உங்கள் பத்திரிகைகளில் இருக்கும் கறுப்பு மை கைகளில் இலகுவாகவே ஒட்டிக்கொள்கிறது. இது ஒரு பத்திரிகைக்கு மட்டுமானதாகஇல்லை. எல்லாத் தமிழ்ப் பத்திரிகைகளும் அப்படியே.
ஒரே அச்சகத்தில் அனைத்தும் அச்சிடுவதால் அப்படி எல்லாவற்றிற்கும் நேர்கிறது என்றே நினைக்கிறேன். பத்திரிகையை விரிக்கும்போதே கைகளில் ஒட்டிக் கொள்கிறது என்றால் இங்குவாழ்கின்ற தமிழர்கள்(நான் உட்பட) மா அரிப்பதற்கும் மீன் பொரித்துப் போடுவதற்கும் அவற்றையே பயன்படுத்துகிறோம்.
இதனால் நமது மக்களது உணவுகளில் அச்சகத்து மை கலந்து விடுகிறது.
இந்த விபரீதத்தை தவிர்க்க வேண்டி உங்களது பத்திரிகைகளது அச்சடிக்கும் முறையில் கவனம் செலுத்தத் தயவுடன் வேண்டிக் கொள்கிறேன்.
மீனைப் பொரித்து பொடுவதற்கும் மா அரிப்பதற்கும் வீட்டில் குளிர் வராமல் கதவு நீக்கல்களை அடைப்பதற்கும் பனிக்காலத்தில் காரில் கால்களில் போடுவதற்கும் நமது மக்களுக்கு அதிகம் உதவியாய் இருப்பது உங்கள் பத்திரிகைகளே.
இதற்காக நாம் என்றும் நன்றிக்கடமை பட்டவர்கள்.ஆனால் இந்த மை விடயத்தில் கவனம் கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்.
(Katsura Bourassa)
சூத்திரம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக