வியாழன், 18 ஜூன், 2015

மாயன்களை விட இந்துக்களிடத்தில் தான் விண்வெளி ஆச்சரியங்கள் மிக அதிகம்

உலகமே மாயன்களையும். எகிப்தியரையும் அவர்களின் கட்டடக் கலைக்காக மிகவும் வியக்கிறது. அதிலும் குறிப்பாக அவர்கள் கட்டிய பிரமிட்டை வியப்புடன் பார்க்கிறது.



‘பிரமிட்’ என்றால் எகிப்தியரைப் பொறுத்தவரை இறந்தவர்களை அடக்கம் செய்த இடமாகிறது. ஆனால் மாயனைப் பொறுத்தவரை அவர்களின் பிரமிட்டுகள் கடவுளுக்காகக் கட்டப்பட்ட கோவில்கள். புனிதமான இடங்கள். ஆனால் இங்கு நாம் கவனிக்கத் தவறிய மிகப் பெரிய விசயம் ஒன்று உண்டு. பிரமிட் என்றால் அதன் வடிவம் என்ன? நான்கு பக்கங்களும் தட்டையான தளங்களையுடைய, கூம்பு போன்ற ஒரு அமைப்புதானே அப்படிப் பார்த்தால், கோவில்களின் கோபுரங்கள் அனைத்துமே பிரமிட் வடிவங்களிதானே கட்டப்பட்டிருக்கின்றன. இதை நாம் எப்படிக் கவனிக்காமல் விட்டோம்? நமது கட்டட வடிவத்தை அவர்கள் கவர்ந்து கொண்டார்களா? இல்¨, அவர்களது கட்டட வடிவத்தை நாம் பெற்றுக் கொண்டோமா....? இதற்குப் பதில் மாயன்களின் சரித்திரத்திலேயே உண்டு.

‘மாயன்களுக்குக் கிழக்கிலிருந்து வந்தவர்கள்தான் சகல அறிவையும் கற்றுத் தந்தார்கள்’ என்று இருக்கிறது. அப்படிக் கிழக்கில் இருந்து வந்தவர்கள் ஒன்று சுமேரியராக இருந்திருக்க வேண்டும். இல்லை தமிழர்களாக இருந்திக்க வேண்டும். அதுவும் இல்லை என்றால் சுமேரியர்கள் கூடத் தமிழர்களின் தொடர்புள்ளவர்களாக இருக்க சாத்தியம் உண்டு. இவையெல்லாவற்றுக்கும் சாட்சியங்களும் உண்டு. இப்போது மாயன்களுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்பதற்கு இது சாட்சியாக அமைகிறது என்பதை நீங்களே அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது அல்லவா? அத்துடன் இந்தக் கோவில்களின் அமைப்பையும் பாருங்கள். ஆச்சரியத்தின் உச்சத்துக்கே போய்விடுவீர்கள்.

மாயன்களுக்கு இவ்வளவு பிரமிக்கத்தக்க அறிவை யாரோ கொடுத்திருக்க வேண்டும். அவர்கள் ஏலியன்களாகவும் இருக்கச் சாத்தியம் உண்டு. ஒருவேளை அப்படி இருந்திருந்தால். அந்த ஏலியன்கள், பறக்கும் விமானத்தின் மூலமாகத்தான் மாயன்களை வந்தடைந்திருக்க வேண்டும் அல்லவா? அப்படி என்றால் விமானம் என்பதும் இங்கு முக்கியமாகின்றது அல்லவா?

இப்போது மிகவும் ஆச்சரியப்படக்கூடிய ஒரு செய்தியைக் கவனியுங்கள். நமது கோவில்களின் கோபுரங்களை நாம் எப்படி அழைக்கிறோம்? ‘விமானம்’ என்றுதானே அழைக்கிறோம். அதே நேரம், நமது பண்டைய காவியங்களில் பறந்து வரும் அனைத்துமே விமானம் என்றுதான் அழைக்கப்பட்டிருக்கிறது. இது உங்களை ஆச்சரியப்படுத்தவில்லையா? கட்டடமும், பறக்கும் சாதனமும் ஒரே பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த ஒற்றுமை உலகில் வேறு எந்த மொழிகளிலுமோ, இனங்களிலுமோ கிடையாது. இது எப்படி நமக்கு மட்டும் சாத்தியமாயிற்று.

சிவபுராணத்தில் வரும் மிக முக்கியமான ஒரு கதையையும் நாம் இங்கு கவனிக்க வேண்டும். ‘தாரகாசுரன்’ என்னும் அசுரன் முருகனால் அழிக்கப்பட, அவனது மூன்று மகன்களான வித்யுன்மாலி, தாரகாட்சன். கமலாட்சன் ஆகியோர் கடுந்தவம் செய்து, சிவனிடமிருந்து மூன்று பறக்கும் கோட்டைகளைத் தவமாகப் பெறுகின்றனர். பொன், வெள்ளி, இரும்பு ஆகிய மூன்று உலோகங்களாலானவை அந்தக் கோட்டைகள். அவற்றின் மீதேறிப் பறந்தபடி தேவர்களை அவர்கள் மூவரும் துன்புறுத்தினார்கள் என்கிறது புராணம்.

இப்போது நமது கேள்வி என்னவென்றால், கோட்டைகள் பறக்கு மாயின், கட்டடங்கள் பறக்கும் என்பதற்கு அது சாட்சியமாகிறதல்லவா? கோவில் கோபுரங்களும் அதை அடையாளப்படுத்தும் ஒரு கட்டட வடிவமா? அதனால்தான் அவற்றிற்கு விமானம் என்று பெயர் வந்திருக்கலாமா? அதாவது நமது மூதாதையரிடமிருந்த கோபுரங்கள் எல்லாம் பறக்கும் தன்மை உள்ளவையாக இருந்திருக்கலாமா?

இதில் மிகப் பெரிய இன்னுமொரு ஆச்சரியம் என்ன தெரியுமா? மேற்சொன்ன மூன்று பறக்கும் கோட்டைகளையும் வடிவமைத்துக் கட்டியவர் வேறு யாருமல்ல, சாட்சாத் ‘மயன்’ (மாயன்) என்பவர்தான். என்ன பெயர்ப் பொருத்தம் பிரமிப்பாக இல்லையா? நம்மிடம் இன்னுமொரு கதையும் உண்டு. இராவணனின் மனைவி மண்டோதரியின் அப்பாதான் இந்த மயன். இராவணனைத் தமிழ் அரசன் என்றுதான் பலரும் சொல்கின்றனர். அப்படியாயின் மயனும் ஒரு தமிழனா? இவற்றையெல்லாம் ஆராய்ச்சிக்குரிய, ஆச்சரியங்களாகவே பார்க்கின்றனர். அதனால் அவை பற்றிய ஒரு சரியான, விழிப்புணர்வான முடிவுக்கு அவர்களால் வர முடிகிறது.

மாயா, எகிப்து போன்ற இடங்களில் இருப்பதை விட, விண்வெளி சம்பந்தமான ஆச்சரியங்கள் இந்துக்களிடத்தில் தான் மிக அதிகமாகக் காணப்படுகின்றது. மாயாக்களும். எகிப்தியரும் தங்கள் மர்மங்களை ஆராய்ச்சி மூலமாக வெளிக்கொண்டு வர முயற்சி செய்யும் நேரத்தில், இந்துக்கள் தங்கள் ஆச்சரியங்களைக் கடவுளர்க்குள் திணித்துவிட்டு ஆராயப் பயப்படுகிறார்கள்.

இராவணன். சீதையைக் கவர்வதற்கு ‘புஷ்பக விமானம்’ பயன்படுத்தியது. இந்திரன் வானுலகத்தில் இருந்து தனது பறக்கும் தேரில் பூமிக்கு வந்தது, மணிமேகலை ‘மயில் பொறி’ என்னும் இயந்திரத்தின் மூலமாக இலங்கைக்குப் பறந்து சென்றது, கருடன், மயில், அன்னம் போன்ற பறவைகளை வாகனமாக்கி, வானில் கடவுள்கள் பறந்தது; இப்படிப்பட்ட பலவித இந்து மதக் கதைகளை நாம் நிறையவே படித்திருக்கிறோம். இவற்றை ஒரேயடியாகப் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட ஒன்று என்று அப்படியே ஒதுக்கித் தள்ள முடியாது. இவற்றிற்கு கடவுள் தன்மை கொடுக்கப்பட்டதால் மூட நம்பிக்கை என்னும் ஒரு நோக்கால், பகுத்தறிவு வாதிகளால் இது எதிர்க்கப்படுகிறது. ஆனால் இவற்றை விண்வெளி சார்ந்த ‘மிஸ்டரி’ வகை மர்மங்களாகப் பார்த்தால் ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்திப் பார்த்தால் எமக்குக் கிடைக்கும் உண்மைகள் வேறாக இருக்கும்.

Thinakaran
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல