ஐ.எஸ் தீவிரவாதி போல மாற விரும்பிய 15 வயது சிறுமி ஒருவர் பிணையக்கைதியை கொல்வது போல் தனது தாயாரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டென்மார்க் நாட்டை சேர்ந்த லிசா போர்ச் என்ற 15 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.இவர் ஐ.எஸ் தீவிரவாதியாக மாற்றப்பட்ட நபரை காதலித்து வந்தார் .
ஆனால், சில காரணங்களால் லிசாவுடன் ஏற்பட்ட காதலை முறித்து கொண்டுள்ளார் அந்த நபர் .
பின்னர், 29 வயதுடைய அப்துல்லா என்ற இஸ்லாமிய நண்பருடன் மீண்டும் லிசாவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது.இவரது காதலை பார்த்த தாயார், ‘உன்னை விட இரண்டு மடங்கு வயது கூட உள்ள நபருடன் பழகாதே’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.சில நாட்களுக்கு பிறகு, ஐ.எஸ் தீவிரவாதிகள் பிணையக்கைதிகளை கொல்லும் வீடியோக்களை யூடியூப் வழியாக பார்த்து இருக்கிறார்.
தனது காதலனான அப்துல்லாவை வீட்டிற்கு வரவழைத்த லிசா, யூடியூப்பில் அமெரிக்க பிணையக்கைதிகளான டேவிட் ஹைனெஸ் மற்றும் ஆலன் ஹென்னிங் ஆகிய இருவரையும் ஐ.எஸ் தீவிரவாதிகள் தலையை துண்டித்து கொல்லும் வீடியோவை இருவரும் பார்த்துள்ளனர்.
பின்னர், அந்த வீடியோவால் கவரப்பட்ட லிசா, தானும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர வேண்டும் என தீர்மானித்துள்ளார்.இதனை உடனே நிறைவேற்ற வேண்டும் என சமையல் அறைக்கு சென்ற லிசா, அங்குள்ள கத்தியை எடுத்து தனது தாயாரை சுமார் 20 முறை சரமாரியாக குத்தி கொன்றுள்ளார்.
அவர் இறந்த பிறகு, “தனது தாயாரை மர்ம நபர் ஒருவர் கொன்றுவிட்டு தப்பிவிட்டார்” என போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
ஆனால், வீட்டிற்கு வந்த போலீசார் அங்குள்ள காதலர்கள் இருவரின் கைரேகைகளை கண்டுபிடித்து இந்த கொலைக்கு லிசாவும் அவரது காதலனும் தான் காரணம் என நீதிமன்றத்தில் நிரூபித்தனர்.
இருவரின் மீதான வாழ்கை விசாரித்த நீதிபதி , லிசாவிற்கு 9 வருடமும் அவருடைய காதலனுக்கு 13 வருடமும் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக