பொதுவாகவே ஒவ்வொரு மனிதனுக்கும் பிறந்தது முதல் முப்பது ஆண்டுகளுக்கு வரை தான் எலும்புத் திசுக் கள் ஆரோக்கியமாக இருக்கும். அதன் பின் ஒவ்வொருவரின் உடலமைப்பு மற்றும் ஆரோக்கிய பராமரிப்பைப் பொறுத்து மேலும் பத்து ஆண்டுகள் அவை வலுவாக இருக்கலாம். அதன் பின் அவை சோர்வடையத் தொடங்கும் ஒரு சிலருக்கு தொடக்க நிலையிலேயே இவ்வகையான எலும்புத் திசுக்கள் வலு குறைந்தேயி ருக்கும்.
இந்நிலையில் சாப்பிடும் ரசாயனம் கலந்த உணவுப் பொருளாலும்,மாசடைந்த சுற்று சூழலாலும் ஒவ்வொருவருடைய உடலில் உள்ள எலும்புகளில் கட்டிகள் உருவாகும், மருத்துவ ரீதியாக ஒரு உண்மையைச் சொல்லபோனால் உடம்பின் எந்த பாகத்திலும் கட்டிகள் தோன்றும், தோளில் மட்டும் தான் கட்டிகள் வரவேண்டும் என்பது கட்டாயமல்ல, சரி உடலில் உள்ள எல்லா எலும்புகளிலும் கட்டிகள் வருமா? என்றால் வரலாம், வராமல் கூட இருக்கலாம். இதில் எந்த உறுதியையும் மருத்துவத்துறை தரு வதில்லை, ஆனால் கை மற்றும கால் எலும்புகளில் தான் அதிகளவில் கட்டிகள் வருகின்றன என்கிறது ஓர் ஆய்வு,
எலும்புகளில் வரும் கட்டிகளை பொது வாக இரண்டு வகையாக பிரிப்பார்கள், ஒன்று சாதாரண கட்டி, மற்றொன்று புற்றுநோய் கட்டி, ஒருசிலருக்கு திடீரென்று உடலில் வலிகள் தோன்றும், அதில் சில பேருக்கு மட்டும் அவ்விடத்தில் கட்டி உருவாகும், அதிலும் சில கட்டிகள் தான் நரம்புகளையும் திசுகக்களையும் பாதிக்கும், இம்மாதிரியான தருணங்களில் மருத் துவரை விரைந்து அணுகி, தங்களின் வயது, தங்க ளுக்கு எத்தனை நாளாக கட்டி உள்ளது, எப்படி தொடங்கியது? உடலில் வேறு பகுதிகளில் கட்டிகள் உருவாகியிருக்கிறதா? கட்டியின் வளர்ச்சி வேகம் என்ன? இதனால் தங்களின் நடைமுறை வாழ்கை பாதிக்கப்பட்டிருக்கிறதா? என்று மருத்துவர் தொடுக்கும் வினாக்களுக்கு உண்மையான பதிலை சொல்லவேண்டும்,
இதனையடுத்து மருத்துவர்கள் எக்ஸ் றே மற்றும் இரத்த பரிசோதனை மூலம் தங்களுக்கு எம்மாதிரியான கட்டிகள் வந்திருக்
கிறது என்பதை உறுதி செய்வர், மேலும் சில தருணங்களில் சிலருக்கு எம் ஆர் ஐ ஸ்கேன் மற்றும் சி டீ ஸ்கேன் ஆகிய பரிசோதனைகளுக்கும் உட்படுத்த நேரிடும், இதன் மூலமாக கட்டியின் தன்மை முழுமையாக மருத்துவரால் தீர்மானிக்க இயலும்.
தோளின் மேற்பகுதியிலிருந்தோ அல்லது கொழுப்பில் இருந்தோ கட்டிகள் தோன்றியிருக் கிறது என்று மருத்துவரால் உறுதி செய்யப்பட் டால் அவை சாதாரண கட்டிகள் எனப்படும். ஆனால் சில தருணங்களில் நரம்புகளை அழுத்தும் கட்டிகள், அதிக வலியை உருவாக்கும் கட்டிகள், வேகமாக வளரும் கட்டிகள் அழகை பாதிக்கக்கூடிய கட்டிகள் போன்ற கட்டிகளுக்கு சத்திர சிகிச்சை அவசியம் தேவைப்படும்,
ஆகவே சாதாரண கட்டிகள் எவை என்பதை முதலில் நாம் தெரிந்துகொண்டால், அதாவது அதன் அறிகுறிகளை அறிந்து கொண்டால் மற்றவை புற்று நோய் கட்டி என்று நீங்களே தெரிந்துகொள்வீர்கள் தானே, அவை என்னெ ன்ன எனில், முதலில் வலி இருக்காது, மெது வாக வளரும், வேறு உபாதைகள் இருக்காது, பல இடங்களுக்கும் பரவாது, உடல் எடையில் பெரிய அளவில் மாற்றம் இருககாது, கட்டி மிகச்சிறியதாக இருக்கும், மேற்கண்ட இந்த அறிகுறிகளை கடந்து வேறு ஏதேனும் அறிகுறி கள் தென் பட்டால் அவை சாதாரண கட்டி அல்ல என்றும் புற்று நோய் கட்டி என்று அறியலாம்.
டாக்டர் S. ரகுராமன், M.S.,
- தொகுப்பு: அனுஷா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக