நீரிழிவால் இன்று பலருக்கும் டயபெடிக் ரெட்டினோபதி ஏற்படுகிறது. இங்கு, டயபெடிக் ரெட்டினோபதி மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றி விளக்குகிறார், நேத்ரா கண் மற்றும் விழித்திரை சிறப்பு சிகிச்சை மருத்துவமனையின் டொக்டர். தீபா, M.S., DNB., FRVS., FAICO (VR).,
முதலில் விழித்திரை பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். விழித்திரை நமது கண்ணின் உட்பகுதியில் அமைந்திருக்கும் உறை. அதாவது கண் கோளப்பகுதியின் உட்சுவர். இது மிக மெல்லியது, மிருது வானது. கண்ணில் சுரக்கும் ‘விட்ரியஸ்’ கூழானது விழித்திரைக்கும் லென்சுக்கும் இடையில்தான் இருக்கும். நாம் கண்களால் பார்க்கும் எல்லாப் பொருட்களின் பிம்பமும் விழித்திரையில் தலைகீழாகத் தான் விழும். மூளைதான் இவற்றை நேராக்குகிறது.
விழித்திரையில் பத்து அடுக்குகள் உள்ளன. இந்த அடுக்குகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. விழித்திரையில் உள்ள பார்வையகப் பகுதியில் கூம்பு அடுக்குகள் நிறைந்திருக்கும். பகல்பொழுது பார் வைக்கு இவையே முக்கிய காரணம்.
விழித்திரையில் உருவாகக்கூடிய சில முக்கிய பிரச்சினைகள் இருக்கின்றன. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஏற்படக்கூடிய மேக்குலா எனப்படும் பார்வையகப் பகுதியில் ஏற்படும் பாதிப்பு, விழித்திரை பிரிந்துவிடுவது என்பன அவற்றுள் சில.
விழித்திரையில் பாதிப்பிருந்தால் பார்வைத்திறனில் முரண்பாடுகள் தோன்றும். முக்கியமாக, பார்க்கும் பொருள் யாவும் வடிவ ஒழுங்கற்றுக் காணப்படும். நீளக் கோடுகள் பல வடிவங்களாகக் காட்சியளிக்கும். மேலும், பார்க்கும் பொருட்களின் வடிவம் சிறியதாகவோ பெரியதாகவோ தோன்றும். கண்ணில் கூச்சம் மிகுதியாக இருக்கும்.
டயபெடிக் ரெட்டினோபதி
நீரிழிவு உள்ளவர்களின் கண்களின் விழித்திரையில் உள்ள இரத்தக்குழாய்களில் ஏற்படும் பாதிப்புதான் நீரிழிவு விழித்திரை நோய் (டயபெடிக் ரெட்டினோபதி). நீரிழிவு விழித்திரை நோய், நீரிழிவுப் பிரச்சினை உள்ள எவருக்கும் வரலாம். நீண்ட நாட்களாக நீரிழிவுப் பிரச்சினை உள்ள ஆண்கள், பெண்கள் என இரு பாலாருக்குமே இன்றைய நாளில் இப்பாதிப்பு அதிகமாக வருகிறது.
நீரிழிவு உள்ளவர்களில் பாதிப்பேருக்கு அவர்கள் வாழ்நாளில் ஒரு குறிப்பிட்ட அளவு டயபெடிக் ரெட்டினோபதியினால் பாதிக்கப்படுகிறார்கள்.
டயபெடிக் ரெட்டினோபதிக்கு என்று ஆரம்ப கட்ட நிலையில் எந்த அறிகுறியுமே கிடையாது. டயபெடிக் ரெட்டினோபதி தீவிரமான நிலைக்கு வரும்வரை நம் பார்வையை பாதிப்பதில்லை. ஆனால் தீவிரமாகிவிட்டால் சிகிச்சையளிப்பது சிரமம். நீரிழிவு இருப்பதாக நிச்சயிக்கப்பட்டால் வருடம் ஒரு முறை முழுமையான கண் பரிசோதனையை செய்து கொள்வதே நல்லது.
டயபெடிக் ரெட்டினோபதி பாதிப்பு இருக்கிறதா என்பதை அறிய, கண்ணின் வெளிப்புறத் தோற்றம், பார்வைத் திறன், கண் நீர் அழுத்தம், பார்வைக்குறைபாடு, நிறக்குறைபாடு போன்ற அடிப்படை பரிசோதனைகளை செய்துவிட்டு கண்ணின் பாப்பா விரிவதற்காக சொட்டு மருந்திடப்படுகிறது. சுமார் 15 நிமிடங்கள் காத்திருந்து, கண்ணின் உள்ளறையை கண்ணின் பின்புறத்தை ‘இன்டைரக்ட் ஒப்தால் மாஸ்கோப்’ என்னும் கருவியைக் கொண்டு விழித்திரை முழுமையாகப் பார்க்க உதவும். வலியேதும் இல்லாத பரிசோதனையாக செய்யப்படுகிறது.
இச்சோதனையில் விழித்திரையில் வீக் கம் உள்ளதா? மேக்குலாவில் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண் மருத்துவர் கவனிப்பார். விழித்திரையை ஒட்டி ஏதே னும் கசிவு அல்லது கலங்கலான திட்டு ஏதும் சேர்ந்துள்ளதா என்பதனையும் கவனிப்பார். மேலும் பார்வை நரம்பில் பாதிப்பு ஏதேனும் உள்ளதா என்று ஆராய்வார். வேறு ஏதேனும் மாற்றங்கள் இரத்தக் குழாயில் ஏற்பட்டுள்ளதா என்று கவனிப்பார். ஒரு வேளை உங்களுக்கு மேக்குலாவில் பாதிப்பு ஏதும் ஏற்பட்டிருப்பதாக அல்லது சிகிச்சை தேவைப்படுவதாக உங்கள் கண் மருத்துவ நிபுணர் கருதினால் Fundus fluorescein angiogram என்ற பரிசோதனையை செய்ய அறிவுறுத்தலாம்.
இந்தச் சோதனையின் போது உங்கள் கையில் இரத்தக்குழாயின் வழியாக ஒரு கரைசல் செலுத்தப்பட்டு அது உங்கள் கண்ணின் விழித்திரையில் உள்ள இரத்தக் குழாயில் செல்வது புகைப்படமாக எடுக்கப்படுகிறது. அது விழித்திரையில் உள்ள ரத்தக்குழாயில் இரத்தக்கசிவு இருக்கும் இடத்தை யும், அளவையும் தெரிந்து சிகிச்சையளிக்க உதவியாக இருக்கும்.
ஒரு பொருளைப் பார்க்கும்போது அந்தப் பொருளின் மையப்பகுதி தெளிவா கத் தெரியவில்லை என்றால், அல்லது கலங்கலாகத் தெரிந்தால், கண்ணின் மேக் குலா பகுதியில் மேக்குலா (இடிமா) என்ற நோயின் அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். உடனடியாக கண் மருத்துவரின் கவனம் தேவை என்பதை மறவாதீர்கள்.
ஒருவேளை விழித்திரையின் மேலடுக்குகளில் உருவான புதிய இரத்தக்குழாய்கள் பாதிக்கப்பட்டு இரத்தம் கசிந்தால், பார்வை மறைக்கலாம். ஒரு சில நேரங்களில் மறைக்கப்பட்ட பகுதிகள் சிகிச்சை எடுத்துக் கொள்ளாமலேயே தெளிவாகி பார்வை தெளிவாகத் தெரியலாம். இருந்தாலும் இரத்தக் கசிவு மற்றும் நீர்க்கசிவு எப்போது வேண்டுமானாலும் மீண்டும் ஏற்படலாம். எனவே முதல் முறையாக பார்வையில் தெளிவின்மையை உணர்ந் தால் உடனடியாக கண் சிகிச்சை நிபுணரை சந்தித்து சிகிச்சை பெறுவதே பார்வையிழப்பைக் காப்பாற்றுவதற்கான வழி.
நீரிழிவு பாதிப்புடைய இரத்தம் கண் ணின் விழித்திரையில் செல்லும்போது விழித் திரையில் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்த மாற்றங்கள் விழித்திரையின் சிறிய இரத்தக்குழாய்களில் ‘மைக்ரோ ஆஞ்சியோபதி’ எனப்படும் மாற்றத்தை விளைவிக்கிறது. இதனால் இரத்தமும் நீர்க்கசிவும் ஏற்பட்டு விழித்திரை வீக்கமடைகிறது.
இந்தக் கசிவுகள் ‘ரெட்டினல் இடிமா’ மற்றும் கடின கசிவு எனப்படும் லைப்போ புரோட்டீன் வஸ்துகளையும் சேமித்து வைக்கிறது. இந்த கசிவு விழித்திரையின் முக்கிய பகுதியான மேக்குலாவை பாதிக் கும்போது பார்வை குறையும். வாசித்தல் மற்றும் நுண்ணிய பொருட்களைப் பார்ப்பதில் சிரமம் ஏற்படும்.
டயபெடிக் ரெட்டினோபதி முதல் நிலை யில் கண்டுபிடிக்கப்பட்டால், சிகிச்சை தேவையில்லை என்றாலும், நீரிழிவு விழித்திரை நோயைத் தவிர்ப்பதற்காக, நீரிழிவு உள்ளவர்கள் இரத்த சர்க்கரையின் அளவு, இரத்த அழுத்த அளவு, இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு கட்டுக்குள் இருக்கும்படி வாழ்க்கை முறையை அமைத் துக்கொள்ள மருத்துவர் அறிவுறுத்துவார். பாதிப்பின் அளவைப் பொறுத்து மருந்து அல்லது லேசர் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சையை பரிந்துரை செய்யலாம்.
லேசர் சிகிச்சை
இரத்தக் குழாய்கள் அசாதாரணமாகவும் பலவீனமானதாகவும் இருப்பதால் உடைந்து இரத்தம் வெளியேற காரண மாகின்றன. எனவே, பார்வைக்குறைவு அல்லது பார்வையிழப்பு நேரிடுவதற்கும் காரணமாகின்றன. இழந்த பார்வையை மீட்க முடியாவிட்டாலும் இருக்கின்ற பார்வையைக் காப்பாற்ற வேண்டிய தேவைக்காக லேசர் சிகிச்சை வழங்கப்படுகிறது.
இந்த லேசர் சிகிச்சையில் 1000 முதல் 2000 லேசர் கற்றைகள் பாய்ச்சப்பட்டு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய, புதிதாக உருவான அசாதாரணமான மற்றும் பலவீனமான இரத்தக்குழாய்கள் எரிக்கப்படுகின்றன. அதன் மூலம் இரத்தம் மற்றும் நீர்க்கசிவு ஏற்பட்டு பார்வை பாதிப்பது அல்லது பறிக்கப்படுவது தடுக்கப்படுகிறது.
லேசர் சிகிச்சைக்குப் பிறகு சில மணி நேரங்கள் பார்வை மங்கலாகத் தெரியும். பக்கவாட்டுப்பார்வையும், இருட்டுக்குள் பழகுவதும் பாதிக்கப்படலாம். இரத்தக்கசிவு மற்றும் நீர்க்கசிவு மிக அதிகமாக உள்ள நோயாளிகளுக்கு லேசர் சிகிச்சைக்குப் பின்னரும் பார்வையிழப்பிற்கான வாய்ப்பு இருப்பதால் அவர்களுக்கு ‘விட்ரெக்டமி’ எனப்படும் சத்திர சிகிச்சை தேவைப்படும் என்பதையும் டயபெடிக் ரெட்டினோபதி நோயாளிகள் தெரிந்து கொள்ளவேண்டும். புதிய, வளர்ச்சியடைந்த சத்திர சிகிச்சை முறையில் விட்ரெக்டமி மற்றும் விட்ரியஸ் மைக்ரோ சர்ஜரி மூலமாக 60 முதல் 70வீதம் வரை டயபெடிக் ரெட்டினோபதியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பார்வையில் முன்னேற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது.
விட்ரெக்டமியின் நோக்கம், கண்ணின் மையப்பகுதியில் உள்ள இரத்தத்தையும் அசாதாரணமாக பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்குவதுமேயாகும்.
இதில் கண்ணின் மையப் பகுதியில் அதீத இரத்தக் கசிவினால் பாதிக்கப்பட்ட, பார்வையிழப்பை ஏற்படுத்தும் விட்ரியஸ் நீக்கப்பட்டு வேறு உப்புக் கரைசல் நிரப் பப்படுகிறது.
இதன் மூலம் பார்வை குறையும் அபாயத்தையும், விழித்திரை பிரிதல் எனப்படும் நோயின் இறுதிக் கட்டத்தையும் தடுக்க முடியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக