இலங்கை தேசியக் கொடியிலிருந்து சிறுபான்மை அடையாளங்கள் நீக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டமைக்கு கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட அமைப்பாளருமான சி.வை.பி.ராம் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை அவசியம் எனவும் கோரியுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அலுவலகத்திற்கு முன்னால் அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை தேசியக் கொடியிலிருந்து சிறுபான்மை மக்களின் அடையாளங்கள் நீக்கப்பட்டு காட்சியளிக்கப்பட்டமை தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
ஐக்கிய இராச்சியத்திடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற போது பிரதமராக இருந்த டி.எஸ்.சேனாநாயக்க, இலங்கையின் கடைசி இராச்சியமான கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னன் சிறி விக்கிரமராஜசிங்கனின் சிவப்பு நிறப் பின்னணியில் மஞ்சள்நிற போர்வாளேந்திய சிங்கத்தை மையப்படுத்தி சுதந்திர இலங்கையின் தேசிய கொடியாக தெரிவு செய்தார்.
எனினும் அக்கொடியில் தங்கள் இனத்துவங்களை பிரதிபலிக்கும் அடையாளங் களை ஏற்படுத்த வேண்டும் என தமிழ், முஸ்லிம் தலைவர்கள் கேட்டுக்கொண்டனர். அதற்கிணங்க சில நாட்களின் பின் தேசிய கொடியில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பாக எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, ஜீ.ஜீ.பொன்னம்பலம், ஜே.எல்.கொத்தலாவல, டி.பி.ஜாயா, எல்.ஏ.ராஜபக்ஸ, எஸ்.நடேசன், ஜே.ஆர்.ஜயவர்த்தன என்போர் அடங்கிய பாராளுமன்றக்குழு ஏற்படுத்தப்பட்டு அக்குழுவின் பரிந்துரைக்கமைய தமிழ், முஸ்லிம் இனங்களைக் குறிக்கும் வகையில் சம அகலம் கொண்ட மஞ்சள், பச்சை நிறமான இரண்டு நிலைக்குத்தான கோடுகள் உருவாக்கப்பட்டிருந்தன.
அத்துடன் பெளத்த மதத்தைக் குறிக்கும் வகையில் நான்கு அரசிலைகள் கொடியின் நான்கு மூலைகளிலும் இணைக்கப்பட்டு தேசிய கொடியாக 1950 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. அன்று முதல் தற்போது வரையில் இக்கொடியே பாவனையில் இருந்து வருகின்றது. இவ்வாறிருக்கையில் நீண்ட காலமாக இலங்கையில் புரையோடிப்போயிருந்த இனங்களுக்கிடையிலான விரிசல் நிலைமையானது முடிவுக்கு கொண்டுவருவதற்கான சிறந்த சந்தர்ப்பமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்று பட்டு தேசிய அரசாங்கமொன்றினை உருவாக்கி, நல்லாட்சியை முன்னெடுக்க ஆரம்பித்துள்ள வேளை அதனை சகித்துக்கொள்ள முடியாத சக்திகள் இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதில் ஒரு செயற்பாடாகவே தேசிய கொடியில் சிறுபான்மை மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசியக்கொடியினை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
குறிப்பாக நீதிமன்றத்தில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டத்திற்கு முரணாக முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் இங்கு காட்சிப்படுத்தப்பட்ட தேசியக்கொடி தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சம்பந்தப்பட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு எட்டப்படுவதற்குரிய அரிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ள இத்தருணத்தில், இவ்வாறான செயற்பாடுகள் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியவை.
அதே நேரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் எதிர்வரும் காலத்தில் இடமளிக்கமாட்டார் என்பதுடன் ஐக்கிய தேசியக் கட்சியும் துணைபோகாது என்பது உறுதியான விடயம்.
மேலும் சிறுபான்மை மக்களின் உரிமைகள், அடையாளங்கள் பாதுகாக்கப்பட்டு அவர்களுக்கான ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து சமூகங்களும் ஐக்கியமாக வாழும் சூழலை ஏற்படுத்துவதற்கான தக்க தருணம் ஏற்பட்டுள்ள வேளையில், வேண்டத்தகாத செயல்களை அனைத்து சக்திகளும் கைவிட்டு ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புக்களை நல்குவதே சிறந்ததாகும் என்றுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக