ட்ராப் ஷேடோ: வேர்ட் டாகுமெண்ட்டில் பாராக்களுக்கு பார்டர் அமைக்கலாம் என்பதனைத் தெரிந்து வைத்திருப்பீர்கள். இதனுடன் இன்னும் ஒரு படி மேலே சென்று, குறிப்பிட்ட டெக்ஸ்ட்டிற்கு எப்படி ட்ராப் ஷேடோ அமைத்து அழகு படுத்தலாம் எனப் பார்க்கலாம்.
ட்ராப் ஷேடோ (drop shadow) என்பதுவும் ஒருவகை பார்டரே. இது இரண்டு பக்கங்களில், மற்ற இரு பக்கங்களில் இருப்பதைக் காட்டிலும் சற்று அகலமாக இருக்கும். இது அச்சில் வரும்போது, இந்த குறிப்பிட்ட டெக்ஸ்ட் மட்டும் மற்றவற்றிலிருந்து சற்று உயரமாகத் தனியே காட்டப்படும். இதனை எப்படி அமைப்பது?
1. எந்த பாராவில் ட்ராப் ஷேடோவினை இணைக்க வேண்டுமோ, அதில் கர்சரை நிறுத்தவும்.
2. பார்மட் (Format) மெனுவில் இருந்து Borders and Shading என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Borders டேப் திறக்கப்பட்ட நிலையில் Borders and Shading டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
3. இங்கு ஏற்கனவே அமைக்கப்பட்டவை காட்டப்படும் இடது புறமான பட்டியலில் தேர்ந்தெடுக்கவும்.
4. தொடர்ந்து Width drop-down பட்டியலில், கோடு எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
ஸ்கிரீன் டிப் தோற்றம்: வேர்டில் மவுஸ் பயன்படுத்துகையில், சிறிய அளவில் மஞ்சள் வண்ணத்தில் சில இடங்களில் கட்டங்கள் எழுவதைப் பார்த்திருப்பீர்கள். உங்கள் மவுஸ் எதனைக் காட்டுகிறது என்பது, சிறிய அளவில் விளக்கும் செய்தி அந்தக் கட்டத்தில் இருக்கும். இவை ஸ்கிரீன் டிப்ஸ் (ScreenTips) என அழைக்கப்படுகின்றன.
மாறா நிலையில், இவை எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும். அதாவது நீங்கள் உங்கள் மவுஸைக் கொண்டு செல்கையில், குறிப்பிட்ட இடத்தில் இந்த கட்டச் செய்தி கிடைக்கப்பெறும். ஆனால், ஒரு சிலர், இது எதற்கு? தெரிந்தது தானே, என எரிச்சல் படுவார்கள். அப்படிப்பட்டவர்கள், சில செட்டிங்ஸ் அமைத்தால், இவை காட்டப்படாமல் இருக்கும்.
1. வேர்ட் ஆப்ஷன்ஸ் (Word Options) டயலாக் பாக்ஸினைப் பெறவும்.வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டனை அழுத்தினால், கிடைக்கும் கட்டத்தில் கீழாக Word Options கிடைக்கும். உங்களிடம் வேர்ட் 2010 இருந்தால், ரிப்பனில் பைல் டேப் அழுத்தி, பின்னர் Options என்பதில் கிளிக் செய்திடவும்.)
2. திரையின் இடது பக்கத்தில் Advanced என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு ஸ்குரோல் செய்து கீழாகச் சென்றால், Display என்ற பிரிவு கிடைக்கும்.
4. இதில் Show Shortcut Keys in ScreenTips என்ற செக் பாக்ஸில் டிக் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.
5. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
காப்பி அல்லது மூவ்: வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கும்tபோது, குறிப்பிட்ட டெக்ஸ்ட்டினை கிளிப் போர்டில் வைத்திருப்போம். அதனைப் பல இடங்களில் ஒட்ட வேண்டியதிருக்கும். இது சில வேளைகளில் படமாகக் கூட இருக்கலாம்.
அப்போது வேறு ஒரு டெக்ஸ்ட்டை எடுத்து இன்னொரு இட்த்தில் ஒட்ட எண்ணும்போது அதனை காப்பி செய்தால், கிளிப் போர்டில் உள்ள டெக்ஸ்ட் அல்லது படம் மறைந்துவிடும். ஆனால், அதனை மீண்டும் காப்பி செய்வது சற்று நேரம் எடுக்கும் செயலாக இருக்கலாம். அப்படிப்பட்ட வேளைகளில், கிளிப் போர்டுக்கு காப்பி செய்திடாமலேயே, டெக்ஸ்ட்டை இன்னொரு இட்த்தில் பேஸ்ட் செய்திடும் வழியைக் கடைப்பிடிக்கலாம்.
1. முதலில் வேறு ஒரு இடத்தில் ஒட்ட வேண்டிய டெக்ஸ்ட்டினைத் தேர்ந்தெடுக்கவும்.
2. தொடர்ந்து Shift+F2 கீகளை அழுத்தவும்.
3. அடுத்து, கர்சரை, டெக்ஸ்ட்டை எந்த இடத்தில் ஒட்ட வேண்டுமோ, அங்கு கொண்டு சென்று அமைக்கவும். இனி, என் டர் தட்டினால், டெக்ஸ்ட் கர்சர் இருக்கும் இடத்தில் ஒட்டப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக