பொதுவாகவே, மைக்ரோசாப்ட் ஆபீஸ் கூட்டுத் தொகுப்பில் உள்ள புரோகிராம்கள் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படும். எடுத்துக் காட்டாக, வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில், எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் உள்ள சார்ட் ஒன்றை அப்படியே பதித்திடலாம். இதனைக் கீழ்க்கண்ட செயல்பாடுகள் மூலம் மேற்கொள்ளலாம்.
1. வேர்ட் டாகுமெண்ட்டில் பதிக்க விரும்பும் எக்ஸெல் சார்ட்டினைத் தேர்ந்தெடுக்கவும். சார்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு பகுதியைத் தேர்ந்தெடுக்கக் கூடாது.
2. உடன் கண்ட்ரோல் + சி (Ctrl+C ) அழுத்தி, அதனை கிளிப் போர்டில் காப்பி செய்திடவும்.
3. அடுத்து வேர்ட் டாகுமெண்ட் செல்லவும்.
4. டாகுமெண்ட்டில் எந்த இடத்தில், காப்பி செய்த சார்ட்டினை ஒட்ட வேண்டுமோ, அந்த இடத்திற்கு கர்சரைக் கொண்டு செல்லவும்.
5. ரிப்பனில் ஹோம் டேப் தேர்ந்தெடுக்கவும்.
6. Paste டூலில் உள்ள கீழ் விரி அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். பின்னர் Paste Special என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் இப்போது Paste Special டயலாக் பாக்ஸைக் காட்டும்.
7. இங்கு Microsoft Office Excel Chart Object என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
8. இதில் Paste Link ரேடியோ பட்டன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
9. பின்னர் ஓகே கிளிக் செய்திட்டால், வேர்ட், நீங்கள் தொடர்பு படுத்திய சார்ட்டினை, டாகுமெண்ட்டில் இணைத்துக் கொள்ளும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக