Eyeing it up: Woman briefly checks for onlookers before grabbing the TV
கொஸ்டாரிக்காவிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பெண்ணொருவர் தொலைக்காட்சி பெட்டியொன்றை திருடி தனது பாவாடைக்குள் வைத்துக்கொண்டு வெளியேறும் காட்சி அடங்கிய வீடியோவை அந்நாட்டு பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
Up to no good: The woman straddles the TV as her accomplice stands by
இப்பெண் 13 விநாடிகளில் தொலைக்காட்சி பெட்டியொன்றை திருடிச் சென்றுள்ளமை வர்த்தக நிலைய ஊழியர்களையும் அதிகாரிகளையும் வியப்பிலாழ்த்தி யுள்ளது.இப்பெண் நீண்ட ஆடையொன்றை அணிந்திருந்தார். தட்டையான தொலைக்காட்சிப் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு மற்றொரு பெண்ணுடன் வந்த அப்பெண், தொலைக்காட்சிப் பெட்டியொன்றை எடுத்து தனது ஆடைக்குள் ஒளித்துக்கொண்டு எதுவும் நடக்காததைப் போல் அங்கிருந்து வெளியேறும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்றதாக கூறப்படும் இத்திருட்டில் சம்பந்தப்பட்ட பெண் யார் என்பது இனங்காணப்படவில்லை.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான வீடியோவை வெளியிட்ட கொஸ்டாரிக்கா பொலிஸார், அப்பெண்ணை கண்டறிதற்கு உதவுமாறு பொதுமக்களை கோரியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக