தமிழ் மொழியைக் கம்ப்யூட்டரிலும், இணையத்திலும் பயன்படுத்த உதவியாக இருந்து வரும் “முரசு அஞ்சல்” மென்பொருளின் 30 ஆவது ஆண்டுவிழா சென்ற மார்ச் மாதம் சிறப்பாக, மலேசியாவில், கோலாலம்பூரில் கொண்டாடப்பட்டது. ஏறத்தாழ, உலகம் முழுவதும் பத்து லட்சம் பேர்களால் இந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவில், இதனை உருவாக்கி வழங்கி வரும் முத்து நெடுமாறன், மென்பொருளின் ”முதல் நிலைப் பதிப்பு” என்னும் சிறப்புப் பதிகையை, பயனாளர்களின் சொந்தப் பயனுக்கு இலவசமாகவே அளிப்பதாக அறிவித்தார்.
இந்த 30 ஆம் ஆண்டுவிழாவில், முரசு மென்பொருள் புதிய பதிகை மற்றும் செல்லினம் மற்றும் செல்லியல் தளங்களின் புதிய தொழில் நுட்ப மேம்பாடுகள் குறித்தும் முரசு நெடுமாறன் உரையாற்றினார். முரசு மென்பொருளின் புதிய பதிகை தரும் புதிய வசதிகள் குறித்து, மிக விரிவாக விளக்கம் அளித்த முத்து நெடுமாறன், இறுதியில், இந்த பதிகையினை, இலவசமாக, அனைவருக்கும், தனி நபர் பயன்பாட்டிற்கு, இலவசமாக வழங்குவதாக அறிவித்து, உலகெங்கும் உள்ள தமிழ்ப் பயனாளர்களை மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் ஆழ்த்தினார்.
இந்த முரசு அஞ்சல் முதல் நிலைப் பதிகையை இலவசமாகப் பெற விரும்புபவர்கள், http://muthal.anjal.net என்னும் தளத்திற்குச் சென்று, தங்கள் பெயர், மின் அஞ்சல் முகவரி ஆகியவற்றை அளித்து, இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உடன், கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து, பயன்படுத்தலாம். பயன்படுத்துகையில், புதிய வசதிகளையும், புதிய அழகான எழுத்துருக்களையும் கண்டறியலாம். “இணைமதி” என்ற அழகான எழுத்துரு இதில் கிடைக்கிறது. இந்த எழுத்துரு ஆப்பிள் சாதனங்கள் அனைத்திலும் மற்றும் எச்.டி.சி. ஆண்ட்ராய்ட் கருவிகளிலும் இயல்பாக இயங்கு தளங்களுடன் வழங்கப்பட்டு வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
புதிய முரசு அஞ்சல் மென்பொருள், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தும் சாதனங்கள் அனைத்திலும், கையடக்க சாதனங்களிலும் பயன்படுத்தும் வண்ணம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதே முரசு அஞ்சல் முதல் நிலைப் பதிப்பின் வர்த்தகப் பதிப்பு, “முரசு அஞ்சல் முழு நிலைப் பதிப்பு” என்ற பெயரில், சில கூடுதல் தொழில் நுட்பங்களுடன் வர்த்தக நிறுவனங்களுக்கென வெளியிடப்பட்டுள்ளது. வணிக நோக்குடைய பயனர்கள், கட்டணம் செலுத்தி இதனைப் பெற்று, கூடுதல் வசதிகளைப் பெறலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக