முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருக்கு சொந்தமானதென கண்டுபிடிக்கப்பட்ட சிறிய ரக விமானம், தன்னுடையது என திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான சந்திரன் ரட்ணம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தயாரிக்கப்பட்ட இந்த விமானம், இரண்டு முறை மாத்திரமே பறக்கவிடப்பட்ட நிலையில் தன்னிடம் இருந்ததாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ, தன்னிடமிருந்து அந்த விமானத்தைப் பெற்றுக்கொண்டதாகவும் சந்திரன் ரட்ணம் கூறியுள்ளார்.
தற்போது அந்த விமானம் பறக்கக்கூடிய நிலையில் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இரண்டு ஆசனங்களை கொண்ட மேற்படி சிறிய ரக விமானம், நாரஹேன்பிட்டியவில் உள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (13) மீட்கப்பட்டது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சிவில் விமான சேவைகள் அதிகாரசபை, இலங்கையிலுள்ள அனைத்து விமானங்களும் தமது அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறெனினும், இந்த விமானம் இதுவரையில் தமது அதிகாரசபையில் பதிவு செய்யப்படவில்லை என்;றும் பதிவு செய்யப்படாத விமானங்களை பறக்க விடுவது சட்டப்படி குற்றம் எனவும் சிவில் விமான சேவைகள் அதிகாரசபை குறிப்பிட்டது.
இது போன்ற சிறியரக விமானங்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினாலேயே பயன்படுத்தப்பட்டன என்றும் அவற்றைக் கொண்டே அவ்வியக்கத்தினர் குண்டுத் தாக்குதல்களை நடத்தினர் என்றும் அதிகாரசபை மேலும் தெரிவித்தது.
பொருளாதார மத்திய நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த விமானத்துடன் சேர்த்து, வெளிக்கள ஒளிபரப்புக்கு தேவையான உபகரணங்கள் சிலவும் கைப்பற்றப்பட்டதாகவும் அவை தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்தது.

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக