உங்கள் கணினி சரியாக வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்வீர்கள் ? அதை சரி செய்ய தொழில்நுட்பம் தெரிந்தவரின் உதவியை நாடுவீர்கள். சரிசெய்யும் செலவு அதிகம் என்றால் ,புதிய கம்ப்யூட்டர் வாங்கலாமா என்று யோசிப்பீர்கள்.
ஆனால் அமெரிக்காவில் தன் கம்யூட்டர் அடிக்கடி பழுதாவதைக் கண்டு விரக்தியடைந்த ஒருவர் அதை வீட்டுக்கு வெளியே எடுத்து வைத்து தனது துப்பாக்கியால் எட்டு முறை சுட்டு நொறுக்கியிருக்கிறார்.
இப்போது அவர் போலிஸ் கவனிப்பில் இருக்கிறார்.
அமெரிக்காவின் கொலராடோ ஸ்ப்ரிங்ஸ் என்ற நகரில் வசிக்கும் லூக்காஸ் ஹின்ச் என்ற இவர் தனது கம்ப்யூட்டரை "ctrl+alt+del" என்ற விசைகளை அழுத்தி பல முறை மீண்டும் இயக்க முயன்றும் அது பலனளிக்காததால், அதை வீட்டுக்கு வெளியே கொண்டு போய் வைத்து தன் துப்பாக்கியால் எட்டு முறை சுட்டு தனது ஆத்திரத்தைத் தீர்த்துகொண்டாராம்.
திங்கட்கிழமை மாலை இது நடந்திருக்கிறது.
ஆனால் நகர எல்லைக்குள் துப்பாக்கியால் சுடுவது அந்த நகரில் குற்றம் என்ற உள்ளூர் சட்டம் இருக்கிறது அதை மீறிய குற்றத்துக்காக போலிசார் அவரை சிறிது நேரம் தடுத்து வைத்திருக்கின்றனர்.
"கடந்த சில மாதங்களாகவே அவரது கம்யூட்டர் சரியாக வேலை செய்யவில்லை, அதனுடன் போராடிப் போராடி அவர் அலுத்திருக்கிறார்", என்று போலிஸ் அதிகாரி ஜெஃப் ஸ்ட்ரோஸ்னர் கூறினார்.
அவருக்கு என்ன தண்டனை தரப்படவேண்டும் என்பதை நீதிமன்றம் இனி முடிவு செய்யும்.
நம் எல்லோருக்குமே நமது கணினிகள் மீது பல சந்தர்ப்பங்களில் கோபம் வரத்தான் செய்கிறது. கம்ப்யூட்டரை உடைத்து நொறுக்கிவிடலாம் என்று எண்ணம், கனவுகூட வரும். எத்தனை பேருக்கு லூக்கஸ் பின்சுக்கு கிடைத்த 'பழிவாங்கும்' வாய்க்கிறது ? !
BBC Tamil

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக