உலகிலேயே மூன்றாவது உயரமான நபராக விளங்கும் 7 அடி 8 அங்குல உயரமுடைய இளைஞரும் 5 அடி மட்டுமே உயரமுடைய குள்ளமான பெண்ணும் ஒருவரிடம் ஒருவர் மனதைப் பறிகொடுத்து திருமணம் செய்த சம்பவம் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.
ஜோலிஸன் பெர்னாண்டெஸ் டா சில்வா (28 வயது) என்ற நபரும் ஈவம் மெடியரோஸ் (21 வயது) என்ற பெண்ணும் பேஸ்புக் இணையத்தளம் மூலம் ஒருவரையொருவர் சந்தித்து காதல் கொண்டனர்.
ஜோலிஸனை விடவும் சுமார் 3 அடி உயரம் குறைவாகவுள்ள ஈவம், அவரது இடுப்பளவு உயரத்தை மட்டுமே கொண்டுள்ளார்.
இது தொடர்பில் ஜோலிஸன் விபரிக்கையில், தனது அளவுக்கதிகமான உயரம் காரணமாக தனது வாழ்நாளின் அரைப் பகுதி மற்றவர்களின் கேலிப் பேச்சுகளுக்கு ஆளாகி துன்பத்தில் வாழ நேர்ந்ததாகவும் ஈவமை முதன்முதலாக சந்தித்த போது முதல் பார்வையிலேயே காதல் கொண்டதாகவும் தெரிவித்தார்.
“நான் முதல் பார்வையிலேயே அவள் பால் கவரப்பட்டேன். அவளுடனேயே அனைத்து நேரத்தையும் கழிக்க விரும்பி னேன். அவரது உயரம் எனக்கு ஒரு பொருட்டாக தோன்றவில்லை" என அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக