The 41-year-old Australian woman had a medical emergency on New Year's Eve after inhaling an earring into her lungs. An X-ray shows the earring lodged in her right bronchus - the airway leading to the lungs
பெண்ணொருவர் தனது தோட்டு சுரை நுரையீரலில் சிக்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.சிட்னி நகரைச் சேர்ந்த ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட 41 வயதுப் பெண், மூச்சை சீர்செய்வதற்கு பயன்படும் தனது மூடியற்ற உறிஞ்சல் உபகரணத்தில் தனது தோட்டின் சுரைப் பகுதி தவறுதலாக விழுந்திருப்பதை அறியாது இந்த உபகரணத்தை பயன்படுத்தியமை காரணமாகவே இந்த விபரீத சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ தினம் தனது கைப்பையிலிருந்த சுவாச சீராக்க உபகரணத்தை அந்தப் பெண் பயன்படுத்திய பின்னர், அவருக்கு சுவாசிப்பதற்கு கடும் சிரமம் ஏற்பட்டதுடன் இருமும் போது வாயாலும் மூக்காலும் குருதியும் வெளியேறியுள்ளது.
இதனையடுத்து உடனடியாக அம்புலன்ஸ் வண்டியில் சிட்னி நகரிலுள்ள சென் வின்சென்ட் மருத்துவ.மனைக்கு அந்தப் பெண் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனையின் போது அந்தப் பெண் ணின் நுரையீரலில் தோட்டு சுரை இருப்பது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து சத்திரசிகிச்சை மூலம் அந்தப் பெண்ணின் நுரையீரலை ஊடுருவியிருந்த தோட்டுச் சுரையை மருத்துவர்கள் அகற்றி யுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக