ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

கோத்தா முகாம் தொடர்பில் வெளி­யா­கி­யுள்ள தகவல்

நாட்டில் இறுதி யுத்­தத்­தின்­போதும் அதன் பின்­னரும் கடத்­தப்­பட்­ட­வர்கள், காணாமல் போன­வர்­களின் நிலை தொடர்பில் அறிய முடி­யாது அவர்­க­ளது உற­வி­னர்கள் தொடர்ந்தும் தவித்து வரு­கின்­றனர். காணா­மல்­போன தமது உற­வுகள் மீளவும் திரும்பி வரு­வார்கள் என்ற நம்­பிக்­கையில் அந்த மக்கள் நாள்­தோறும் கண்­ணீ­ருடன் வாழ்­நாளை கழித்து வரு­கின்­றனர்.



இவ்­வாறு கடத்­தப்­பட்­டோர் மற்றும் காணா­மல்­போ­னோ­ருக்கு என்ன நடந்­தது என்­பது குறித்து ஆராய்ந்து உரிய தீர்வு வழங்­கப்­ப­ட­வேண்டும் என்ற கோரிக்கை யுத்தம் முடிந்த காலப்­ப­கு­தி­யி­லி­ருந்து எழுந்­தி­ருந்­தது. இறுதி யுத்த காலத்தில் வகை தொகை­யின்றி தமிழ் இளைஞர், யுவ­திகள் கைது­செய்­யப்­பட்­ட­துடன் வெள்ளை வேன்­களிலும் கடத்­தப்­பட்­டனர். இவ்­வாறு கடத்­தப்­பட்­ட­வர்கள் உயி­ருடன் உள்­ளார்­களா? அல்­லது இல்­லையா என்­பது தொடர்­பில்­கூட அறிய முடி­யா­த­நிலை காணப்­ப­டு­கின்­றது.

கடத்­தப்­பட்­ட­வர்கள் மற்றும் காணா­மல்­போ­ன­வர்கள் இர­க­சிய முகாம்­களில் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கலாம் என்று பர­வ­லாக சந்­தே­கங்கள் எழுப்­பப்­பட்டு வந்­தன. ஆனால் அவ்­வா­றான இர­க­சிய முகாம்கள் எதுவும் இல்லை என்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்கம் கூறி வந்­தது. இந்­த­நி­லையில் இர­க­சிய முகாம்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்­றத்தில் சில தக­வல்­களை தெரி­வித்­துள்­ள­துடன் அந்த விவ­காரம் தொடர்பில் பாது­காப்பு அமைச்சு உட­ன­டி­யாக ஆராய வேண்­டு­மென்றும் கோரிக்கை விடுத்­தி­ருக்­கின்­றது.

உலக நடப்­புக்கள் எதுவும் அறி­யப்­ப­டாத வகையில் திரு­கோ­ண­மலை கடற்­படை முகாமில் 35 குடும்­பங்­களும் அதே இடத்தில் கோத்தா முகாம் என்று அழைக்­கப்­ப­டு­கின்ற பிறி­தொரு முகாமில் 700 பேரும் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் இவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்றும் கூட்­ட­மைப்பின் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் பேச்­சா­ள­ரு­மான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

இவ்­வாறு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­வர்கள் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­ட­னரா? அவர்கள் இருக்­கின்­ற­னரா? இல்­லாது செய்­யப்­பட்டு விட்­ட­னரா என்­பது தொடர்பில் பாது­காப்பு அமைச்சு கவனம் செலுத்தி, அங்கு சென்று ஆராய வேண்டும் என்றும் அவர் பாரா­ளு­மன்­றத்தில் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார்.

இத­னை­விட நாட்டில் 20 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்டோர் காணாமல் போயுள்­ளனர். இவ்­வாறு காணா­மல்­போ­னோரைக் கண்­டு­பி­டிப்­ப­தற்­கென நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி ஆணைக்­குழு எத்­த­கைய தக­வல்­களை திரட்­டி­யுள்­ளது என்­ப­தையும் எத்­தனை பேரை கண்­டு­பி­டித்­தது என்ற தக­வல்­க­ளையும் பாரா­ளு­மன்­றத்தில் அறிக்­கை­யாக சமர்ப்­பிக்க வேண்டும் என்றும் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் எம்.பி. கோரி­யி­ருக்­கின்றார் .

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரனின் இந்த தக­வ­லா­னது காணாமல் போனோ­ரது உற­வி­னர்கள் மத்­தியில் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. திரு­கோ­ண­மலை கடற்­படை தளத்­தி­லுள்ள முகாமில் 35 குடும்­பங்­களும் அங்­குள்ள கோத்தா முகாமில் 700 பேரும் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்ததால் அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்ற கேள்வி தற்­போது எழுந்­தி­ருக்­கின்­றது.

நாட்டில் கடத்­தப்­பட்­ட­வர்கள், காணா­மல்­போ­ன­வர்கள் தொடர்பில் விசா­ரணை நடத்­து­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த ஜனா­தி­பதி ஆணைக்­குழு வடக்கு, கிழக்கு உட்­பட பல்­வேறு பகு­தி­க­ளுக்கும் சென்று விசா­ர­ணை நடத்­தி­யுள்­ளது. அந்த ஆணைக்­கு­ழுவின் காலம் தொடர்ந்தும் நீடிக்­கப்­பட்டு வரு­கின்­றது. ஆனால் இது­வரை அந்த ஆணைக்­கு­ழு­வா­னது தனது இடைக்­கால அறிக்­கை­யைக்­கூட சமர்ப்­பிக்­க­வில்லை. இந்­த­நி­லை­யில்தான் ஆணைக்­கு­ழுவின் அறிக்­கை­யினை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­க­வேண்­டி­யதன் அவ­சி­யத்தை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்­றது.

திரு­கோ­ண­மலை கடற்­படைத் தளத்தில் 35 குடும்­பங்கள் மற்றும் 700 பேரும் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­தாக தகவல் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றது. இது­கு­றித்து புதிய அர­சாங்கம் உட­ன­டி­யாக விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்டும். இந்த விவ­காரம் தொடர்பில் உட­ன­டி­யாக பாது­காப்பு அமைச்­சரும் ஜனா­தி­ப­தி­யு­மான மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கவ­னத்­துக்கு கொண்­டு­வ­ரப்­படும் என்று பொது மக்கள் பாது­காப்பு மற்றும் கிறிஸ்­தவ மத விவ­கார அமைச்சர் ஜோன் அம­ர­துங்க பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

கடந்த காலங்­களில் இடம்­பெற்ற படு­கொ­லைகள் மற்றும் காணாமல் போன­வர்கள் தொடர்­பான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கப்­போ­வ­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார். உண்­மை­யி­லேயே திரு­கோ­ண­மலை கடற்­படைத் தளத்தில் உலக நடப்­புக்கள் எதுவும் அறி­யப்­ப­டா­த­வ­கையில் ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்­ட­வர்கள் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தமை பார­தூ­ர­மா­ன­தொரு விட­ய­மாகும். இவ்­வாறு தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருந்­த­வர்­களில் தமது உற­வி­னர்­களும் அடங்­கு­வார்­களா என்று காணா­மல்­போ­ன­வர்­க­ளது உற­வி­னர்கள் ஏங்கித் தவிக்கும் நிலை தற்­போது ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

எனவே, இந்த விவ­காரம் தொடர்பில் பாது­காப்பு அமைச்சு உரிய விசா­ர­ணை­களை உட­ன­டி­யாக ஆரம்­பிக்க வேண்டும். திரு­மலைக் கடற்­படைத் தளத்தில் இவ்­வா­றா­ன­வர்கள் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருந்தால் அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது குறித்து ஆரா­ய­வேண்டும். இவ்­வாறு இர­சிய முகாம்­களை நடத்தி மக்­களை தடுத்து வைத்­தி­ருந்­த­வர்கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும்.

திரு­கோ­ண­மலை கடற்­ப­டைத்­த­ளத்தில் இவ்­வா­றா­ன­வர்கள் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கலாம் என்­பதை பாது­காப்பு அமைச்சின் விசா­ர­ணைகள் மூலம் அறிந்­து­கொள்­ளலாம். 2010ஆம் ஆண்டு தெஹி­வ­ளையில் வைத்து 5 மாண­வர்கள் கடத்திச் செல்­லப்­பட்­டி­ருந்­தனர். இவ்­வாறு கடத்­தப்­பட்ட மாண­வர்கள் திரு­கோ­ண­மலை கடற்­படைத் தளத்தில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக அந்த மாண­வர்­க­ளது பெற்­றோர்­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்­ட­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன. இந்த மாண­வர்கள் ஐவர் மீதான ஆட்­கொ­ணர்வு மனு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் தற்­போது விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றது. இவ்­வி­டயம் குறித்து விசா­ரணை நடத்தி அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு கொழும்பு நீதிவான் நீதி­மன்­றத்­துக்கு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­ட­தை­ய­டுத்து அந்த விசா­ர­ணையும் இடம்­பெ­று­கின்­றது.

தற்­போது திரு­கோ­ண­மலை கடற்­படைத் தளத்தில் 35 குடும்­பங்கள் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­துடன் அங்­குள்ள கோத்தா முகாமில் 700 பேர் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருந்த தக­வ­லா­னது ஐந்து மாண­வர்­களும் அங்கு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­னரா என்ற சந்­தே­கத்தை மேலும் வலுப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தி­ருக்­கி­ன்றது.

இலங்­கையில் இறுதி யுத்­தத்­தின்­போது இடம்­பெற்ற யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்­ளகப் பொறி­முறை ஒன்று அமைக்­கப்­பட்டு அதன் மூலம் விசா­ரணை நடத்­தப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால தலை­மை­யி­லான அர­சாங்கம் தற்­போது ஐ.நா. மனித உரிமைப் பேர­வைக்கு உறு­தி­ய­ளித்­துள்­ளது. இதற்­கி­ணங்க இலங்கை தொடர்­பான ஐ.நா.வின் விசா­ரணை அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­டு­வது எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் வரையில் ஒத்­தி­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

தென்­னா­பி­ரிக்­காவின் உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவைப் போன்ற உள்­ளக விசா­ரணை பொறி­முறைச் செயற்­பாட்டை அர­சாங்கம் முன்­னெ­டுக்­கு­மென்று அமைச்­ச­ர­வையில் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­தி­ருக்­கி­ன்றார். இறுதி யுத்­தத்­தின்­போது இடம்­பெற்ற மனித உரி­மைகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும்போது திருகோணமலை கடற்படைத் தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலும் உரிய வகையில் விசாரிக்கப்பட வேண்டும்.

அரசாங்கமானது பொறுப்புக்கூறும் விடயத்தில் அக்கறை செலுத்தப்படும் என்று உறுதியளித்திருக்கின்றது. கடந்த அரசாங்கமானது உள்ளக விசாரணைகளை உரிய வகையில் முன்னெடுக்காமையால்தான் சர்வதேச விசாரணை இடம்பெற்றது. தற்போது புதிய அரசாங்கத்துக்கு சந்தர்ப்பமொன்று வழங்கப்பட்டி­ருக்கின்றது. எனவே இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியது அரசின் கடமையாகும். நாட்டில் கடத்தப்பட்டு காணாமல்போனவர்கள் தொடர்பான பிரச்சினைக்கும் உரிய தீர்வினைக் காண அரசாங்கம் முன்வரவேண்டும்.

இதன் மூலமே தமது உறவுகளைத் தொலைத்துவிட்டு பரிதவிக்கும் மக்களுக்கு அரசாங்கமானது பதில்கூற முடியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல