52 வயதுக்கார (Roberto Esquivel Cabrera) க்கு வந்த நூதன சிக்கல்...!
மெக்சிகோவைச் சேர்ந்த 52 வயதான ராபர்டோ எஸ்குவல் கார்பெராவுக்கு ஒரு நூதனச் சிக்கல். இந்த சிக்கலால் தன்னால் இயல்பாக இருக்க முடியவில்லை என்றும், குறிப்பாக பெண்கள் தன் பக்கம் வருவதையே விரும்புவதில்லை என்றும் கூறிப் புலம்புகிறார் கார்பெரா.
அப்படி என்ன சிக்கல் இவருக்கு.. உலகிலேயே மிக நீளமான ஆண்குறி கொண்டவர் என்ற பெயரைப் பெற்றவர் கார்பெரா. இதுதான் இவருக்கு பெரும் சிக்கலாகியுள்ளது.
இதை நான் பெருமையாக நினைவிக்கவில்லை. மாறாக உடல் ஊனமாகவே கருதுகிறேன் என்று கூறிப் புலம்புகிறார் கார்பெரா.
இவருடைய ஆண்குறி 18.9 இன்ச் நீளம் கொண்டதாக உள்ளது. உலகிலேயே இவருக்குத்தான் இவ்வளவு நீளமான ஆண்குறி இருக்கிறதாம்.
இதுகுறித்து கார்பெரா கூறுகையில், இதை கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்க வேண்டும். கண்டிப்பாக இது சாதனைதான். அதை யாரும் மறுக்க முடியாது.
ஆனால் இதை வைத்துக் கொண்டு நான் படாதபாடு படுகிறேன். என்னால் இயல்பாக இருக்க முடிவதில்லை. எந்த வேலையையும் செய்ய முடியவில்லை.குறிப்பாக பெண்கள் என்னிடம் வருவதையே விரும்புவதில்லை. பயப்படுகிறார்கள். பெண்கள் கிடைக்காததால், என்னால் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் தவித்துப் போயிருக்கிறேன்.
இவரது ஆண்குறி முழங்காலைத் தாண்டி நீண்டிருக்கிறதாம். இதனால் உடை அணிவதிலும் உட்காருவதிலும் பிற வேலைகளைச் செய்யும்போதும் பெரும் சிரமமாக இருக்கிறது என்றார் கார்பெரா.
இவரது நிலை குறித்து டாக்டர்கள் கூறுகையில், இவருடைய ஆண்குறி உண்மையிலேயே நீளமானதுதான். அதேசமயம், ஆண்குறியின் முக்கியப் பகுதியின் நீளம் 6 இன்ச்தான். மற்றவை அனைத்தும் வெறும் தோல் பகுதிதான் என்று கூறுகிறார்கள்.
அதேசமயம், இந்த நீளமான ஆண் குறியை ஆபரேஷன் செய்து குறைத்துக் கொள்ள வழி உள்ளதாம். ஆனால் கார்பெராதான் இன்னும் அதுகுறித்து முடிவெடுக்காமல் உள்ளாராம்.
இவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. எந்த வேலையையும் பார்க்க முடியவில்லை. இதனால் சமூக நல அமைப்புகள் தரும் ஆதரவுடன் வாழ்ந்து வருகிறாராம். சாப்பாட்டுக்காக பலரிடம் கையேந்துகிறாராம். மேலும் குப்பைத் தொட்டியில் கிடக்கும் உணவுப் பொருட்களைக் கூட எடுத்துச் சாப்பிடும் அவலத்தில் உள்ளாராம்.
இவரிடம் யாரும் நட்பு வைத்துக் கொள்வதும் இல்லையாம். வெறுக்கிறார்களாம். குறுக்கே வந்து விட்டால் கூட பயந்து விலகிப் போய் விடுகிறார்களாம். எனவே நண்பர்களம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் இவர்.
இதற்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த ஜோஹன் பால்கன் என்பவருக்கு 13.38 இன்ச் நீளமுடைய ஆண்குறி இருந்தது. அதுதான் சாதனையாக கருதப்பட்டு வருகிறது. ஆனால் அவரை மிஞ்சி விட்டார் இந்த மெக்சிகோகாரர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக