நாம் செய்திகளை, தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, நம் உணர்வுகளைச் சிறிய படங்களாகக் காட்ட எமோட்டிகான் அல்லது ஸ்மைலி என்ற சிறிய படங்கள் இணையத்தில் நிறைய கிடைக்கின்றன.
ஜிமெயில் போன்ற மின் அஞ்சல் தளங்கள், உடனடி செய்தி தரப் பயன்படும் பேஸ்புக் போன்ற தளங்கள், பலவகையான உணர்வுகளுக்கான உணர்ச்சிப் படங்களைக் கொண்டுள்ளன.
அண்மையில் “நான் குண்டாக உணர்கிறேன் (“feeling fat”)” என்ற படம் பலரின் வெறுப்பிற்கு ஆளாகியது. இது சற்று அதிக எடையுள்ள நபர்களைக் கேலி செய்வதாகவும், அதனால், அவர்கள் சாப்பிடும் பழக்கத்தில் தேவையற்ற, உடல் நலம் கெடுக்கும் மாற்றங்கள் ஏற்படுவதாகவும் பலர் உணர்ந்தனர்.
ஏதென்ஸ் நகரில் உள்ள ஒஹையோ பல்கலைக் கழகத்தில் படிக்கும் கேதரின் (24) என்ற மாணவி, பேஸ்புக் தளத்திடம் இந்த உணர்வுப் படத்தை அதன் தளத்திலிருந்து நீக்க ஒரு கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கினார்.
16 ஆயிரம் பேருக்கு மேல் இதில் கையெழுத்திட்டனர். இதனை அறிந்த பேஸ்புக் உடனடியாக அதனை நீக்கிவிட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக