தமிழ்த் திரைத்துறையில் தமிழர் அல்லாதவர்களின் ஆதிக்கத்தை கண்டித்து சென்னையில் வள்ளுவர் கோட்டம் முன்பாக உண்ணாவிரதம் நடைபெற்றது. தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் ஒருங்கிணைப்பு செய்த இந்த போராட்டத்தில் பல்வேறு தமிழ் அமைப்புகள் கலந்து கொண்டன.
விஜயகாந்த் முதல் விஷால் வரை தமிழ்த் திரையுலகில் வேற்றின மக்களே இன்னும் ஆளுமை செய்கின்றனர் என்பது இவர்களின் குற்றச்சாட்டாகும். இதனைக்கண்டித்து நடைபெற்ற இந்த போராட்டத்தில் தமிழ்த் திரையுலகை சார்ந்த நடிகர்கள் எவரும் வரவில்லை. திரைப்படத்துறையில் பணியாற்றும் சிலர் மட்டுமே இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
"திரைப்படத்துறையில் நுழைந்த பல்வேறு தமிழர் அல்லாதவர்கள் இப்போது அசுர வளர்ச்சி பெற்றுள்ளனர். நாளை அவர்களே தமிழகத்தின் அரசியல் தலைமையை கைப்பற்றக் கூடும். இன்று விஜயகாந்த் எதிர்க் கட்சி தலைவர் என்றால் நாளை விஷால் எனும் நடிகர் எதிர்க்கட்சி தலைவராக வருவார் . தொடர்ந்து தெலுங்கர்கள் அரசியல் தலைமைகளை கைப்பற்றினால் தமிழர்கள் எப்போதும் அடிமையாகவே இருக்க நேரிடும்" என்ற கருத்து இப்போராட்டத்தில் முன்வைக்கப்பட்டது.
thatstamil

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக