திங்கள், 3 ஆகஸ்ட், 2015

கொலம்பிய அழகுராணி போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் சீனாவில் மரண தண்டனையை எதிர்நோக்குகிறார்..!!

ஜூலி­யானா லோபஸ் எனும் இந்த அழ­கு­ராணி யுவதி சீனா­வுக்கு கொகேய்ன் எனும் போதைப்­பொ­ருளை கடத்திச் சென்­ற­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ளார்.

அவரை சீன அதி­கா­ரிகள் கடந்த மாதம் 18 ஆம் திகதி கைது செய்­தனர்.



22 வய­தான ஜூலி­யானா லோபஸ், கொலம்­பி­யா வின் வட­மேற்கு பிராந்­தி­ய­மொன் றின் அழ­கு­ரணி போட்­டி­யொன்றில் முத­லிடம் பெற்று முடி­சூட்­டப்­பட்­டவர். கடந்த வாரம் மிஸ் வேர்ல்ட் கொலம்­பிய அழகு­ராணி போட்­டி­யி லும் அவர் பங்­கு­பற்­ற­விருந்தார்.

ஆனால், தற்­போது அவர் சீன சிறைச்­சா­லை­யொன்றில் விளக்­க­ம­றியல் கைதி­யாக உள்ளார்.

மடிக்­க­ணி­னி­யொன்­றுக்குள் வைத்து போதைப்­பொ­ருளை கடத்தி வந்­த­தாக சீன அதி­கா­ரி கள் அவர்­மீது குற்றம் சுமத்­தி­யுள்­ளனர்.

சீனாவில் போதைப்­பொருள் கடத்தல் குற்­றங்­க­ளுக்கு ஆயுள்­தண்­டனை அல்­லது மரண தண்­டனை விதிக்­கப்­ப­டலாம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இறு­தி­யாக பாரிஸ் நகரில் வைத்து தம்­முடன் ஜூலி­யானா தொடர்­பு­கொண்டார் என அவரின் குடும்­பத்­தினர் தெரி­வித்­துள்­ளனர்.

அதன்பின் அவர் மின்­னஞ்­சல்­க­ளுக்கோ, பேஸ்புக், வட்ஸ் அப் மூல­மான அழைப்­பு­க­ளுக்கோ பதி­ல­ளிக்­க­வில்லை என அவர்கள் கூறு­கின்­றனர்.

ஜூலி­யானா லோபஸ், சீனா­வுக்குச் சென்­றமை இது முதல் தடவை அல்­ல­வென அவரின் குடும்­பத்­தி­னரும் நண்­பர்­களும் தெரி­வித்­துள்­ளனர்.

சீனா­வுக்குச் சென்று ஆடைகள், பைகள் முத­லா­ன­வற்றை வாங்­கிக்­கொண்­டு­வந்து கொலம்­பி­யாவில் விற்­பனை செய்­வதை அவர் வழக்­க­மாக கொண்­டி­ருந்தார் எனவும் இந்தத் தட­வையும் அதற்­கா­கவே அவர் சீனா­வுக்குச் சென்றார் எனவும் ஜூலி­யா­னாவின் நண்­ப­ரான லிஸ் ஹெர்­னாண்டஸ் தெரி­வித்­துள்ளார்.

“அவர் குற்­றச்­செ­யல்­களில் ஈடு­பட்­டி­ருக்க மாட்டார் என இதயம் கூறு­கி­றது. அவர் அனைத்து குற்­றச்­சாட்­டு­க­ளி­லி­ருந்தும் விடு­ப­டுவார் என நம்­பு­கிறேன்” எனவும் லிஸ் ஹெர்­னாண்டஸ் தெரி­வித்­துள்ளார்.

பல்­க­லைக்­க­ழக மாண­வி­யான ஜூலி­யானா, கொலம்­பி­யாவில் மொடல்கள், நட்­சத்­தி­ரங்கள் பங்­கு­பற்றும் கால்­பந்­தாட்ட அணி­யொன்­றி லும் அங்கம் வகித்­து­வந்தார்.

தற்­போது ஜூலி­யானா லோபஸின் விடு­த­லைக்­கான நட­வ­டிக்­கைக்­காக சீனா­வுக்குச் செல்­வ­தற்கு அவரின் தாயார் திட்­ட­மிட்­டுள்­ளார்.

இப்­ப­ய­ணத்­திற்­கா­கவும் ஜூலி­யா­னா­வுக்­கான சட்­டத்­த­ர­ணி­யொரு­வரை நிய­மிப்­ப­தற்­கா­கவும் தம்­மிடம் போதிய பணம் இல்­லா­த­தால் தமது வீட்டை விற்­பனை செய்­வ­தற்கு அவரின் பெற்றோர் தீர்­மா­னித்­துள்­ள­னராம்.

ஜூலி­யா­னாவின் தாயார் சீனா­வுக்குச் செல்­வ­தற்கு நிதி திரட்­டு­வ­தற்­காக கண்­காட்சி கால்பந்தாட்டப் போட்டியொன்று நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனச் சிறைச்­சா­லை­களில் நூற்றுக்கும் அதிகமான கொலம்பிய பிரஜைகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் போதைப்பொருள் தொடர் பான குற்றச்சாட்டுகளுக்காக சிறையிலடைக்கப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல