வேர்டில் நான்கு ஆட்டோக்கள்: வேர்ட் புரோகிராமில், நான்கு ஆட்டோக்கள் ("auto") தரப்பட்டுள்ளன. இந்த நான்கு ஆட்டோ டூல்களும், அவை AutoText, AutoComplete, AutoCorrect, மற்றும் AutoFormat ஆகும். இவற்றின் மூலம் டாகுமெண்ட்களை விரைவாகவும், வேகமாகவும், எளிதாகவும், ஒரே மாதிரியான வகையிலும் தயாரிக்க உதவுகின்றன.
புல்லட் பாய்ண்ட்ஸ்: வேர்டில் டெக்ஸ்ட்டின் சில பாகங்களை முக்கியப்படுத்தவும் கோர்வையாக வரிசைப்படுத்திக் காட்டவும் புல்லட் பாய்ண்ட்ஸ் பயன்படுத்துகிறோம். இதற்கு வழக்கமாக பார்மட் மெனு சென்று இதற்கான பிரிவினைத் தேர்ந்தெடுக்கிறோம். அல்லது டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து மெனு பாரில் அதற்கான ஐகானைக் கிளிக் செய்கிறோம். இதற்குப் பதில் புல்லட் அமைக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டில் கர்சரை வைத்து பின் கண்ட்ரோல்+ஷிப்ட்+எல் அழுத்தினால் போதும். தானாக புல்லட் அமைந்துவிடும். கண்ட்ரோல்+ஷிப்ட்+என் அழுத்தினால் இந்த புல்லட் பாய்ண்ட்கள் நீங்கிவிடும்.
எழுத்தைச் சுருக்க இரு வழிகள்: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் எந்த ஒரு பைலிலும் காணப்படும் எழுத்தின் அளவைப் பெரிதாக்கவும் சிறியதாக மாற்றவும் இரண்டுவித கட்டளைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை
Ctrl + Shift + > மற்றும் Ctrl + Shift + < என ஒரு வகை. Ctrl + [ மற்றும் Ctrl + ] என ஒரு வகை. ஏன் இரண்டு விதமான கட்டளைகள்? இதன் செயல்பாட்டில் வேறுபாடு உண்டா? எனக் கேட்டால் ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். எழுத்து அளவுக்கான கீழ்விரியும் பட்டியலைப் பார்த்தால் இதற்கான விடை தெரியும். இந்த பட்டியலில் வரிசையாக எழுத்தின் அளவு இருக்காது. 8 லிருந்து 12 வரிசையாக வரும் எண் பின்னர் 14, 16 எனச் செல்லும். அப்படியானால் எழுத்தின் அளவு 13,15 வேண்டும் என்றால் என்ன செய்வது? இங்கே தான் மேலே கூறப்பட்ட இரு வகைக் கட்டளைகள் வேறுபடுகின்றன. முதலில் தரப்பட்ட மூன்று கீகள் இணைப்பு (Ctrl + Shift + >) எழுத்து அளவு பட்டியலில் உள்ள எண் படி அளவைப் பெருக்கும், குறைக்கும். எடுத்துக் காட்டாக இந்த கட்டளையைப் பயன்படுத்துகையில் 12க்குப் பின் எழுத்தின் அளவு 14 ஆக உயரும்.
14ல் இருந்தால் குறைக்கும்போது 12 ஆகக் குறைக்கப்படும். ஆனால் இரண்டாவது வகைக் கட்டளையான இரண்டு கீ (Ctrl + [) கட்டளையைப் பயன்படுத்துகையில் அவை எழுத்தின் அளவை ஒவ்வொன்றாகக் குறைக்கும், கூட்டும்.
டெக்ஸ்ட்டுக்கு அதிக இடம் வேண்டுமா?: நீங்கள் எம்.எஸ். வேர்ட் தொகுப்பினைப் பயன் படுத்துகையில் உங்கள் டெக்ஸ்ட்டுக்கு நிறைய இடம் வேண்டும் என எண்ணுபவரா? எதற்கு இந்த தேவையில்லாத மெனு மற்றும் பார்கள் இருக்கின்றன என்று எரிச்சல் படுபவரா? வேர்ட் செட் அப்பில் ஒரு சில டிக் அடையாளங்களை ஏற்படுத்துவதன் மூலமும் நீக்குவதன் மூலமும் இதனை மேற்கொள்ளலாம். அதே போல மீண்டும் வேண்டும் என்றாலும் அவற்றை மீட்டுக் கொள்ளலாம். இதற்கு முதலில் Tools மெனு செல்லவும்.
பின் அதில் Options என்னும் பிரிவைத் தேர்ந்தெடுத்து வரும் டேப் விண்டோவில் View டேபைக் கிளிக் செய்திடவும். இதில் Horizontal Scroll Bar, Status Bar, Vertical Scroll Bar என்ற மூன்று பார்களும் அவற்றின் எதிரே செக் பாக்ஸ்களும் இருக்கும். இதில் எது உங்களுக்குத் தேவை இல்லை என எண்ணுகிறீர்களோ அதில் டிக் அடையாளத்தை எடுத்துவிடுங்கள். பின் வேர்ட் தொகுப்பில் டெக்ஸ்ட் தயாரிக் கையில் அல்லது எடிட் செய்கையில் உங்கள் மானிட்டரில் நீங்கள் டிக் அடையாளம் எடுத்துவிட்ட பார்கள் இருக்காது. இதனால் டெக்ஸ்ட் அடிக்கச் சற்று கூடுதலாக இடம் கிடைக்கும். நீக்கிய இந்த பார்கள் மீண்டும் வேண்டும் என்றால் மீண்டும் இதே வழியில் சென்று வியூ டேப் அழுத்தித் தேவையான பார் களுக்கு முன்னால் உள்ள பாக்ஸ்களில் டிக் அடையாளம் ஏற்படுத்தினால் போதும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக