ஹைதராபாத்: செம்மரக் கடத்தல் விவகாரத்தில் தெலுங்குப் படத்தில் நடித்து வந்த நடிகை நீத்து அகர்வால் என்பவர் தலைமறைவாகியுள்ளார். அவரை தயாரிப்பாளர் மஸ்தான் வாலி என்பவர்தான் மாட்டி விட்டுள்ளார். இதையடுத்து தலைமறைவான நீத்து அகர்வால் மீது கர்னூல் போலீஸார் வழக்குப் போட்டுள்ளனர். அவரது வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. அவரைத் தேடி போலீஸ் படை பெங்களூரு மற்றும் மும்பை விரைந்துள்ளது.
செம்மரக் கடத்தல் விவகாரத்தில் 20 தமிழர்களைப் படுகொலை செய்த கையோடு தற்போது முக்கியப் புள்ளிகள் பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளது ஆந்திர போலீஸ். இதில் பலரும் சிக்குவார்கள் போலத் தெரிகிறது. ஆனால் இதுவரை எந்தப் பெரிய புள்ளியும் கைதானது போலத் தெரியவில்லை. பெரும் பரபரப்புத் தகவல்களை மட்டுமே ஆந்திர போலீஸ் பரப்பி வருகிறது.
தெலுங்குப் படத் தயாரிப்பாளர் மஸ்தான் வாலி என்பவர் கைதாகியுள்ளார். அதேபோல முன்னவர் என்ற படத்தில் நடித்த சென்னையைச் சேர்ந்த நடிகர் சி. சரவணன் என்பவர் கைதாகியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் மஸ்தான் வாலி என்பவர் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். எலுமிச்சம் பழம் வியாபாரம் செய்து வந்தவர். இவரும் செம்மரக் கடத்தலில் இறங்கி பல கோடிகளைப் பார்த்தவர்.
அதில் கிடைத்த பணத்தை வைத்து தயாரிப்பாளராக மாறினார். 2013ம் ஆண்டு பிரேம பிரயாணம் என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்தார். படம் அட்டர் பிளாப் ஆனது. அதில் நாயகியாக நடித்தவர் நீத்து அகர்வால்.
படம் வளர்ந்தபோது இவருக்கும், வாலிக்கும் இடையே நெருக்கமும், உறவும் கூடவே சேர்ந்து வளர்ந்தது. தனக்கு செம்மரக் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை வைத்து இந்த நடிகையை சந்தோஷப்படுத்தி அழகு பார்த்தார். அவருக்கு ஹைதராபாத்தில் வீடு வாங்கிக் கொடுத்துள்ளார். நகைகளையும் வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும் பெரும் தொகையையும் நடிகையிடம் கொடுத்துள்ளார்.
இவர் மீது செம்மரக் கடத்தல் தொடர்பாக 13 வழக்குகள் உள்ளனவாம். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கைதாகாமல் தப்பி வந்தவரான வாலியை தற்போது போலீஸார் ருத்ரவரம் என்ற இடத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
கைதான வாலி, போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தின்போது நீத்து அகர்வால் குறித்தும் கூறியுள்ளார். இதையடுத்து நீத்து தலைமறைவாகி விட்டார். அவர் மீது தற்போது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரைத் தீவிரமாக தேடி வருகின்றனர். அவரைத் தேடி இரு போலீஸ் படைகள் பெங்களூருக்கும், மும்பைக்கும் சென்றுள்ளன. அவரது வங்கிக் கணக்கையும் போலீஸார் முடக்க வைத்துள்ளனர்.
Thatstamil

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக