இந்தியாவின் மகள் ஆவணப்படம் போலியானது என்று சம்பவத்தன்று நிர்பயாவுடன் பேருந்தில் சென்ற அவரது ஆண் நண்பர் தெரிவித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி நிர்பயா மைனர் உள்பட 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். சம்பவம் நடந்தபோது நிர்பயாவுடன் இருந்த அவரது நண்பர் அவனிந்திரா பாண்டே அந்த 6 பேரால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தார்.
இந்நிலையில் நிர்பயா சம்பவம் பற்றி லெஸ்லீ உட்வின் என்பவர் இந்தியாவின் மகள் என்ற பெயரில் ஆவணப்படத்தை எடுத்துள்ளார். ஆவணப்படத்தில் நிர்பயாவை சீரழித்தவர்களின் பேட்டி உள்ளது. இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது.
ஆவணப்படம் குறித்து அவனிந்திரா கூறுகையில்,
படம் போலியானது. அதை நிர்பயாவின் கோணத்தில் காண்பிக்கவில்லை. உண்மையை மறைத்து பொய்யாக படத்தை எடுத்துள்ளார்கள். அன்று இரவு என்ன நடந்தது என்று எனக்கும் நிர்பயாவுக்கும் மட்டும் தான் தெரியும்.
ஆவணப்படம் உண்மைக்கு புறம்பானது. உணர்ச்சிகளை கேலிக்கூத்தாக்கி நம் நாட்டின் சட்டம் ஒழுங்கை கேள்வி கேட்கும்படி உள்ளது அந்த ஆவணப்படம்.
நம் நாட்டின் இமேஜை ஆவணப்படம் கெடுத்துவிட்டது.
யார் வேண்டுமானாலும் நம் நாட்டு சிறைக்குள் நுழைந்து எந்த குற்றவாளியையும் பேட்டி காணலாம் என்பதை ஆவணப்படம் தெரிவிக்கிறது.
ஆவணப்படத்தில் நடிக்குமாறு என்னை கேட்டார்கள். நான் மறுத்துவிட்டேன். ஆவணப்படங்களுக்கும் சென்சார் போர்டு சான்றிதழ் வழங்க வேண்டும் என்றார்.
நிர்பயா பலாயில் பலாத்கார குற்றவாளி முகேஷ் சிங்குக்கு ரூ. 40,000 பணம் கொடுத்து பேட்டி வாங்கப்பட்டதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இந்தியாவின் மகள் என்ற தலைப்பிலான டாக்குமெண்டரியைத் தயாரித்தவர்கள் இந்தப் பணத்தைக் கொடுத்ததாக நவபாரத் டைம்ஸ் என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் மகள் என்ற பெயரில் 2012ம் ஆண்டு டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்குள்ளக்கப்பட்டு பரிதாபமாக இறந்தவர் நிர்பயா எனப்படும் ஜோதி சி்ங். இவர் குறித்த ஒரு டாக்குமெண்டரியை இங்கிலாந்தைச் சேர்ந்த லெஸ்லி உத்வின் எடுத்துள்ளார். இதற்காக நிர்பயாவின் பெற்றோர், அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், வக்கீல்கள் என சகலரிடமும் அவர் பேட்டி எடுத்துள்ளார்.
அதேபோல டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்பயா பலாத்கார குற்றவாளி முகேஷ் சிங்கிடமும் அவர் பேட்டி எடுத்துள்ளார். இந்தப் பேட்டிக்காக முகேஷ் சிங்குக்கு ரூ. 40,000 பணம் தரப்பட்டதாக தற்போது பரபரப்பு கிளம்பியுள்ளது.
முகேஷ் சிங்கைப் பேட்டி எடுக்க ஆரம்பத்தில் பெரும் தடைகளை சந்தித்துள்ளார் உத்வின். பின்னர் அவருக்கு குல்லார் என்பவர் உதவியுள்ளார். பல்வேறு தடைகளைத் தாண்டி திஹார் சிறை நிர்வாகம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி வாங்கியுள்ளார் உத்வின்.
ஆனால் பேட்டி கொடுக்க தனக்கு ரூ. 2 லட்சம் தர வேண்டும் என்று பேரம் பேசினாராம் முகேஷ் சிங். பேரத்திற்கு இறுதியில் அவர் ரூ. 40,000 பணத்திற்குப் பேட்டி கொடுக்க சம்மதித்தாரா். இதையடுத்து அந்தப் பணம் முகேஷ் சிங் தரப்புக்கு போய்ச் சேர்ந்த பிறகுதான் பேட்டி கொடுக்கவே சம்மதித்தாராம்.
இந்தப் பணத்தை முகேஷ் சிங் குடும்பத்திநரின் கணக்கில் சேர்த்துள்ளதாக நவபாரத் செய்தி கூறுகிறது.
இந்தப் புதிய தகவல் பெரும் சர்ச்சையை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிர்பயா பலாத்கார குற்றவாளி முகேஷ் சிங்குக்கு ரூ. 40,000 கொடுத்து பேட்டி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக