ராம பிரான் எப்படி தன் அவதாரத்தை முடித்தார் என்பதை நாம் அனைவருமே அறிவோம். ஆனால் அவரின் நம்பிக்கைக்கு பாத்திரமான, மிகவும் ஆதரவாக விளங்கிய அவரின் சகோதரனான லக்ஷ்மணன் எப்படி தன் முடிவை சந்தித்தார் என்பதை நீங்கள் அறிவீர்களா? லக்ஷ்மணனை கொல்ல சொல்லி ராமபிரான் கட்டளையிட்டார் என்பதை அறிந்தீர்கள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு அதிர்ச்சியாக தான் இருக்கும்.
இந்திய புராணம் என்பது கண்கவரும் மர்மங்களை கொண்ட மிகப்பெரிய உலகமாகும். இதில் ராமாயணமும் மகாபாரதமும் இரண்டு முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான சமயத்திரு நூல்களாகும். இதனை பல அறிஞர்கள் தங்களின் கல்விக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். நூல்கள் போக, வாய்வழி மரபுகள் மற்றும் கிராமியவாசிகளாலும் கூட இந்த புராணம் இன்னமும் சுவாரசியத்தை பெற்றுள்ளது. மேலும் இதிலுள்ள கதாப்பாத்திர வெளிப்பாடுகள் அனைவரையும் அதிசயத்தில் வாயை திறக்க வைக்கும்.
அப்படிப்பட்ட ஒரு குறிப்பிட்ட கதை தான், லக்ஷ்மணனுக்கு ராமபிரான் அளித்த மரண தண்டனை. தன் தம்பியான லக்ஷ்மணனை அதிகமாக நேசித்த ராமபிரான் தான் அவரின் மரணத்திற்கு பின்னணியாக இருந்தார் என்பது, ராமாயணம் அறிந்த அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியாகவே இருக்கும். இந்த துர்ச்சம்பவம் நடக்க காரணமாக இருந்த நிகழ்வுகள் மற்றும் ராமபிரான் தன் தம்பியான லஷ்மணனை இப்படி தீவிரமாக தண்டித்ததைப் பற்றி தெரிந்து கொள்ளவும் தொடர்ந்து படியுங்கள்.
வசிஷ்டரின் வலியுறுத்தல்: ராவணனை வென்ற பிறகு ராமபிரான் அயோத்யாவிற்கு திரும்பினார். ஒரு அரசனாக தன் கடமையை நிறைவேற்ற தன் மனைவியான சீதாவை அவர் பிரிந்தார். ஒரு நாள் ராமரின் குருவான வசிஷ்டர் அவரை சந்திக்க வந்தார். அவர்கள் இருவரையும் யாரும் தொந்தரவு செய்யாதபடி, இருவரும் தனியாக பேச வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
கடுமையான தண்டனை: முழுமையான அந்தரங்கத்தை வசிஷ்டர் வலியுறுத்தியதால், அந்த அறையின் கதவுகளை பாதுகாக்குமாறு லக்ஷ்மணனிடம் கூறினார். தன் அனுமதி இல்லாமல் அந்த அறைக்குள் நுழைய முற்படுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
துர்வாசரின் வருகை: கதவுகளை பாதுகாக்க லக்ஷ்மணன் நின்று கொண்டிருந்த போது, துர்வாச ரிஷி அங்கே வந்தார். தன்னுடைய முன் கோபம் மற்றும் சாபங்களுக்கு நன்கு அறியப்பட்டவர் துர்வாசா. ராமரை சந்திப்பதற்காக தான் வந்திருப்பதாகவும் அதனை ராமரிடம் தெரிவிக்குமாறும் லக்ஷ்மணனிடம் கேட்டுக் கொண்டார். அவரை சமாதானப்படுத்தி காத்திருக்க கேட்டுக் கொண்டார். கடும் கோபம் கொண்ட துர்வாசர், ராமரை பார்க்க தன்னை அனுமதிக்கவில்லை என்றால் அயோத்யா மக்கள் அனைவரும் இறந்து விட சாபம் அளித்து விடுவதாக லஷ்மணனை மிரட்டினார்.
லக்ஷ்மனரின் தயக்கம்: துர்வாசரின் வார்த்தைகளை கேட்ட லக்ஷ்மணன், ராமரின் சந்திப்பை இடையூறு செய்து மரணத்தை சந்திக்க வேண்டுமா அல்லது அயோத்யா மக்களை அவதிக்குள்ளாக்க வேண்டுமா என குழப்பமடைந்தார். அதனால் தன் உயிரை தியாகம் செய்ய நினைத்த அவர், ராமபிரானின் அறைக்குள் நுழைந்தார். துர்வாசரின் வருகையை ராமபிரானிடம் தெரிவித்தார். லக்ஷ்மணன் மரண தண்டனையை தழுவ வேண்டுமே என மனம் உடைந்தார் ராமர்.
லக்ஷ்மணனின் சோகமான முடிவு: தான் அளிக்கும் சொல்லுக்காக நன்றாக அறியப்பட்டவர் ராமர். அதனால் தான் கூறியதை போல் லக்ஷ்மணனுக்கு மரண தண்டனை நிறைவேற்றினார். அதனால் அந்த தண்டனையை பெற்ற லக்ஷ்மணன் தன் முடிவை அடைந்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக