அரிய குறைபாடான இருபக்க முகப்பிளவு மற்றும் இரு கண்களும் பாதிக்கப்பட்ட 18 மாத பாகிஸ்தான் குழந்தைக்கு வெற்றிகரமாக சென்னையில் உள்ள பாலாஜி பல் மற்றும் முகச்சீரமைப்பு மருத்துவமனையில் மறுவாழ்வு அளிக்கப்பட்டது.
கண், கண்ணைச்சுற்றியுள்ள எலும்புகள் உள்ளிட்ட முக எலும்பு சரிவர இணையாததால் முகப்பிளவுகள் ஏற்படும். இவ்வகைக்குறைப்பாடு பெரும்பாலும் மிக அரிது. அதாவது இலட்சத்தில் ஒரு குழந்தை இவ்வகைக் குறைப்பாட்டினால் பாதிக்கப்படும். இக் குழந்தைகள் உணவு உட்கொள்ளவும், மூச்சு விடவும் பேசவும், சிரமப்படுவார்கள். இச் சிறுவனின் பெயர் நோமன். நோமனின் பெற்றோர்அர்ஷத் அலி ஒரு விவசாயி, திருமதி ரசியா ஒரு குடும்பத்தலைவி.
இவர்களிடம் நோமனின் குறைப்பாட்டை சரி செய்ய போதுமான பண வசதி இல்லை. இத்தகைய குறைப்பாடுகள் சமுதாயத்தில் இக்குடும்பத்திற்கு ஒரு தாழ்வு மனப்பான்மையையும், குற்ற உணர்வையும் ஏற்படுத்தி தந்தது. இக் குறைப்பாட்டினை சரி செய்ய மருத்துவர்கள் தயங்கினர். இத் தேடலில் தென் ஆசிய பசுபிக் பிராந்திய பல் மருத்துவ சம்மேளனத்தின் தலைவர் மற்றும் பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஆஸிப் ஆரியனின் உதவியை நாடினர்.
பல்வேறு கலந்தாலோசனைக்குப்பின்னர் ,அக் குழந்தையை சென்னையைச் சேர்ந்த பிரபல அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர். எஸ்.எம்.பாலாஜியிடம் உதவி கேட்டு பரிந்துரை செய்தார். இந்தியாவிற்கு பாகிஸ்தான் குழந்தையை சிகிச்சைக்காக கொண்டு வருவது மிகவும் சிரமமான காரியம், டாக்டர் எஸ்.எம்.பாலாஜி அதை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு பல மட்டங்களில் உள்ள பிரச்சினைகளை சரி செய்து அக் குழந்தைக்கு புனர் வாழ்வு அளிக்க முடிவு செய்தார்.
டாக்டர் பாலாஜி , அச்சிறுவனின் நிலைக்கண்டு மிகவும் வருத்தப்பட்டு,உடனே ஸ்கேன் உதவியுடன் முகப்பிளவு அளவின் மதிப்பீடு மற்றும் சிறுவனின் பிறப்பிலேயே உருக்குழைந்த இடது கண் மற்றும் வலது கண் பார்வை, கண் இமைகள் அதன் விளைவாக கண்ணைச்சுற்றியுள்ள எலும்புகள் தன்மைகளை ஆராய்ந்து, அறுவைச்சிகிச்சை செய்ய திட்டமிட்டார்.
இடது கண் பார்வையை முற்றிலுமாக இழந்த நிலையில் வலது கண்ணில் 40வீதம் பார்வை திறனேயிருந்தது. இடது கண்ணில் செயற்கைக் கண் மற்றும் வலது கண் பார்வை மற்றும் கண் இமைகளை சரி செய்ய திட்டமிட்டார். மேலும் அச்சிறுவனின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.
டாக்டர் பாலாஜி , உடனடியாக இருபக்க உதடு பிளவை சீரமைத்து கீழ் உதடு போல் மேல் உதட்டையும் சீரமைத்து வாய் பகுதியை உருவாக்கி ,அச் சிறுவன் உணவு உட்கொள்ள மற்றும் அவனின் முகத்தோற்றத்தை சரிசெய்து, மேலும் அச்சிறுவனின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்ததை, அதி நவீன முறைப்படி ,பாதிக்கப்பட்ட கண்ணிற்கும் மூக்கிற்கும் இடையே கண்ணீர் செல்லும் குழாய் நீக்கப்பட்டு புதிய குழாய் ஒன்றை பொருத்தி புதிய பாதையை உருவாக்கி அக்குறைப்பாட்டினை சீரமைத்தார்.
கூடுதலாக டாக்டர் பாலாஜி அச்சிறுவனின் வலது கண் பார்வையை காப்பாற்ற, பிறப்பிலேயே உருக்குலைந்த இடது கண்ணில் செயற்கை கண் பொருத்தி, அவனது முகத்தோற்றத்தை மாற்றி , சமுதாயத்தில் வாழ்வதற்கான வழிவகுத்தார்.
இச்செயல்பாட்டினால் அறுவை சிகிச்சையின் மூலம் வலது கண்ணில் பார்வையை மீட்டு, இடது கண்ணில் செயற்கை கண் பொருத்தி, நோமனின் முகத்தோற்றத்தை அழகாக்கி உணவு உடகொள்ள மற்றும் மூச்சு நன்றாக விடவும் ஏதுவாக சீரமைத்தார். நோமனின் முழுமையான முகத்தோற்றத்தை கண்டு அவனது பெற்றோர் மனமகிழ்ச்சியடைந்தனர். பிறந்தது முதல் குழந்தையின் முகத்தோற்றத்தைக் கண்டு வருந்திய பெற்றோர், தங்களின் குழந்தை யின் மறுகட்டமைப்பு செய்த முகத்தை கண்டு மகிழ்ந்து நன்றி தெரிவித்தனர்.

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக