கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். தமிழகத்தின் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு இலங்கையின் முன்னாள் அமைச்சரான கருணா அளித்த பேட்டியில், பிரபாகரன் கைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறியிருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சரத் பொன்சேகா, பிரபாகரனின் தலையில் காயம் ஏற்பட்டிருந்தது. மண்டையோட்டின் ஒரு பகுதி பிளவுபட்டிருந்தது. அவர் தன்னைத் தானே சுட்டிருந்தால் தலையின் அடுத்த பக்கத்தின் வழியாக தோட்டாதான் வெளியேறியிருக்கும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.
அவரது தலையில் மோட்டார் குண்டு அல்லது ஷெல் ஒன்றின் சிதறல்தான் தாக்கியிருக்கலாம். மேலும் பிரபாகரன் உடல்தான் அது என்பதை அடையாளப்படுத்த மரபணு சோதனையும் நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டு பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாதன் என்ற கே.பி., யுத்தத்தில் ஒருவர் எவ்வாறு உயிரிழந்தார் எனக் கூறுவது சரியானதாக இருக்காது. பிரபாகரனைச் சுற்றி இருந்தவர்கள் அனைவருமே நந்தி கடலில் மரணமடைந்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
தொடரும் மர்மம்!!
Thatstamil

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக