புலிகள் அமைப்பின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கொல்லப்படுவதற்கு, பிரபாகரனின் முன்னாள் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் வழங்கிய தகவல்களே காரணம் என சி.ஐ.ஏயின் இரகசிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள சி.ஐ.ஏயின் இரகசிய அறிக்கையில் 2007 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் திகதி சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டமை குறித்த இரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மற்றும் மே மாத காலப்பகுதியில் பிரபாகரன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டமை குறித்தும் சி.ஐ.ஏயின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை உட்பட இஸ்ரேல், ஈராக், பெரு, கொலம்பியா, ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா உட்பட பல நாடுகளின் கிளர்ச்சிக் குழுக்களை முறியடிப்பதற்கு, அதன் முக்கிய தலைவர்கள் எவ்வாறு குறி வைக்கப்பட்டனர் என்பது குறித்த சி.ஐ.ஏயின் அறிக்கையினையே விக்கிலீக்ஸ் பகிரங்கப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏயின் இந்த அறிக்கையானது ‘கிளர்ச்சிகளை முறியடிப்பதில் மிகச்சிறந்த நடைமுறைகள்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்தது.
21 பக்கங்களைக் கொண்ட குறித்த அறிக்கையானது, 2009 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 7 ஆம் திகதி சி.ஐ.ஏயினால் வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக