செவ்வாய், 13 ஜனவரி, 2015

பெண்­களின் கர்ப்­பப்­பைக்கு வெளியே கரு தங்­கு­வதன் காரணம் என்ன? (Ectopic Pregnancy)

கர்ப்­பப்­பைக்கு வெளியே கரு தங்­குதல் ஒரு முக்­கிய பிரச்­சினை. கர்ப்பம் தரித்த 100 பெண்­களை எடுத்தால் அதில் ஒரு­வ­ருக்கு இந்­நிலை ஏற்­ப­டு­கின்­றது. கருக்­கட்­டிய முட்டை­யா­னது கர்ப்­பப்­பை­யிற்கு வெளியே தங்கி வள­ரு­வதால் கர்ப்­பப்­பை­யிற்கு வெளி­யே­யான கருத்­த­ரித்தல் நிலை (Ectopic) ஏற்­ப­டு­கின்­றது. இது கூடு­த­லாக கர்ப்­பப்­பையின் இரு புறத்­திலும் காணப்­படும் பலோப்­பியன் குழாய்­களில் ஏற்­ப­டு­கின்­றது. இவ்­வா­றான கரு வள­ரும்­போது வயிற்று வலி­யையும் இரத்தப் போக்­கையும் ஏற்­ப­டுத்­து­கின்­றது. இதற்கு சரி­யான நேரத்தில் துரி­த­மாக சிகிச்­சை­ய­ளிக்­காமல் விடின் இது வெடித்து வயிற்­றினுள் அதி­கூ­டிய இரத்த பெருக்கை ஏற்­ப­டுத்தி கர்ப்­பி­ணித்­தாய்க்கு மயக்­கத்­தையும் மர­ணத்­தையும் ஏற்­ப­டுத்தும். இவ்­வாறு இது ஒரு ஆபத்­தான பிரச்­சி­னை­யாக இருப்­பதால் இது குறித்து மக்கள் அறிந்­தி­ருப்­பது அவ­சியம்.



கர்ப்­பப்­பைக்கு வெளியே கரு தங்கக் காரணம் என்ன?

கருக்­கட்­டிய முட்டை சாதா­ரண 4, 5 நாட்­களில் பலோப்­பியன் குழாய் வழி­யாக சூல­கத்­தி­லி­ருந்து கர்ப்­பப்­பையை நோக்கி பய­ணிக்கும் பின்னர் இக்­கரு கர்ப்­பப்­பை­யினுள் தங்கி வள­ரு­வது வழக்கம். ஆனால் பலோப்­பியன் குழாய்­களில் அடைப்­புக்­களோ அல்­லது சாதா­ரண சீர்­கு­லைந்த நிலை­களோ இருப்பின் இக்­க­ருக்­கட்­டிய முட்டை பலோப்­பியன் குழா­யி­னுள்­ளேயே தங்கி வளர ஆரம்­பிக்கும். இவ்­வாறு பலோப்­பியன் குழாய்­களில் அடைப்­புக்­களும் அசா­தா­ரண தன்­மை­களும் ஏற்­படக் காரணம் அடி­வ­யிற்­றி­லேற்­பட்ட கிரு­மித்­தொற்றும் மற்றும் எண்­டோ­மெற்­றி­யோசிஸ் போன்ற நிலை­களும் பொறுப்­பாக இருக்கும்.

கர்ப்­பப்­பைக்கு வெளியே கரு தங்கும் எக்­ரோபித் (Ectopic) நிலை எவ்­வா­றான வழி­களில் கண்­ட­றி­யப்­படும்?

கர்ப்­பப்­பைக்கு வெளியே கரு தங்­கு­வ­தாக சந்­தே­கித்தால் முதலில் அப்­பெண்­ணிற்கு கருத்­த­ரித்­தலை உறு­திப்­ப­டுத்தும் சிறு­நீர்­ப­ரி­சோ­த­னையும் ஸ்கான் பரி­சோ­த­னையும் மேற்­கொள்­ளப்­படும். இந்த ஸ்கான் பரி­சோ­த­னையில் கருத்­த­ரித்தல் உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட பெண்­ணிற்கு கர்ப்­பப்­பை­யா­னது வெறு­மை­யாக இருப்பின் கரு வெளியே எங்­கேயோ தங்­கி­யுள்­ள­தாக சந்­தே­கிக்க வேண்டும். பின்னர் அவரின் நோய் அறி­கு­றி­களின் உக்­கி­ரத்தைப் பொறுத்து மேற்­கொண்டு அவ­ருக்­கு­ரிய சிகிச்சை தீர்­மா­னிக்­கப்­படும். அதா­வது நோய் அறி­கு­றிகள் தீவி­ர­மில்­லாது இருப்பின் மேற்­கொண்டு ஒழுங்­கான இரத்த பரி­சோ­த­னையில் HCG இன் அள­வு­களைக் கணிப்­பி­டு­வதன் மூலம் இந்­நி­லையை உறுதிப்­ப­டுத்­தலாம். ஆனால் நோய் அறி­கு­றிகள் தீவி­ர­மா­கவும் உடல் நிலை ஆபத்­தான நிலை­யிலும் இருப்பின் உட­னடி சத்­திர சிகிச்­சைகள் இதற்கு தீர்­வாக அமையும்.

கர்­பப்­பைக்கு வெளியே கரு தங்­கும்­போது எவ்­வா­றான சிகிச்­சைகள் மேற்­கொள்­ளப்­படும்?

கர்ப்­பப்­பைக்கு வெளியே கரு தங்­கி­யவர் எந்த நிலையில் வைத்­தி­ய­சா­லைக்கு வரு­கின்றார் என்­பது முக்­கியம். அதா­வது பலோப்­பியன் குழாயில் தங்­கிய கரு வெடிப்­ப­தற்கு முன்­னரா? அல்­லது வெடித்து வயிற்­றினுள் அதி­க­ளவு குரு­திப்­பெ­ருக்கு ஏற்­பட்டு வரு­கி­றாரா? என்­ப­துதான் சிகிச்சை முறை­களைத் தீர்­மா­னிக்கும்.

பலோப்­பியன் குழாயில் தங்­கிய கரு வெடிப்­ப­தற்கு முன்னர் வந்தால் இவற்றை சில­வே­ளை­களில் இவற்றின் பருமன் மிக சிறி­தாக இருப்பின் Methotrexate என்ற ஊசி மூலம் சிகிச்சை வழங்­கப்­படும். ஆனால் இந்த ஊசி மூலம் வழங்­கப்­படும் சிகிச்­சைக்கு பெண்கள் தொடர்ச்­சி­யாக வைத்­தி­ய­சா­லைக்கு வந்து இரத்­தத்தில் HCG இன் அளவைப் பார்ப்­பது அவ­சியம். அத்­துடன் இம்­முறை சில­வே­ளை­களில் வெற்­றி­ய­ளிப்­ப­து­மில்லை. இவ்­வாறு வெடிக்கும் முன்னர் வரும் பலோப்­பியன் குழாயில் தங்­கிய கரு­விற்கு சிறந்த சிகிச்­சை­யாக வயிற்றில் சிறு துளை போடப்­பட்டு செய்­யப்­படும் லப்­பி­ரஸ்­கோப்பி (Laparoscopy) சிகிச்சை மூலம் மேற்­கொள்­ளப்­படும். இதன்­போது பாதிக்­கப்­பட்ட அந்த பலோப்­பியன் குழாயை கரு­வுடன் சேர்த்து அகற்ற முடியும். சில­வே­ளை­களில் பெண்ணில் காணப்­படும் இரண்டு பலோப்­பியன் குழாய்­களில் மற்­றைய குழாயும் ஆலோக்­கி­ய­மற்ற குழா­யாக தோற்­ற­ம­ளிப்பின் இப்­பா­திக்­கப்­பட்ட குழாயை முற்­றாக அகற்­றாது அதன் கருவை மட்டும் அகற்றி அந்த குழாயை தங்க வைப்­பது அவ­சி­ய­மா­கின்­றது.இவ்­வாறு பலோப்­பியன் குழாயில் கரு தங்­கி­ய­வர்கள் ஆபத்­தான நிலையில் குழாய் வெடித்து அதி­க­ள­வான குரு­திப்­பெ­ருக்கை வயிற்­றினுள் ஏற்­ப­டுத்தி வரு­கின்­ற­போது இவர்­க­ளுக்கு லப்­பி­ரஸ்­கோப்பி சிகிச்சை மேற்­கொள்ள முடி­யாது.

இதற்கு மாறாக வயிற்றைப் பெரி­த­ளவில் வெட்டி திறந்து செய்­யப்­படும் லப்­பி­ரட்­டமி (Laparotomy) முறை மூலமே சிகிச்­சை­ய­ளிக்க வேண்டும். இதன்­போது வெடித்த குழாயை முற்­றாக அகற்ற வேண்டும். அத்­துடன் அவர்­க­ளது குருதி இழப்பை ஈடு செய்ய குருதி ஏற்ற வேண்­டிய நிலை­களும் உள்­ளது.

கர்ப்­பப்­பைக்கு வெளியே கரு தங்கி சிகிச்சைகள் எடுத்­தவர் மீண்டும் கருத்­த­ரிக்க முடி­யுமா?

கர்ப்­பப்­பைக்கு வெளியே கரு தங்கி சிகிச்­சைகள் பெற்­ற­வர்கள் மூன்று மாத காலம் ஓய்­வெ­டுத்து தமது உடல் நிலையை திட­மாக்­கிய பின்னர் இயற்­கை­யாக கருத்­த­ரிக்க முடியும். அதா­வது இவர்­க­ளுக்கு ஒரு பலோப்­பியன் குழாய் அகற்­றப்­பட்டு இருந்­தாலும் மற்­றைய பலோப்­பியன் குழாய் இருப்­ப­தனால் அவர்­களால் எத்­தனை முறை வேண்­டு­மா­னாலும் இயற்­கை­யாக கருத்­த­ரிக்க முடியும். அவ்­வாறு கருத்­த­ரித்­த­வர்கள் சாதா­ரண கர்ப்ப காலத்தை தொடர்ந்து சாதா­ரண பிர­ச­வத்தை மேற்­கொள்ள முடியும்.

பலோப்­பியன் குழாயில் கருத்­தங்­கி­ய­வர்­க­ளுக்கு மீண்டும் இந்­நிலை ஏற்­பட வாய்ப்­புள்­ளதா ?

பலோப்­பியன் குழாயில் கரு தங்கி சிகிச்சை பெற்­ற­வர்கள் மீண்டும் கருத்­த­ரிக்­கும் போது மீண்டும் அவ்­வாறு நடை­பெற ஒரு சிறிய வாய்ப்­புள்­ளது. ஆகையால் இவ்­வா­றா­ன­வர்கள் மீண்டும் கருத்­த­ரித்­த­வுடன் ஒரு வைத்­திய நிபு­ணரை சந்­தித்து ஸ்கான் பரி­சோ­தனை மூலம் கர்ப்­பப்­பைக்கு உள்­ளேயா? வெளி­யேயா? தங்­கி­யுள்­ளது என்­பதை உறு­திப்­ப­டுத்த வேண்டும்.

கர்ப்­பப்­பைக்கு வெளியே கரு தங்­குதல் எவ்­வா­றா­ன­வர்­களில் கூடு­த­லாக ஏற்­ப­டு­கின்­றது?

அடி­வ­யிற்றில் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­ட­வர்­களில் பலோப்­பியன் குழாய்கள் அசா­தா­ரண தன்­மையை காட்­டு­வதால் இந்­நிலை கூடு­த­லாக ஏற்­பட வாய்ப்­புள்­ளது. பலோப்­பியன் குழாய் அடைப்­பு­க­ளுக்­காக சிகிச்­சைகள் மேற்­கொண்­ட­வர்கள் மற்றும் கருத்­தடை சத்­திர சிகிச்­சையை மீண்டும் குழந்தை வேண்­டு­மென்­ப­தற்­காக மறு­சீ­ர­மைத்­த­வர்கள் என்­ப­வர்­களில் கூடு­த­லாக ஏற்­பட வாய்ப்­புள்­ளது.

ஏற்­க­னவே கடந்த காலங்­களில் கர்ப்­பப்­பைக்கு வெளியே கரு தங்­கி­ய­வர்­களில் மீண்டும் இந்­நிலை ஏற்­பட வாய்ப்­புள்­ளது. ஆனால் இதற்­கான சந்­தர்ப்பம் குறைவு. ஏனெனில் கூடு­த­லா­ன­வர்கள் சாதா­ரண கர்ப்­பக்­கா­லத்­தையும் சாதா­ரண பிர­ச­வத்­தையும் மேற்­கொள்­வதை காணக்கூடியதாகவுள்ளது.

குழந்தைப்பாக்கியம் தாமதமடைபவர்களில் சிகிச்சையின் போது செயற்கை முறைக் கருக்கட்டலை மேற்கொள்கின்றோம். இதன்போது கர்ப்பப்பைக்கு வெளியில் கரு தங்க வாய்ப்புள்ளது. குடும்ப கட்டுப்பாட்டு முறையாக லூப் (Loop) கர்ப்பப்பையினுள் போட்டிருக்கும் சிலரிலும் கர்ப்பப்பைக்கு வெளியில் கரு தங்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, கர்ப்பப்பைக்கு வெளியே கரு தங்குவது ஆரம்ப கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய முக்கிய பிரச்சினை. இதனால் கர்ப்பக்காலத்தில் முதல் 1-2 மாத காலப்பகுதியில் அடி வயிற்று வலி ஏற்பட்டால் வைத்திய ஆலோசனையை நாடுவது இன்றியமையாதது. இதன்போது இதற்கான வாய்ப்புக்களேதும் உள்ளதா? எனப்பார்க்க முடியும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல