மனித குலத்தைக் காக்க இறைவன் எத்தனையோ வசதிகளை செய்திருப்பதோடு உடல் நலத்தைப் பேண மூலிகைகளையும் படைத்திருக்கிறார். அவைகளில் துளசிச் செடியும் முக்கியமானதாகும். துளசியை அறியாத இந்துக்கள் இல்லையென்றே சொல்லலாம். கிறிஸ்தவர்களுக்கும் இச்செடி இயேசுநாதரின் சமாதியிலிருந்து முளைத்ததென்ற நம்பிக்கையுள்ளதால் கிழக்கு ஐரோப்பிய தேவாலயங்களிலே துளசி இலைகளை வணங்கும் வழக்கம் இருப்பதாக சொல்லப்படுகின்றது. “பிருந்தை" எனும் பக்தை திருமாலை விட்டுப் பிரியாமல் இருப்பதற்காக தவம்செய்து துளசிச் செடியாகப் பிறந்து அவர் கழுத்தை அலங்கரிக்க வரம் பெற்றதாக புராணமும் சொல்கிறது.
துளசிக்கு பல பெயர்கள் இருக்கின்றன. பிருந்தா, கிராம்யா, பகுமஞ்சரி, பகுத்திரி, பாவனி, விஷ்ணு வல்லபா, சூலக்னி, சுரசா, சுரபி, குல்லை, துழாய், வனம் என்பதாகும்.
துளசியில் பத்து வகைகள் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.
சிவதுளசி, விஷ்ணுதுளசி, கற்பூரத்துளசி, சிவப்புத்துளசி, காட்டுத்துளசி, சிறுதுளசி, பெருந்துளசி, பைரத்துளசி, கிருஷ்ணதுளசி.இலட்சுமி துளசி என்பவையாகும்.
துளசிச் செடி மத பேதமில்லாமல் ஒவ்வொருவர் வீட்டிலும் வளர்க்க வேண்டிய அதிமுக்கியமான ஒரு செடியாகும். பொதுவாக மரங்கள் பகலில் மட்டும் பிராண வாயுவை வெளியிடுகின்றன. துளசி இரவும் பகலும் பிராணவாயுவை வெளிவிடுகின்றது. சிறந்த மருத்துவக் குணங்கள் துளசி இலைகளுக்குண்டு. ஆயுர்வேத வைத்திய முறையிலும் இதனைப் பற்றி விசேடமாகக் கூறப்பட்டுள்ளது. இதன் நறுமணக்காற்றை சுவாசிப்பதில் நோய்கள் தீருகின்றன. துளசி வனத்தில் பிணம் எத்தனை நாள் இருந்தாலும் அழுகமாட்டாதென்று இன்றைய மருத்துவர்களும் ஒப்புக்கொள்கின்றனர். துளசியிலிருந்து வரும் காற்று நீண்ட ஆயுளைத் தருகின்றது.
தேள் கடித்த இடத்தில் துளசிவேரை நன்றாக அரைத்துப் பூசினால் வலிகுறையும். கருப்புத்துளசி "மலேரியா" காய்ச்சலைப் போக்குகின்றது என்று 1907இல் நடந்த ஒரு "ஒரு மலேரியா மாநாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கருந்துளசி அழகற்றவரை அழகுள்ளவராக ஆக்குகின்றது என்று "அதர்வணவேதம்" கூறுவதாகச் சொல்லப்படுகின்றது.
துளசிச்செடி உள்ள இடத்தில் கிருமிகள் மட்டுமல்லாது பாம்பு போன்றவையும் இருக்காது. துளசி உள்ள வீட்டில் இடியும் விழாதென்று விஞ்ஞானம் கூறுகின்றது. இச்செடியில் மின்சக்தி அதிகமுள்ளதால் இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துகின்றது. துளசி இலைகளை மென்றுதின்றால் பலவித வியாதிகளும் குணமாகின்றன. 30 மி.லீ துளசி ரசம் வீதம் 41நாள் அருந்தினால் பெண்களுக்கு நீண்ட நாள் இடைவெளியில் வரும் மாதவிடாய் பிரச்சினை தீரும்.
இப்படிப்பட்ட பல நற்குணங்கள் துளசிக்கு இருப்பதால் தான் நம்முன்னோர்கள் துளசிமணி மாலை அணியச் சொல்லியும் துளசிமாடம் வீடுகளில் வைத்து வணங்குமாறும் சொல்லியிருக்கிறார்கள். சில ஆலயங்களில் துளசி தீர்த்தமும் வழங்கப்படுகின்றது.
துளசிமாடம் வைத்து வணங்குவோர்கள் எந்தமுக வாசல் வீட்டிற்கானாலும் தென் மேற்குத்திசையில் அமைக்கும் போது மட்டும் மாடத்தை உயரமாகக் கட்டி வளர்க்கலாம். வடகிழக்கு, வடக்கு, கிழக்கு வீட்டில் வசிப்பவர்கள் பெரியமாடம் கட்டி வளர்க்கக் கூடாது. சிறிய தொட்டி, உயரம் குறைந்த பூச்சாடி, அல்லது நிலமட்டத்திலே வைத்து வணங்கலாம். இது முக்கியமானதாகும். திசைக்கேற்ப மாடம் உயரமாகவும் சிறியதாகவும் இருக்க வேண்டும் என்பது வாஸ்து விதியாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக