புதன், 25 மார்ச், 2015

இந்தியாவின் பணக்கார தெய்வம்!!!

இந்தியாவின் பணக்கார கோயிலாக அறியப்பட்டு வந்த திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலைப் பின்னுக்கு தள்ளி, கடந்த 2011-ஆம் ஆண்டு ஸ்ரீ பத்மநாபசாமி கோயில் 1 லட்சம் கோடிகளுக்கு மேலான சொத்து மதிப்புடன் நாட்டின் பணக்கார கோயிலாக மாறியது.

கேரளத் தலைநகர் திருவனந்தபுரம் நகரின் மையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பத்மநாபசாமி கோயில், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நிர்வாகத்தின் கீழ் இன்றும் இருந்து வருகிறது.


இங்கு பள்ளிகொண்டிருக்கும் விஷ்ணு பகவான் அனந்த சயன நிலையில் தோற்றமளிப்பதால் 'ஸ்ரீ அனந்த பத்மனாபசுவாமி கோயில்' என்ற பெயரிலும் இது அழைக்கப்படுகிறது.

வரலாறு

நம்மாழ்வாரின் பாடல்களில் பத்மநாபசாமி கோயில் பற்றிய குறிப்புகள் காணப்படுவதால் இந்தக் கோயில் 10-ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு முன்னர் தோன்றியிருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. பின்னர் சேரமான் பெருமான் இக்கோயிலை முதன் முதலில் எழுப்பி, பூஜை முறைகளுக்கும் திருவிழாக்களுக்கும் ஆலய நிர்வாகத்திற்கும் ஏற்பாடுகள் செய்ததாகவும் ஓலைச்சுவடிகள் வாயிலாக அறிய முடிகிறது. 1686-ல், தீப்பிடித்துக் கோயில் அழிந்து விட்டதால், மீண்டும் திருவிதாங்கூர் அரசின் மன்னரான மார்த்தாண்ட வர்மரின் முயற்சியால் 1729-இ அது புதுப்பிக்கப்பட்டது. அச்சமயத்தில்தான் மரத்தாலான மூல மூர்த்தி அகற்றப்பட்டு, 12000 சாளக்கிராமத்தினாலும் "கடுசர்க்கரா" என்ற அஷ்டபந்தனக் கலவையாலும் நிறுவப்பட்ட புது "அனந்தசயன மூர்த்தி" பிரதிஷ்டை செய்யப்பட்டது.

1750-ஆம் ஆண்டில் ராஜா மார்த்தாண்ட வர்மா, இக்கோயிலின் இறைவனான பத்மநாபசாமிக்குத் தன் அரசு, செல்வம் அனைத்தையும் தானமாக பட்டயம் எழுதித் தந்து, தன் உடை வாளையும் அவர் திருப்பாதங்களில் வைத்து எடுத்துக் கொண்டு பரிபூரண சரணாகதியடைந்தார். அன்று முதல் திருவிதாங்கூர் அரச பரம்பரையினர் "பத்மநாபதாசர்" என்று அழைக்கப்படலாயினர்.

இறைவனின் முத்திரையாக விளங்கிய வலம்புரி சங்கு திருவிதாங்கூர் அரசின் முத்திரையாகவும், பிறகு கேரள அரசின் முத்திரையாகவும் வெகு நாட்களுக்கு புழக்கத்தில் இருந்து வந்தது.

ஸ்ரீ பத்மனாபரின் விக்ரகம், முகம் மற்றும் மார்பைத் தவிர்த்து அனைத்து பாகங்களும் தங்கத்தால் ஆனவையாகும். இறைவனின் கிரீடம், குண்டலங்கள், கழுத்தில் உள்ள பெரிய சாலிக்கிராம மாலை மற்றும் அவர் அணிந்திருக்கும் அழக்கான பூணூல் கயிறும் தங்கத்தால் ஆனவை. மேலும் இறைவனின் மார்பில் காணப்படும் அலங்கார மாலைகள், வலது கரத்தில் பரம சிவரை பாதுகாக்கும் வண்ணம் அமைந்த கங்கணம், இடது கையில் அவர் வைத்திருக்கும் தாமரை மலர், திருவடிகள் ஆகிய யாவுமே தங்கம்தான். இவைத்தவிர இறைவனின் நாபியில் இருந்து வெளிப்படும் தாமரைத் தண்டும் மிகவும் சுத்தமான தங்கத்தால் இழைத்ததாகும்.

ஸ்ரீ பத்மநாபசாமி கோயிலின் கோபுரம் 100 அடி உயரத்துடன், ஏழு வரிசைகளைக் கொண்டுள்ளது. இந்த கோபுரம் வழமையான சிவாலயங்களில் இருக்கும் கூர்வடிவக் கோபுரம் போலல்லாது, பாதி நறுக்கப்பட்ட தோற்றத்தில் அகலப்படுத்தப்பட்ட கூம்பு வடிவில் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.

இந்தக் கோயில் வளாகத்தில் காணப்படும் தாழ்வாரம், கருங்கல்லில் செதுக்கிய தூண்கள் கொண்டதாகும். இங்கே காணப்பெறும் '௩௬௫' மற்றும் ஒரு கால் கருங்கல் தூண்கள் அனைத்தும் அழகிய மற்றும் நேர்த்தியான சிற்பங்களால் மனம் கவரும் வகையில் அலங்காரத்துடன் அமைக்கப்பெற்றதாகும். இத்தாழ்வாரம் கிழக்குப்புறத்தில் அமைந்துள்ள கோயில் வாசலில் துவங்கி கோயிலின் கர்பக்கிரகம் வரைக்கும் நீண்டதாக காணப்படுகிறது.

கோயில் கோபுரத்தின் கீழ்த்தளம், நாடக சாலை என அறியப்படுகிறது. இங்கே ஆண்டுதோறும் மலையாள மாதங்களான மீனம் மற்றும் துலாம் மாதங்களில் பத்து நாட்களுக்கு விமரிசையாக நடைபெறும் திருவிழாக் காலங்களில் கதகளி போன்ற நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

தாழ்வாரத்தின் முதன்மை வாசலில் இருந்து 'பிரகாரத்தின்' முன் 80 அடி உயரமான கொடிக்கம்பம் காணப்படுகிறது.

கோயிலின் கர்பக்கிரகத்தில் மகாவிஷ்ணு, அனந்தன் அல்லது ஆதிசேஷன் எனும் நாகப்பாம்பின் மீது சயனித்திருக்கும் நிலையில் பள்ளி கொண்டுள்ளார். மேலும் மகா விஷ்ணுவின் இரு தேவிகளான ஸ்ரீ தேவி மற்றும் பூதேவி, அவருடைய இரு பாகங்களிலும் வீற்றிருக்க, பிரம்மதேவன் மகா விஷ்ணுவின் நாபியில் இருந்து வரும் தாமரை மலரில் வீற்றிருப்பதை நாம் காணலாம்.

சயன ரூபத்தில் காணப்படும் மகா விஷ்ணுவின் விக்ரகம் 12008 சாலிக்கிராமங்களினால் வடிவமைத்ததாகும். நேபாளத்தில் உள்ள புனித நதியான கண்டகி நதியின் கரைகளில் இருந்து மிகவும் கவனமாக இந்த சாலிக்கிராமங்களை பக்தியுடன் தேர்வு செய்து, பின்னர் பூஜை மற்றும் வழிபாடுகளுடன் யானையின் மீது வைத்து அலங்கரித்து திவ்ய ஆராதனையுடன் கொண்டு வரப்பட்டதாகும்.

கோயிலின் கர்பக்கிரகம் ஒரே கருங்கல்லால் செதுக்கப்பட்டிருப்பதால் "ஒற்றைக்கல் மண்டபம்" என்று அழைக்கப்படுகிறது. இறைவரின் தரிசனம் கிடைப்பதற்கும் மற்றும் இறைவனை பூஜை செய்து வழிபடுவதற்கும், நாம் ஒற்றைக்கல் மண்டபத்தின் மீது ஏறவேண்டும்.

இரத்தினக் கற்கள் இழைத்த தங்கப் பாத்திரத்தில் படைக்கப்படும் நைவேத்யமான இரத்தின பாயாசம். மேனி துலா பாயாசம் எனப்படும் அரிசி மற்றும் வெல்லத்தால் செய்த சர்க்கரைப் பொங்கல், ஒற்றை துலா பாயாசம், பந்தரனு கலப் பாயாசம், பால் பாயாசம் ஆகிய பாயாச வகைகள் பத்மநாபசாமி கோயிலில் பிரசாதங்களாக படைக்கப்படுகின்றன. ஆனால் இந்தக் கோயிலின் சிறப்பான நைவேத்யமாக அறியப்படும் உப்பு மாங்காய், ஒரு தங்கத்தால் பூசப்பட்ட சிரட்டை அல்லது தேங்காய் ஓடில் வழங்கப்படுகிறது. இந்தத் தேங்காய் சிரட்டை 1200 வருடங்களுக்கும் மேல் பழமையானதாகும்.

இரு கால்களையும் தனித்தனியாகக் காட்டும் எந்த ஆடையையும் யாரும் அணியக்கூடாது. இதன் பொருளானது ஆண்கள் கால்சட்டைகளும், பெண்கள் சுடிதாரையும் அணிந்து கோயிலுக்குள் செல்லக்கூடாது. கோயிலில் உள்ள பாதுகாப்பான லாக்கர் அறையில் இருந்து வேஷ்டிகளை 15 ரூபாய் கட்டணத்துக்கு வாடகைக்குப் பெறலாம். மேலும் கோயிலுக்கு உள்ளே தொலைபேசிகள் (கைபேசிகள்) மற்றும் கேமராக்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. அவற்றை கோயில் லாக்கரில் வைத்துவிட்டு உள்ளே செல்ல வேண்டும். அதற்கான கட்டணமாக ஒரு தொலைபேசிக்கு ரூபாய் 15 வசூலிக்கப்படுகிறது.

ஸ்ரீ பத்மநாபசாமி கோயிலில் உள்ள 6 பாதாள ரகசிய அறைகளும் பல ஆண்டுகளாக திறக்கப்படாமலேயே இருந்து வந்தன. கடந்த 2011-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த அறைகளிலிருந்து தங்கத்தாலான விஷ்ணு சிலை, விலை மதிக்கவே முடியாத அரிய வகை வைரங்கள், வைடூரியங்கள், தூய தங்கத்தால் ஆன ஒரு கிலோ எடை கொண்ட 18 அடி நீளமுடைய நகை, பைகள் நிறைய தங்க நாணயங்கள், அரிய வகை கற்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் மதிப்பு 1 லட்சம் கோடிக்கும் மேல் இருக்கும் என கருதப்படுகிறது.

ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ ஐயப்பர் , ஸ்ரீ கணேஷர் மற்றும் ஸ்ரீ ஹனுமான் ஆகிய பிற தெய்வங்களுக்கும் பத்மநாபசாமி கோயிலில் தனித்தனி சன்னதிகள் உள்ளன.

உருகா வெண்ணை!!!

ஸ்ரீ ஹனுமான் சன்னதியில் உள்ள ஹனுமார் மீது சாத்தப்படும் வெண்ணெய் எவ்வளவு நாளானாலும் எந்த வெயில் காலத்திலும் உருகுவதுமில்லை, கெட்டுப் போவதுமில்லை என்று சொல்லப்படுகிறது.
 
பிரார்த்தனை நேரங்கள் ஸ்ரீ பத்மநாபசாமி கோயிலின் பிரார்த்தனை நேரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல