அமெரிக்காவில், கம்ப்யூட்டரைக் கொண்டிருந்த ஒரு சில பள்ளிகளில் ஒன்றான ”லேக்சைட் பள்ளி (Lakeside School)”யில் பில் கேட்ஸ் மாணவனாகச் சேர்ந்தார். அதுவே அவருக்குக் கம்ப்யூட்டர் மேல் ஆர்வம் கொள்ள, காரணமாய் இருந்தது.
பில் கேட்ஸ் எழுதிய முதல் புரோகிராம் டிக் டேக் கேம் என்ற விளையாட்டுக்கானது. தன் 17 ஆவது வயதில், தன் பள்ளிக்காக டைம் டேபிள் தயாரிப்பதற்கான புரோகிராம் ஒன்றை வடிவமைத்து வழங்கி, 4,200 டாலர் பெற்றார். இதுவே அவர் விற்பனை செய்த முதல் புரோகிராம்.
ஹார்வேர்ட் பல்கலைக் கழகக் கல்லூரியில் படிக்கும்போது தன் பேராசிரியர்களிடம், தான் 30 வயதை அடைவதற்குள், ஒரு லட்சாதிபதியாகிவிடுவேன் எனக் கூறி இருந்தார். 31 வயதில் அவர் கோடீஸ்வரனானார்.
1975 ஆம் ஆண்டில், ஹார்வேர்ட் பல்கலையை விட்டு வெளியேறி, தன் நண்பருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தைத் தொடங்கினார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மூலம் பில் கேட்ஸ் பெறும் வருமானம் பற்றிக் கீழ்வருமாறு கூறப்படுவதுண்டு. ஒரு விநாடியில் 250 டாலர், ஒரு நிமிடத்தில் 15,000 டாலர், நாள் ஒன்றுக்குக் கிட்டத்தட்ட 2 கோடி டாலர் வருமானம் பெறுகிறார். பில் கேட்ஸை ஒரு நாடாக எண்ணினால், உலகத்தின் 37 ஆவது பணக்கார நாடாக அவர் இருப்பார்.
1994 ஆம் ஆண்டில், தான் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்த மெலிண்டாவைத் திருமணம் செய்தார் பில் கேட்ஸ். இவர்களுக்கு ஜெனிபர் காதரின், போப் அடிலே என்ற மகள்களும், ரோரி ஜான் என்ற மகனும் உள்ளனர்.
1987 ஆம் ஆண்டில் தான், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஊழியராக, மெலிண்டா, பில் கேட்ஸைச் சந்தித்தார்.
பில் கேட்ஸ் பிறந்த நாள் அக்டோபர் 28.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக