ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

நேதாஜி சுபாஷ் சந்­தி­ரபோஸ் உயி­ரி­ழந்­தது எப்­போது..?

இந்­தி­யாவில் எழுந்­துள்ள புதிய சர்ச்சை!

இந்­திய சுதந்­திரப் போராட்ட வர­லாற்றில் நேதாஜி சுபாஷ் சந்­தி­ர­போ­ஸுக்கு தனி இடம் உண்டு. ஆங்­கி­லே­ய­ரி­ட­மி­ருந்து இந்­தியா விடு­தலை பெற­வேண்டும். அதற்கு ஒரே வழி போர்! அதைத் தவிர வேறு வழியே இல்லை என்று நம்­பி­யவர் நேதாஜி. அந்தத் தீவி­ர­மான நம்­பிக்­கையின் விளை­வுதான் அதி­ர­டி­யாக அவரை போராட்டக் களத்தில் குதிக்க வைத்­தது; துப்­பாக்கி ஏந்த வைத்­தது. இரண்டாம் உலகப் போரில் ஜப்­பா­னுடன் இணைந்து நேதா­ஜியின் இந்­திய தேசிய இரா­ணு­வப்­படை பிரிட்­ட­னுக்கு எதி­ராகப் போரிட்­டது.



போர் சூழலில் நேதா­ஜியின் போர் வியூ­கங்­களும், தாக்கும் முறை­களும் மிக நேர்த்­தி­யா­ன­தாக அமைந்­தி­ருந்­தன. அவ­ரு­டைய இந்த வித்­தி­யா­ச­மான அணு­கு­மு­றையைக் கண்டு பிரித்­தா­னிய இரா­ணு­வமே அதிர்ந்­தது; நேதா­ஜியின் அதி­ரடித் தாக்­கு­தலைக் கண்டு ஜப்பான் பிர­மித்து நின்­றது; அவரைப் பாராட்­டி­யது. இப்­படி உல­கமே அதிர்ந்த, இந்­திய விடு­த­லைக்­காகப் போரிட்ட நேதாஜி சுபாஷ் சந்­தி­ர­போஸின் வாழ்க்கை வர­லாற்றில் அவ­ரது மரணம் மாத்­திரம் புரி­யாத புதி­ராக இருந்து­வ­ரு­கி­றது.

பிறப்பு

நேதாஜி சுபாஷ் சந்­தி­ரபோஸ், 1897 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 23 ஆம் திகதி இந்­தி­யாவின் ஒரிஸா மாநி­லத்­தி­லுள்ள கட்டாக் என்ற இடத்தில் ஜான­கிநாத் போஸுக்கும், பிர­பா­வதி தேவிக்கும் ஒன்­ப­தா­வது மக­னாக, எட்டு சகோ­த­ரர்­க­ளு­டனும் ஆறு சகோ­த­ரி­க­ளு­டனும் பிறந்தார். இவ­ரு­டைய தந்தை ஒரு புகழ்­பெற்ற வழக்­க­றி­ஞ­ராவார். இவரின் தாய் தெய்­வ­பக்தி மிக்­க­வ­ராக விளங்­கினார். இவர்கள் வங்­காள இந்துக் குடும்­பத்தைச் சேர்ந்­த­வர்­க­ளாவர்.

ஆரம்ப வாழ்க்கை

நேதாஜி சுபாஷ் சந்­தி­ரபோஸ், தன்­னு­டைய ஆரம்பக் கல்­வியை, கட்­டாக்­கி­லுள்ள பெப்டிஸ்ட் மிஷன் ஆரம்பப் பள்­ளியில் தொடங்­கினார். பின்னர், 1913 இல் கொல்­கத்தா ரேவன்ஷா கல்­லூ­ரியில் தன்­னு­டைய உயர் கல்­வியை முடித்த அவர் படிப்பில் முதல் மாண­வ­னா­கவும் விளங்­கினார். சிறு­வ­ய­தி­லி­ருந்தே சுவாமி விவே­கா­னந்­தரின் ஆன்­மிகக் கொள்­கை­களை ஆர்­வ­முடன் படித்தும் வந்தார்.

1915 ஆம் ஆண்டு கொல்­கத்தா பிரெ­சி­டெ­னன்சி கல்­லூ­ரியில் சேர்ந்தார். இங்கு படித்­துக்­கொண்­டி­ருக்­கையில், சி.எஃப்.. ஓட்டன் என்ற ஆசி­ரியர், இந்­தி­யா­விற்கு எதி­ரான கருத்­து­களை கூறினார். இதன்­போது ஆசி­ரியர் மீது கடும்­கோபம் கொண்டார். இதனால் பெரும் தர்க்கம் ஏற்­பட, கல்­லூரி நிர்­வாகம் சுபாஷ் சந்­தி­ர­போஸை கல்­லூ­ரியை விட்டு நீக்­கி­யது.

பின்னர், ஸ்கொட்டிஷ் சேர்ச் கல்­லூ­ரியில் சேர்ந்து இளங்­கலைப் பட்டம் பெற்ற அவர், தன்­னு­டைய பெற்­றோரின் விருப்­பத்­தின்­பேரில் 1919 ஆம் ஆண்டு ஐ.சி.எஸ். கல்­வியை கற்­ப­தற்­காக லண்­ட­னுக்கு சென்றார். அவர் ஐ.சி.எஸ். பரீட்­சையில் நான்­கா­வது மாண­வ­னாக தேர்ச்சிப் பெற்றார். 1919 இல் நடந்த ‘ஜொலியன் வாலாபாக் படு­கொலை சம்­பவம்’, சுபாஷ் சந்­தி­ர­போஸை இந்­தி­யாவின் சுதந்­திர போராட்­டத்தில் ஈடு­பட வழி­வ­குத்­தது.

இந்­தி­யாவின் அம்­ரித்சர் நகரில் ஜொலியன் வாலா பாக் என்ற இடத்தில், ஆண்கள், பெண்கள், குழந்­தைகள் எனப் பாராமல் ஆங்­கி­லேய அரசு , ரெஜினோல்ட் டையர் என்ற இரா­ணுவ அதி­கா­ரியின் தலை­மையில் அப்­பாவி மக்­களைக் கொன்று குவித்­தது. அப்­பாவி மக்கள் மீது நடத்­தப்­பட்ட இந்த தாக்­குதல், வெள்­ளையர் ஆட்சி மீது சுபாஷ் சந்­தி­ர­போ­ஸிற்கு வெறுப்­பு­ணர்வை அதி­க­ரித்­தது மட்­டு­மல்­லாமல், லண்­டனில் தன்­னு­டைய பணியை துறந்து 1921 ஆம் ஆண்டு இந்­தியா திரும்பி வரவும் செய்­தது.

திரு­மண வாழ்க்கை

பாரத நாட்டின் விடு­த­லைக்­காக வியன்னா, செக்­கோஸ்­லோ­வே­கியா, போலந்து, ஹங்­கேரி, இத்­தாலி, ஜேர்­மனி, ஐரோப்பா, ஒஸ்­தி­ரியா போன்ற நாடு­க­ளுக்கு பயணம் செய்த நேதா­ஜிக்கு, ஒஸ்­தி­ரி­யாவைச் சேர்ந்த எமிலி என்­ப­வரின் அறி­முகம் கிடைத்­தது, இவர்­களின் சந்­திப்பு பிறகு காத­லாக மலர்ந்து, 1937 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் திகதி இரு­வரும் திரு­மணம் செய்­து­கொண்­டனர். இவர்கள் 1942 ஆம் ஆண்டு, பெண் பிள்­ளை­யொன்றை பெற்­றெ­டுத்­தனர். அவ­ளுக்கு அனிதா என பெயர் சூட்­டினர்.

சுதந்­திரப் போராட்­டத்தில் நேதா­ஜியின் பங்கு

‘தன்­னு­டைய நாட்டை அடி­மைப்­ப­டுத்தி வைத்­தி­ருக்கும் ஆங்­கி­லே­ய­ரிடம் வேலை செய்யக் கூடாது' எனக் கருதி தன்­னு­டைய பத­வியை இரா­ஜி­னாமா செய்­து­விட்டு இந்­தியா திரும்­பிய சுபாஷ் சந்­தி­ரபோஸ், இந்­திய தேசிய காங்­கிரஸ் கட்­சியில் இணைந்தார். சி.ஆர். தாசை அர­சியல் குரு­வாக கொண்டு போராட்­டத்தில் ஈடு­ப­டவும் தொடங்­கினார். 1922 ஆம் ஆண்டு வேல்ஸ் இள­வ­ர­சரை இந்­தி­யா­விற்கு அனுப்ப பிரித்­தா­னிய அரசு தீர்­மா­னித்­தது. இதனால் வேல்ஸ் இள­வ­ர­சரின் வரு­கையை எதிர்த்துப் போராட்­டங்கள் நடத்த காங்­கிரஸ் முடி­வு­செய்­தது. கொல்­கத்தா தொண்டர் படையின் தலை­வ­ராக பொறுப்­பேற்று, தன்­னு­டைய எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­திய நேதாஜி மற்றும் காங்­கிரஸ் தொண்­டர்கள் பல­ரையும் ஆங்­கி­லேய அரசு கைது செய்­தது.

சட்­ட­சபை தேர்­தல்­களில் இந்­தி­யர்கள் போட்­டி­யிட்ட சட்­ட­ச­பை­களை கைப்­பற்­று­வதன் மூலம் இந்­தியா சுதந்­தி­ரத்தை விரைவில் பெற­மு­டியும் என சி.ஆர். தாஸ் மற்றும் நேருவும் கரு­தினர். ஆனால், காந்­தியும் அவ­ரு­டைய ஆத­ர­வா­ளர்­களும் அதனை எதிர்த்­தனர். இதனால் காந்­திக்கும், தாஸுக்கும் கருத்­து­வேறு­பாடு ஏற்­பட்­டது. இதனால், சி.ஆர் தாஸ். கட்­சி­யி­லி­ருந்து பிரிந்து , சுயாட்சிக் கட்­சியை தொடங்­கி­யது மட்­டு­மல்­லாமல், 'சுய­ராஜ்­ஜியா' என்ற பத்­தி­ரி­கை­யையும் ஆரம்­பித்து , அதன் பொறுப்பை நேதா­ஜிக்கு வழங்­கினார்.

1928 ஆம் ஆண்டு காந்­தி­ஜியின் தலை­மையில் தொடங்­கிய காங்­கிரஸ் மாநாட்டில் சுயாட்­சிக்கு எதிர்ப்புக் காட்­டிய காந்­தி­ஜியின் முடிவை, ‘தவறு’ என நேதாஜி எதிர்த்து கூறினார். இதனால் காந்­திக்கும், நேதா­ஜிக்கும் இடையே கருத்து வேறு­பாடு ஏற்­பட்­டது. பிறகு, இந்­திய விடு­த­லைக்கு ஆத­ரவு தேடி ஐரோப்­பா­விற்குத் தன்­னு­டைய பய­ணத்தை மேற்­கொண்டார்.

அதன் பின்னர், 1938 ஆம் ஆண்டு இந்­திய தேசிய காங்­கி­ரஸின் தலை­வ­ராக தேர்­தெ­டுக்­கப்­பட்ட நேதாஜி, “நான் தீவி­ர­வாதி தான்! எல்லாம் கிடைக்­க­வேண்டும் அல்­லது ஒன்­றுமே தேவை­யில்லை என்­ப­துதான் எனது கொள்கை" என முழங்­கினார். நேதாஜி, தலை­வ­ரா­னதும் ரவீந்­தி­ரநாத் தாகூர் நேதா­ஜியை அழைத்து, அவ­ருக்குப் பாராட்­டு­விழா நடத்­தி­ய­தோடு மட்­டு­மல்­லாமல், ‘நேதாஜி’ (மரி­யா­தைக்­கு­ரிய தலைவர் என்­பது பொருள்) என்ற பட்­டத்­தையும் அவ­ருக்கு வழங்­கினார். 1939 ஆம் ஆண்டு, இரண்­டா­வது முறை­யாக காங்­கிரஸ் தலைவர் பத­விக்கு நேதாஜி போட்­டி­யிட்டார். நேதா­ஜியின் செல்­வாக்கு உயர்ந்து வரு­வதைக் கண்ட காந்தி, அவ­ருக்கு எதி­ராக நேரு­வையும், ராஜேந்­திர பிர­சாத்­தையும் போட்­டி­யி­டு­மாறு வற்­பு­றுத்­தினார். ஆனால், அவர்கள் போட்­டி­யிட மறுக்­கவே பட்­டாபி சீதா­ரா­மை­யாவை நிறுத்­தினார். ஆனால், பட்­டாபி சீதா­ரா­மையா தேர்­தலில் தோல்­வி­ய­டைந்தார். அதனை பெரிய இழப்பு என்று கரு­திய காந்தி, உண்­ணா­வி­ரதம் இருக்கத் தொடங்­கினார். இதன் கார­ண­மாக, நேதாஜி காங்­கிரஸ் கட்­சி­யி­லி­ருந்து தானா­கவே வெளி­யே­றினார்.

‘பிரித்­தா­னிய அர­சுக்கு எதி­ராக மக்­களை ஒன்று திரட்­டு­கிறார்’ என கூறி 1940 ஆம் ஆண்டு, ஆங்­கி­லேய அரசு நேதா­ஜியைக் கைது செய்து சிறையில் அடைத்­தது. ‘இரண்டாம் உல­கப்போர் நடந்­து­கொண்­டி­ருந்த மும்­மு­ர­மான கால­கட்டம் அது. பாரத தேசத்தை ஆண்­டு­கொண்­டி­ருந்த ஆங்­கி­லேய அரசை எதிர்க்க இதுதான் சரி­யான தருணம் என கரு­திய நேதாஜி, 1941 ஆம் ஆண்டு ஜன­வரி 17 ஆம் திகதி மாறு­வேடம் அணிந்து சிறை­யி­லி­ருந்து தப்­பினார். அங்­கி­ருந்து பெஷாவர் நகரை சென்ற அவர், பின்னர் கைபர் கணவாய் வழி­யாக ஆப்­கா­னிஸ்­தானை அடைந்தார். ரஷ்யா வழி­யாக இத்­தா­லிக்கு செல்­ல ­வேண்டும் என நினைத்த நேதாஜி இந்­துகுஷ் கணவாய் வழி­யாக ரஷ்­யாவை அடைந்தார். எதிர்­பா­ராத வித­மாக ஹிட்­லரின் அழைப்பு வரவே, அவரின் அழைப்பை ஏற்று பின்னர் ஜேர்­ம­னியை சென்ற அவர், இந்­திய சுதந்­தி­ரத்தை பற்றி ஹிட்­ல­ரிடம் பேசி அவ­ரு­டைய உத­வியை நாடினார்.

சுதந்­திர இந்­திய இரா­ணுவம்

1941 ஆம் ஆண்டு 'சுதந்­திர இந்­திய மையம்' என்ற அமைப்பைத் தொடங்­கிய நேதாஜி, சுதந்­திர இந்­திய வானொ­லியை பேர்­லி­னி­லி­ருந்து தொடங்­கி­ய­தோடு மட்­டு­மல்­லாமல், இந்­திய விடு­தலைப் போராட்­டத்தை மையப்­ப­டுத்­தியும் உல­கப்போர் பற்­றிய செய்­தி­க­ளையும் இதில் ஒளி­ப­ரப்­பினார். பிறகு, ஜேர்மன் வெளி­வி­வ­கார அமைச்சர் வான் ரிப்பன் டிரா­பின்னின் உத­வி­யுடன் சிங்­கப்­பூரில் ராஷ் பிகாரி போஸ் தலை­மையில் தொடங்­கப்­பட்டு செயற்­ப­டா­ம­லி­ருந்த இந்­திய தேசிய இரா­ணு­வத்­திற்கு தீவிர பயிற்சியளித்து அதனை தலை­மை­யேற்றும் நடத்­தினார்.

1943 ஆம் ஆண்டு, சிங்­கப்­பூரில் நடந்த மாநாட்டில் தேசிய கொடியை ஏற்றி, சுதந்­திர அரசின் பிர­க­ட­னத்தை வெளி­யிட்டார். பிறகு, ஜப்பான், ஜேர்­மனி மற்றும் இத்­தாலி போன்ற நாடு­களின் ஆத­ர­வுடன், பர்­மாவில் இருந்­த­ப­டியே இந்­திய தேசிய இரா­ணு­வப்­படையை கொண்டு 1944 இல் ஆங்­கி­லே­யரை எதிர்த்தார். ஆனால், இந்­திய தேசிய இரா­ணுவப் படை, பல கார­ணங்­களால் தோல்­வியைத் தழுவி பின்­வாங்­கி­யது. அப்­பொ­ழுது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15, ஆம் திக­தி­யன்று நேதாஜி வானொலி மூலம் '' இந்த தற்­கா­லிக தோல்­வியால் மனச்­சோர்வு அடைந்து ­வி­டா­தீர்கள்! நம்­பிக்­கை­யுடன் இருங்கள், இந்­தி­யாவை நிரந்­த­ர­மாக அடி­மைத்­த­னத்தில் கட்­டி­வைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்­திக்கும் இல்லை. ஜெய் ஹிந்த் '' என வீரர்­க­ளுக்கு உரை­யாற்­றினார். அன்று அவர் குறிப்­பிட்ட படியே சரி­யாக இரண்டு ஆண்­டு­களில், அதா­வது ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு இந்­தியா விடு­தலை பெற்­றது.

மேற்கு வங்க அரசின் வெளிப்­பாடு

நேதாஜி சுபாஷ் சந்­தி­ரபோஸ் குறித்த 12, 774 பக்­கங்­களைக் கொண்ட 64 ஆவ­ணங்களை இந்­தி­யாவின் மேற்கு வங்க அரசு கடந்த 18 ஆம் திகதி வெளி­யிட்­டது. இதன் மூலம் 1945 ஆம் ஆண்டு விமான விபத்தில் நேதாஜி இறந்­த­தாக கூறப்­ப­டு­வது தவறு, குறித்த ஆண்­டுக்கு பிறகும் அவர் உயி­ருடன் இருந்­தமை உண்மை என கூறப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில், 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் திக­தி­யன்று போர் விமானம் மூலம் ஜப்பான் நோக்கி, நேதாஜி சென்­று­கொண்­டி­ருந்­த­போது, விமானம் மலை மீது மோதி விபத்­துக்­குள்­ளா­ன­தா­கவும், நேதாஜி மர­ணித்­த­தா­கவும் அதி­கா­ர­பூர்­வ­மற்ற தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இவ­ரது மரணம் பற்­றிய தக­வல்­களை உறு­திப்­ப­டுத்த 1956 ஆம் ஆண்டு ஷா நவாஸ் குழுவும், 1999 ஆம் ஆண்டு முகர்ஜி ஆணைக்­கு­ழுவும் அமைக்­கப்­பட்­டன. 2005 ஆம் ஆண்டு தாக்கல் செய்­யப்­பட்ட முகர்ஜி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில், 1945 ஆம் ஆண்டு நேதா­ஜியின் விமானம் எரிந்து விழுந்­த­தாகக் கூறப்­படும் இடத்தில் அப்­படி எந்த விபத்தும் நடக்­க­வில்லை என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

கடந்த 70 ஆண்­டு­க­ளாக நிலவி வரும் நேதா­ஜியின் மரணம் தொடர்­பான மர்­ம­மு­டிச்சு, இது­வரை அவிழ்க்க முடி­யாத முடிச்­சா­கவே இருந்து வரு­கி­றது.

இந்­நி­லையில், தகவல் அறியும் உரிமை சட்­டத்தின் மூலம் டில்­லியில் உள்ள 'மிஷன் நேதாஜி' என்ற அமைப்பு, இந்­தியப் பிர­தமர் அலு­வ­ல­கத்­தி­லி­ருந்து நேதா­ஜியின் மரணம் தொடர்­பான 33 கோப்­பு­களின் நகலை கேட்டு மனு செய்­தி­ருந்­தது. அந்த தக­வல்­களை அளித்தால் நட்பு நாடு­க­ளு­ட­னான இந்­தி­யாவின் நல்­லு­றவும், நாட்டின் இறை­யாண்­மையும் பாதிக்­கப்­படும் என இந்­திய மத்­திய அரசு கூறி­விட்­டது.

நேதாஜி, தற்­போ­தைய மேற்கு வங்­காள மாநி­லத்தில் பிறந்­தவர் என்­பதால், அவ­ரது மரணம் தொடர்­பான தக­வல்­களை பெற்­றுத்­த­ரும்­படி அவ­ரது உற­வி­னர்கள் அம்­மா­நில முத­ல­மைச்சர் மம்தா பானர்­ஜியை கடந்த 2012 ஆம் ஆண்டு கேட்டுக் கொண்­டனர். தொடர்ந்து இதே கோரிக்­கை­யுடன் மேற்கு வங்­காள மாநில அர­சையும், மத்­திய அர­சையும் அவர்கள் வலி­யு­றுத்தி வந்­தனர்.

இதன் விளை­வாக, நேதாஜி தொடர்­பாக கொல்­கத்தா பொலிஸ் தலை­மை­யக அருங்­காட்­சி­ய­கத்தில் பாது­காக்­கப்­பட்டு வந்த 64 கோப்­பு­களை அண்­மையில் மம்தா பானர்ஜி வெளி­யிட்டார். நேதா­ஜியின் இந்­திய தேசிய இரா­ணு­வத்தில் இணைந்து பணி­யாற்றி, பின்னர், காங்­கிரஸ் தலை­மை­யி­லான இந்­திய அரசை கடு­மை­யாக விமர்­சித்து பேசி­வந்த டேப் நாத் தாஸ் என்­ப­வரைப் பற்­றிய பொலி­ஸாரின் உள­வுத்­த­க­வல்கள் மேற்­கண்ட 64 கோப்­பு­களில் 22 ஆம் இலக்க கோப்பில் காணப்­ப­டு­கின்­றன.

அவ­ரது கருத்­தின்­படி,1948 ஆம் ஆண்­டு­வரை சீனாவின் மன்­சூ­ரியா பகு­தியில் நேதாஜி உயி­ருடன் வாழ்ந்­த­தா­கவும், இரண்டாம் உல­கப்­போ­ருக்கு பின்னர் மூன்றாம் உல­கப்போர் வெடிக்­கக்­கூடும் என்ற எதிர்­பார்ப்­புடன் இந்­தியா மற்றும் சர்­வ­தேச அர­சி­யலின் போக்கை அவர் உன்­னிப்­பாகக் கவ­னித்து வந்­த­தா­கவும் தெரி­ய­வந்­துள்­ளது.

நேதா­ஜியின் நண்பர் தகவல்

இதற்­கி­டையில், நேதா­ஜி­யுடன் நெருங்­கிய தொடர்பு வைத்­தி­ருந்­த­வர்­களில் ஒரு­வ­ரான சைபுத்தீன் என்­கிற நிஜா­முதீன், உத்­த­ரப்­பி­ர­தேசம் மாநி­லத்தில் உள்ள ஆசம்கர் மாவட்­டத்தின் டக்­கோவா கிரா­மத்தில் தற்­போது வசித்து வரு­கிறார். தனக்கு 115 வய­தா­வ­தாகக் கூறும் நிஜா­முதீன், நேதாஜி தொடர்­பான இர­க­சிய ஆவ­ணங்­களில் ஒரு­ப­குதி வெளி­யா­கி­யுள்ள நிலையில் நிரு­பர்­க­ளுக்கு பேட்­டி­ய­ளித்­துள்ளார்.

அந்தப் பேட்­டி­யின்­போது, கடை­சி­யாக நேதா­ஜியை 1947 ஆம் ஆண்டு நான் சந்­தித்தேன். அவரை ஒரு காரில் அழைத்­து­வந்து, பர்­மாவின் சித்தான் நதியில் தயா­ராக இருந்த படகில் ஏற்றி வழி­ய­னுப்பி வைத்தேன். மிகவும் குறு­க­லான அந்த நதி, இந்­திய எல்­லையில் உள்ள கடலில் போய் கலக்கக் கூடி­யது. அங்­கி­ருந்து அவரை எங்கோ அழைத்துச் செல்­வ­தற்கு கடலில் ஒரு நீர்­மூழ்கிக் கப்பல் தயார் நிலையில் காத்­தி­ருப்­ப­தாகக் கூறப்­பட்­டது. அவர் படகில் ஏறிச்­சென்ற சில நிமி­டங்­களில், நேதா­ஜியை நாங்கள் அழைத்து வந்த கார் மீது அங்கு வந்த ஒரு போர் விமானம் குண்டு வீசித் தகர்த்துவிட்டு சென்றது. நான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். என்னுடன் இருந்த சிலர் மரணமடைந்தார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மரணம் குறித்த சர்ச்சை

ஆகஸ்ட் 18, 1945 ஆம் ஆண்டு நேதாஜி பயணம் செய்த விமானம் பர்­மோசா தீவுக்கு அருகே விபத்­துக்­குள்­ளாகி அவர் இறந்­து­விட்டார் என ஜப்­பா­னிய வானொலி அறி­வித்­தது. இந்த செய்தி, இந்­திய மக்­களை நிலைக்­கு­லைய செய்­தது. நேதாஜி இறந்­து­விட்டார் என்­பதை பலரும் நம்­ப­வில்லை.

''எனக்கு இரத்தம் கொடுங்கள், உங்­க­ளுக்கு சுதந்­தி­ரத்தை பெற்று தரு­கிறேன்.'' எனக் கூறிய இந்­திய புரட்­சி­நா­யகன் நேதாஜி சுபாஷ் சந்­தி­ரபோஸ் பார­த­நாட்டை அடி­மை­ப­டுத்தி வைத்­தி­ருந்த ஆங்­கி­லே­யரை எதிர்த்து, இரா­ணுவ ரீதி­யாக போரா­டிய ஈடி­ணை­யற்ற மாவீரன் என்­பதை யாராலும் மறுக்க முடி­யாது. இந்­தி­யாவின் முதல் இரா­ணு­வத்தை கட்­ட­மைத்து இந்­தி­யர்­களின் ஆயுதக் கையா­ளு­மையை உல­க­றிய செய்­தவர். மாபெரும் சாம்­ராஜ்­யத்தை அசைத்துப் பார்க்கும் அவர் முயற்சி சற்று பின்­ன­டைவை சந்­தித்­தாலும், அவ­ரது வீரம் என்­றென்றும் நினைவு கூரத்­தக்­கது. சுதந்­திர இந்­தி­யா­விற்­காக தன்­னையே அர்ப்­ப­ணித்­து­கொண்ட நேதாஜி, ஒவ்­வொரு போராட்ட வீரனின் நெஞ்­சிலும் நீங்கா இடம் பெற்றுள்ளமையை யாராலும் மறக்க முடியாது.

தொகுப்பு: எம்.எம்.சில்வெஸ்டர்

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல