வியாழன், 1 ஜனவரி, 2015

அமெரிக்காவின் குறியில் அன்று பிரபாகரன். இன்று மகிந்த ராஜபக்ஸ

புலிகளை அழித்த அமெரிக்காவும் இந்தியாவும்தான் இப்பொழுது மகிந்த ராஜபக்ஷவையும் ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு முயற்சிக்கிறன.

இது ஒன்றும் ரகசியமாக விடயம் அல்ல.



அப்பொழுதும் இப்பொழுதும் வெளிச்சக்திகளுக்கு ஆதரவளித்த தமிழ்த்தலைமைகள் - தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கட்சிகள் - இப்பொழுதும் இதற்கு ஒத்துழைக்கின்றன.

இதுதான் வரலாற்றின் துயரமும் வேட்கக்கேடுமாகும்.

அப்பொழுது பிரபாகரனை ஒழிப்பதற்காக மகிந்த ராஜபக்ஷவைப் பயன்படுத்திய இதே வல்லரசுகள், மகிந்த ராஜபக்ஷவை அகற்றவதற்காக மைத்திரியைப் பயன்படுத்துகின்றன.

இது ஒன்றும் புதிய விசயம் அல்ல. வரலாற்றில் இப்படித்தான் காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

மற்றவர்கள் கையாளக் கடினமானவர் பிரபாகரன்.

மகிந்த ராஜபக்ஷவும் அப்படியான ஒருவரே.

பிரபாகரனை வளைத்து அவருடைய இடுப்பில் இருக்கும் துப்பாக்கியையும் அவர் அணிந்திருக்கும் புலிச் சீருடையையும் களைந்து, வெள்ளைச் சட்டை போட்டு மிதவாத – ஜனநாயக – அரசியலுக்குப் பயிற்றுவிக்க முயற்சித்தது அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம்.

ஆனால், புலி புல்லைத்தின்னாது என்று பிடிவாதமாகவே மறுத்து விட்டார் பிரபாகரன்.

பிரபாகரனுடைய மேற்கு நாட்டுப் பிரதிநிதிகள் எவ்வளவோ வாதாடியும் அவர் தன்னுடைய பிடியைக் கைவிடத்தயாராக இருக்கவில்லை.

அதனால் மேற்குலகம் அவரைக் களத்திலிருந்து அகற்ற முனைந்தது.

அதைப்போல மகிந்த ராஜபக்ஷவும் இலங்கையை மேற்கின் ஈர்ப்பிலிருந்து மீட்டு, ஆசிய மையக் கூட்டில் சீனாவின் ஆதரவோடு ஒரு சுயசார்புப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முயற்சிக்கிறார்.

மேற்கின் ஈர்ப்பு விசைக்கும் அதன் நலனுக்கும் அவர் நெகிழ்ந்து கொடுக்க விரும்பவில்லை.

ஆனால் அமெரிக்கா இதை லேசில் விட்டு விடுமா?

எத்தனை தடவை தோற்றாலும் சற்றும் சலிக்காத விக்கிரமாதித்தனாக – மகிந்த ராஜபக்ஷவை வீழ்த்துவதற்கு அது தொடர்ந்து முயற்சித்துக் கொண்டேயிருக்கிறது.

அதற்காகவே அது கடந்த தடவை நடந்த ஜனாதிபதித்தேர்தலில் சரத் பொன்சேகாவைக் களமிறக்கியது. அதற்காகவே அது சரத்துக்கும் அந்த அணிக்கும் தாராளமாகப் பணத்தை அள்ளிக் கொட்டியது.

ஆனால், அந்தத் தேர்தலில் அமெரிக்கா தோற்றது. இந்தியாவும்தான்.

இலங்கை மக்கள் விழிப்பாக இருந்து தங்களின் தெரிவாக மகிந்த ராஜபக்ஷவைத் தேர்ந்தனர்.

பிரபாகரனைப்போல நினைத்த மாத்திரத்தில் இந்த அணியினால் மகிந்தவைத் தோற்கடிக்க முடியவில்லை.

ஆனாலும் அது சும்மா இருந்து விடுமா?

இதோ இந்தத் தடவை மீண்டும் அது கடுமையாக முயற்சிக்கிறது.

இதற்காக அது தேர்தல் கண்காணிப்பாளர்கள் முதல் ஊடகங்கள், தொண்டு அமைப்புகள், அரசியற் கட்சிகள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள், நிறுவனங்கள் என்று பல தரப்பையும் வாங்கியிருக்கிறது. அல்லது அவற்றுக்கிடையில் ஊடுருவியிருக்கிறது.

இதற்கு முதலே அது தனக்கு இசைவாகச் சிந்திக்கக் கூடியமாதிரியான கல்வி முறையையும் ஊடகச் சிந்தனை முறையையும் உருவாக்கி விட்டது.

மாற்றம், ஜனநாயகம் என்று சிந்திப்போரின் உலகமும் உளவியலும் இந்த அடிப்படையிலானதே.

எந்த நாட்டிலும் உறுதியான – ஆளமை உள்ள தலைவர்களை அமெரிக்கா அனுமதிக்காது.

இதுதான் அமெரிக்காவின் உலக அரசியல் நெறி.
இதுதான் அமெரிக்காவின் நிலைப்பாடு.
இதுதான் அமெரிக்காவின் கொள்கை.
இதுதான் அமெரிக்காவின் ஜனநாயகம்.

தனக்குச் சேவகம் செய்யக் கூடிய, தன்னை அனுசரிக்கக் கூடிய பொம்மைத் தலைவர்களையே அது விரும்புகிறது.

இது இன்று நேற்று ஏற்பட்ட அமெரிக்க விருப்பமோ, அமெரிக்க நிலைப்பாடோ, அமெரிக்கக் கொள்கையோ அல்ல.
கடந்த பலஆண்டுகளாக தென் அமெரிக்க நாடுகளிலும் அரபு நாடுகளிலும் இதை ஆபிரிக்க நாடுகளிலும் இதைச் செய்து வருகிறது அமெரிக்கா.

இந்த நாடுகளில் ஆளுமை மிக்க தலைவர்கள், தமது நாட்டின் சுய நிலைப்பாட்டுடன் செயற்பட்டால் அவர்களை அழித்து விடும் அமெரிக்கா.

இதற்கு எடுபடுவதுதான் விடுதலையா? அதுதான் ஜனநாயக அரசியலா?

வடபுலத்தான்

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல