இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவரது குடும்பத்தினர் முயற்சித்த போது, அவரது உடல் வீட்டு வாசல் கதவின் அகலத்தை விடவும் பெரிதாக இருந்ததால் அவரை அங்கிருந்து வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் குடும்ப உறுப்பினர்கள் உதவி கோரி அவசரசேவைப் பிரிவினருக்கு அழைப்பு விடுத்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படைவீரர்கள் பாரந்தூக்கி உபகரணம் மற்றும் பாரிய வலை என்பவற்றைப் பயன்படுத்தி அவரை அவரது வீட்டிலிருந்து வெளியேற்றினர்.
இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இது தொடர்பில் மேரி பிறவுண் கண்ணீருடன் விபரிக்கையில், தான் உயிர் வாழ விரும்புவதாகவும் அதற்காக தனது உடல் நிறையைக் குறைக்க எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக