செவ்வாய், 28 ஏப்ரல், 2015

சிசேரியன் பிரசவத்தை சாதாரண பிரசவமாக மாற்றலாமா?

கர்ப்பம் தரித்து தமது குழந்­தையை பிர­ச­வித்து எடுத்து பார்த்து வளர்க்க ஒரு தாய் எத்­தனை கன­வுகள் காண்பாள். அத்­த­னைக்கும் அவர் அனு­ப­விக்கும் துன்­பங்­களும் சோத­னை­களும் எத்­தனை என்­பது அந்தப் பெண்­ணுக்­குத்தான் தெரியும். இவற்றில் மன ரீதி­யான வேத­னைகள் உடல்­ரீ­தி­யான வேத­னைகள் என பல­வற்­றையும் கர்ப்ப காலம் முழு­வதும் சுமந்து இறு­தியில் தனது வயிற்றில் சுமக்கும் சிசுவை எப்­படி வெளியில் எடுப்­பது என்ற கேள்வி தான் மனதில் இருக்கும்.


இந்த குழந்­தைப்­பி­ர­ச­வ­மா­னது சாதா­ரண சுகப்­பி­ர­சவம் என்றால் சிறந்­தது. சிக்­கல்கள் எதுவும் வராது என்­றுதான் யாரும் நினைப்­பார்கள். இதுவே ஒரு சிசே­ரியன் பிர­ச­வ­மானால் தாய்க்கு பல வேத­னை­களும் கஷ்­டங்­களும் அதிகம் எனத்தான் தாயோ அல்­லது குடும்­பத்­தி­னரும் நினைப்­பார்கள். இதற்­க­மை­யவே பெண்­களும் குடும்­பத்­தி­னரும் சிசே­ரியன் பிர­சவம் என்ற வார்த்­தையை கேட்டு முகம் சுளிப்­பதும் சாதா­ரண சுகப்­பி­ர­சவம் என்­ற­வுடன் முகம் மலர்ந்து புன்­னகை பூப்­பதும் வழ­மை­யான விட­யங்கள்.

இவ்­வா­றான கருத்­து­டை­ய­வர்­க­ளாக மக்கள் இருக்கும் போது அவர்­களை திருப்­திப்­ப­டுத்­து­வது எமது கட­மை­யாக எடுக்க வேண்டும். இதற்­க­மைய வேறொரு வைத்­தி­ய­சா­லையில் சிசே­ரியன் பிர­சவம் தான் செய்­யப்­பட வேண்டும் உங்­க­ளுக்கு என உறு­தி­யாக கூறப்­பட்டால் மனம் நொந்து பின்னர் அதே­கு­ழந்­தையை சாதா­ரண சுகப்­பி­ர­சவம் மூலம் எமது வைத்­தி­ய­சா­லையில் பிர­ச­வித்து மகிழ்ச்­சி­யாக சென்ற தம்­ப­தி­களின் உண்மைச் சம்­ப­வத்தை உங்­க­ளிடம் பகிர்ந்து கொள்­கிறேன்.

பேரு­வளை என்ற ஊரி­லி­ருந்து 27 வய­து­டைய பெண்­ணொ­ருவர் தனது இரண்­டா­வது குழந்­தைப்­பி­ர­ச­வத்­துக்­காக மைல்கள் பல கடந்து கொழும்பு வந்தார். கொழும்பில் தனக்கு சிறப்­பான சிகிச்­சையும் சேவையும் கிடைக்­கு­மென நினைத்து வைத்­தி­ய­சா­லை­யொன்றில் அனு­ம­திக்­கப்­பட்டார்.

இந்­தப்­பெண்­ணுக்கு முதல் பிர­சவம் சாதா­ரண சுகப் பிர­ச­வ­மாக நடந்­தி­ருந்­தாலும் பிறந்த குழந்தை ஒரு மாத காலத்தில் நோய் காண­ர­மாக இறந்து விட்­டது. ஒரு வருட கால இடை­வெ­ளியின் பின்னர் இந்­தப்பெண் இரண்­டா­வது தடவை கர்ப்பம் தரித்து இம்­முறை பிர­ச­வத்­துக்­காக சென்­றி­ருந்தார். இம்­முறை கர்ப்ப காலத்தில் எந்த சிக்­கல்­களும் இருக்­க­வில்லை.

எனினும் முதல் குழந்தை சுகப்­பி­ர­ச­வ­மாக பிர­ச­விக்­கப்­பட்­டாலும் பின்னர் ஏற்­பட்ட நோய் கார­ண­மா­கத்தான் இறந்­தது. அந்தக் குழந்­தையின் இறப்­புக்கும் பிர­சவ முறைக்கும் எந்­த­வித தொடர்பும் இல்லை. எனினும் முதல் குழந்தை இறந்து விட்­டதால் இந்தக் குழந்­தையை பிர­ச­விக்க சிக்­கல்கள் இல்­லாமல் சிசே­ரியன் பிர­சவம் செய்ய வேண்டும் என்­றுதான் அவர் சென்­றி­ருந்த வைத்­தி­ய­சா­லையில் கூறி­யி­ருந்­தார்கள்.

ஆனால் அந்த பெண்­ணுக்கோ அவ­ரது குடும்­பத்­தி­ன­ருக்கோ சிசே­ரியன் பிர­சவம் என்ற வார்த்­தையே பய­மா­கத்தான் இருந்­தது. அவர்கள் தமக்கு சிசே­ரியன் செய்­யப்­ப­டு­வதால் சம்­மதம் இல்­லா­த­வர்­க­ளா­கத்தான் இருந்­தார்கள். அவர்­களைப் பொறுத்த வரையில் முதல் குழந்தை சுகப்­பி­ர­ச­வ­மாக பிறந்­ததால் இரண்­டா­வது பிர­ச­வமும் சாதா­ரண சுகப்­பி­ர­ச­வ­மாக முடியும் தானே என்று கரு­தி­னார்கள்.

ஆனால் அந்த கர்ப்­பிணி பெண்ணை பார்த்த வைத்­தி­யர்கள் முதல் குழந்தை இறந்து விட்­டது. எனவே இந்த இரண்­டா­வது குழந்­தையை பிர­சவ நேரத்தில் எவ்­வித ஆபத்தும் வர­வி­டாமல் சிசே­ரியன் செய்­வதே உங்­க­ளுக்கு சிறந்­தது என்ற கருத்தில் உறு­தி­யாக இருந்­தார்கள்.

இவ்­வாறு குழந்­தையை பிர­ச­விக்­கப்ப போகும் பெண்­ணுக்கும் பிர­ச­வத்தை மேற்­கொள்­ளப்­போகும் வைத்­தி­யர்­க­ளுக்கும் இடையில் கருத்து வேறு­பா­டு­களும் வேறு­பட்ட விளக்­கங்­களும் இருந்­ததால் இரு பகு­தி­யி­னரும் திருப்­தி­யற்ற நிலையில் முறி­வ­டைந்­தார்கள். அதா­வது அந்தப் பெண்ணின் குடும்­பத்­தினர் அவரை கூட்­டிக்­கொண்டு வேறொரு வைத்­தி­ய­சா­லைக்கு செல்வோம் என்ற தீர்­மா­னத்தை எடுத்­தார்கள். அதன் படி இறு­தியில் எமது வைத்­தி­ய­சா­லையில் பிர­ச­வத்­திற்­காக வந்து அனு­ம­தித்­தார்கள்.

இவர்­க­ளது விப­ரங்­களை பார்த்த போது நானும் கரு­தினேன் முதல் குழந்தை இறந்­த­துக்கும் பிர­வச முறைக்கும் எவ்­வித தொடர்பும் இல்லை என்­றுதான். அந்­தக்­கு­ழந்தை பிறந்து ஒரு மாதத்தின் பின் ஏற்­பட்ட வேறொரு நோயி­னால்தான் இறந்­தது. எனவே இதற்­காக பிர­சவ முறையை மாற்ற வேண்­டிய தேவை இல்லை.

சிசே­ரியன் பிர­ச­வத்­தினால் இந்தப் பெண் அனு­ப­விக்­கப்­போகும் துன்பம் வலி என்­பன சாதா­ரண பிர­ச­வத்தை விட அதி­க­மா­கத்தான் இருக்கும். அத்­துடன் பெண்ணின் விருப்­பத்­துக்கும் மதிப்புக் கொடுக்க வேண்­டிய தேவை இருந்­தது. எனவே நாம் முடி­வெ­டுத்தோம். சாதா­ரண சுகப்­பி­ர­சவம் தான் இந்த இரண்­டா­வது குழந்­தையை பிர­ச­விக்க கூடிய சரி­யான முறை. இதன்­படி பிர­சவம் மேற்­கொள்ளும் வேளையில் குழந்­தையின் ஆரோக்­கி­யத்­துக்கு ஏதா­வது பாதிப்­புக்கள் வரு­வது போல் இரு­தய துடிப்­புக்கள் மூலம் அறிந்தால் அவ­ச­ர­மாக சிசே­ரியன் செய்ய முடியும் இல்லா விட்டால் சாதா­ரண சுகப்­பி­ர­ச­வத்தை வெற்­றி­க­ர­மாக பூர்த்தி செய்­யலாம்.

இதற்கு அப்­பெண்ணும் அவ­ரது குடும்­பத்­தி­னரும் பூரண சம்­மதம் தெரி­வித்­தார்கள். எமது திற­மையும் அனு­ப­வமும் நிறைந்த தாதி­மார்­களும் இதற்கு உறு­தி­யாக இருந்து இதனை சாதா­ரண சுகப் பிர­ச­வ­மாக இறு­தி­வரை கொண்டு செல்ல தயா­ராக இருந்­தனர்.

இதற்­க­மைய நாம் சின்ரோ மருந்­துகள் மூலம் பிர­சவ வலியை வர வைத்து பிர­சவம் நடை­பெறும் அறையில் வயிற்றில் இருக்கும் சிசுவின் இரு­தய துடிப்பு மாற்­றங்­களை ஒவ்­வொரு நிமி­டமும் எமது கரு­விகள் மூலம் அவ­தா­னித்தோம். இதன் மூலம் குழந்­தையின் ஆரோக்­கி­யத்தை நூற்­றுக்கு நூறு வீதம் உறுதி செய்தோம்.

இதன்­படி பிர­சவ வலி­யா­னது மெது மெது­வாக கூடி அந்த ??????தாங்கி அதனை தாய்க்கு உணர விடாமல் செய்­யக்­கூ­டிய ஊசி­க­ளையும் வழங்கி அப்­பெண்ணை பிர­சவ நேரத்தில் சிர­மங்கள் இல்­லாது பார்த்து கொண்டோம். இத­னை­ய­டுத்தே 4 மணி நேரத்தின் பின் சாதா­ரண சுகப் பிர­சவம் மூலம் ஆரோக்­கி­ய­மான குழந்­தையை பெற்­றெ­டுத்தோம்.

இதன் போது தாயி­னதும் குடும்­பத்­தி­ன­ரி­னதும் முகங்­களில் அளவு கடந்த மகிழ்ச்­சியை காண முடிந்­தது. இதற்கு பின்னர் நான் கரு­தினேன். பிர­சவ முறையில் சாதா­ரண சுகப்­பி­ர­சவம் என்­பது சொல்லில் இருப்­பது போல் சுக­மான பிர­சவ முறைதான். ஆனால் சிறந்த மருத்­துவ தாதி­மார்கள் உத­வி­யுடன் சரி­யான கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்டால் சிக்கல்கள் இல்லாமல் நிறைவு செய்ய முடியும்.

எனவே இந்த அனுபவம் மூலம் நாங்கள் சிலவேளைகளில் சிசேரியன் பிரசவம் என கூறுவது வைத்தியர்களை பொறுத்த வரையில் ஒரு இலகுவான விடயமாக இருந்தாலும் பிரசவத்திற்கு வரும் தாய்க்கோ குடும்பத்துக்கோ எந்த அளவு சிந்திக்க வைக்கின்றது என புரிகின்றது. ஆகையால் பிரசவங்களை முடிந்த வரை பாதுகாப்பான சாதாரண சுகப் பிரசவமாக மாற்றியமைக்க அனுபவங்களையும் தொழில் நுட்ப வசதிகளையும் பாவித்து இறுதி வரை முயற்சிப்போம்.

Dr. கு. சுஜாகரன்
நியூலங்கா மகப்பேற்று மருத்துவமனை
பம்பலப்பிட்டி

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல