநோய், குழந்தைகளின் கற்கும் திறனில் பாதிப்பு என பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கு இது காரணமாக உள்ளது.

டூத் பேஸ்ட்: நாம் பயன்படுத்தும் பல டூத் பேஸ்ட்களில் ட்ரைக்ளோசன் எனப்படும் ரசாயனம் இருப்பது சமீபத்தில் தான் கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த ரசாயனத்தைப் பற்றி சரியாக தெரியவில்லை என்றாலும் கூட இது நரம்பியல் மற்றும் இதய பிரச்சனைகள் மற்றும் மார்பக புற்றுநோயை உண்டாக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஏர் ஃப்ரெஷ்னர்: ஏர் ஃப்ரெஷ்னர் டப்பாவில் அஸ்பர்டேம், நியோடேம் மற்றும் இதர ஆபத்தான ரசாயனங்கள் உள்ளது. இவைகள் இரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் மற்றும் இதய குழலிய நோய்கள் என பல விதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

பச்சைப் பால்: பச்சைப் பாலில் போவைன் க்ரோத் ஹார்மோன் என்ற ரசாயனம் உள்ளது. இது மாடுகளில் பாலின் வரத்தை அதிகரிக்க உதவும் ஒரு ரசாயனம். அடிப்படையில் புற்றுநோய், கீல்வாதம் மற்றும் தீவிரமான மைக்ரைன்களை ஏற்படுத்தும் BGH.

நாப்த்தலின் உருண்டைகள்: நாப்த்தலின் உருண்டைகளில் நச்சுமிக்க ரசாயனங்கள் உள்ளது. குறைந்த அளவில் இருக்கும் போது, மயக்கம் மற்றும் குமட்டல் போன்றவைகளை இது ஏற்படுத்தும். இவைகள் உங்கள் இரத்தத்தில் கலந்து புற்றுநோயை ஏற்படுத்தும் என கருதப்படுவதால் சில நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.

மைக்ரோவேவ் ஓவன்கள்: இவைகள் சமையலில் வேகமான தீர்வுகளை அளித்து வருகிறது. ஆனால் நாம் பார்க்கப் போவது அதிலிருந்து ஏற்படும் கதிர்வீச்சு கசிவை பற்றி. இதனால் பிறப்பு குறைபாடு, புற்றுநோய் மற்றும் வலுவிழந்த நோய் எதிர்ப்பு சக்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மைக்ரோவேவ் செய்யப்பட்ட உணவுகள் உங்கள் இரத்த கொதிப்பை அதிகரிக்கும்.

Thatstamil


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல