பிரித்தானியாவில் இருந்து இதுவரைகாலமும் வானலை வழியாக ஒலிபரப்பு செய்யப்பட்டுவந்த ஐ.பி.சி தமிழ் வானொலியின் வளர்ச்சியின் அடுத்த படியாய் தமிழர்களுக்கான தொலைக்காட்சி சேவையையும் ஆரம்பித்துள்ளது.
நேற்றைய தினம் மத்திய லண்டன்பகுதியில் இடம்பெற்ற இந்த ஐ.பி.சி தொலைக்காட்சியின் (IBC TV) ஆரம்ப நிகழ்வு பிரித்தானிய நேரம் மாலை 7:00 மணிக்கு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பல் துறைசார் ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், தொழொல் அதிபர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் தலைவி திருமதி. ஆனந்தி சூரியபிரகாசம், மூத்த ஊடகவியலாளரும், பிரபல அறிவிப்பாளருமான B.H.அப்துல் ஹமீட்த், சனல் 4 தொலைக்காட்சியின் டிரைக்டர் கலம் மைக்றே மற்றும் மூத்த ஊடகவியலாளர் விமல் சொக்கநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
நேற்று இடம் பெற்ற இந்த அங்குராற்பண விழா மிகச்சிறப்பாக இடம்பெற்றதோடு மட்டுமன்றி அங்கு காட்சிப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிகளும், தொலைக்காட்சியின் தொழில் நுட்பங்களும் சரவ்தேச தரத் தொலக்காட்சிகளுக்கு ஈடானதாக அதி நவீனமயமாக இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக