விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கின்றார் என வடமராட்சி துன்னாலையில் தெரிவித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த கஜேந்திரன் பொதுமக்களின் கொலை வெறித் தாக்குதலில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.
இன்று துன்னாலைப் பகுதியில் உள்ள நுாலகம் ஒன்றில் அரசியல் நடாத்துவதற்கா சிலரைச் சந்தித்த கஜேந்திரன் அவர்களுக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கதையளந்துள்ளார்.
இந்தக் கதையால் அப்பகுதியில் பரபரப்புத் தோன்றியது. புலம்பெயர்ந்து வெளிநாட்டில் இருந்து வந்திருந்த ஒருவர் கஜேந்திரன் இவ்வாறு தெரிவித்ததை அறிந்து கடும் கோபமுற்று அவர் நின்றிருந்த இடத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு வைத்து ”இன்னும் நீ இவ்வாறு கூறுவதை நிறுத்தவில்லையா, சனத்தை நீ இப்பவும் ஏமாற்றிக் கொண்டு திரிகின்றாயா? உன்ர தம்பியை காப்பாற்றுவதற்காக நீ மகிந்தவுடனும் கோத்தாவுடனும் பேரம் பேசியது எங்களுக்குத் தெரியும்” என்று கூறிக் கொண்டு கஜேந்திரனைத் தாக்கச் சென்றுள்ளார்.
அந்த இடத்தில் இருந்து தப்பியோடிய கஜேந்திரன் அப்பகுதியில் விடுமுறையில் வந்திருந்த தமிழ்ப் பொலிசாரிடம் தஞ்சம் புகுந்துள்ளார்.
இருப்பினும் அவர்களையும் மீறி தாக்க முற்பட்ட போது அவர் அந்த இடத்தில் இருந்து தப்பியோடியதாகத் தெரியவருகின்றது.
யவ்னாஜெட்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக