மெக்ஸிக்கோ வைச் சேர்ந்த 11 வயது சிறு வன் ஒருவனின் கழுத்தில் வளர்ந்திருந்த ஒரு அடி நீளமான இராட்சத கட்டியை 16 மணி நேர சிக்கலான அறுவைச்சிகிச்சையை மேற்கொண்டு அமெரிக்க மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி அவனது உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
சியூடாட் ஜுவாரெஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த ஜோஸ் அந்தோனியோ ரமிரெஸ் என்ற மேற்படி சிறுவனின் கழுத்தில் ஏற்பட்ட இராட்சத கட்டி அவனது சுவாசக் குழாயை பாதித்ததுடன் அவனது இருதயம் மற்றும் நுரையீரல் ஆகியவற்றுக்கும் கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் கிறிஸ்தவ தொண்டு ஸ்தாபனமொன்றின் உதவியுடன் அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்ட அவனுக்கு அமெரிக்க நியூ மெக்ஸிக்கோ பிராந்தியத்திலுள்ள மருத்துவமனையில் அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவனது கழுத்திலிருந்த கட்டி வெற்றி கரமாக அகற்றப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக