"நீங்கள் ஏதேனுமொரு விதமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்காகுமிடத்து அது ஒரு போதும் உங்கள் தவறன்று. நீங்கள் தவறு செய்ததாக ஒரு போதும் எண்ண வேண்டாம். பாலியல் துஷ்பிரயோகமானது எப்பொழுதும் வளர்ந்தவர்களினால் அல்லது பலம் மிக்கவர்களினால் புரியப்படுகின்ற தவறான செயலாகும். நீங்கள் வருந்துவதன் மூலம் குற்ற உணர்ச்சிக்கு இடமளிக்காதீர்கள். மேலும் மற்றவர்கள் உங்கள் மீது குற்றம் சுமத்த இடமளிக்கவும் வேண்டாம்"
தற்போது நாட்டில் அதிகரித்து வரும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்கு பல அணுகுமுறைகள் காணப்படுகின்றன. இருந்தபோதிலும் அவை எந்தவிதமான பிரதிபலிப்பையும் காட்டுவதாக தெரியவில்லை. ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு வகையில் சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். அவற்றிலும் சில சம்பவங்களே வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படுகின்றன.
இவ்விடயம் தொடர்பில் கடந்த திங்கட்கிழமை அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டின் கீழ் கருத்தரங்கொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதன்போது பல்வேறு கருத்துக்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
இன்று பிள்ளைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது பெற்றோர் மத்தியில் எழும் பெரும் கேள்வியாக இருந்து வருகின்றது.
குறிப்பாக சிறு குழந்தைகள் தொடக்கம் பதின்மவயதினர் வரை குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பெற்றோர் மிகுந்த விழிப்புணர்வுடன் செயலாற்றுவது அவசியமானதொன்றாக காணப்படுகின்றது.
கள்ளமில்லாத சிறு குழந்தைகள் அனைவருடனும் ஒரே வகையில் பழக முற்படுகின்றனர். எனினும், அவர்கள் ஒரு சிலரால் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுவதுடன், அவர்களது வாழ்க்கை பாழடிக்கவும் படுகின்றது. இதிலிருந்தும் அவர்கள் மீள வேண்டுமானால், அனுபவசாலிகளான பெற்றோரே சரியான வழியில் அவர்களை வழிநடத்த வேண்டும்.
அந்தவகையில் ஒவ்வொரு குழந்தையின் பாதுகாப்பும் அவர்களின் பெற்றோரின் கரங்களிலேயே தங்கியுள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகம் என்றால் என்ன?
எவரேனும் ஒரு நபர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, அச்சுறுத்தல் மூலமாவோ அல்லது தூண்டுதல் மூலமாகவோ சிறுவர்களை ஏதேனுமொரு பாலியல் நடவடிக்கைக்காக பயன்படுத்திக் கொள்வார்களாயின், அது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகமாகும்.
அநேகமாக இது வளர்ந்த ஒருவரினால் பிள்ளையொன்றின் மர்ம ஸ்தானத்தை தொடுவதாக இருக்கலாம். அதேபோல் அவருடைய உடலின் மர்ம ஸ்தானத்தை தொடச் செய்வதாக இருக்கலாம்.
இது நேரடியான உடல் தொடுகையாக மட்டுமல்லாது, தொடுகையற்ற வேறு ஏதேனும் நடத்தைகளாகவும் இருக்கலாம். பிள்ளைகளுக்கு ஆபாச புகைப்படங்கள் மற்றும் திரைப்படங்களை காட்டுவதாகவும் அல்லது பார்ப்பதற்கு தூண்டுவதாகவும் இருக்கலாம்.இதேபோல் குடும்பத்தினுள் விரும்பத்தகாத வகையில் குடும்ப அங்கத்தவர்களால் சிறுவர்கள் மீது புரியப்படுகின்ற பாலியல் நடவடிக்கைகளும் இதனுள் உள்ளடங்கும்.
அநேகமாக இவ்வாறான பாலியல் நடவடிக்கைகள் அப்பா, சித்தப்பா, மாமா, சகோதரர் அல்லது வேறு உறவினர்களாலும் இடம் பெறலாம். சிறுவர்கள் நன்கு அறிந்தவர்களால் மட்டுமன்றி அவர்கள் அறியாதவர்களாலும் இவ்வாறான செயல்கள் இடம்பெறலாம். பெண் பிள்ளைகள் மட்டுமன்றி ஆண் பிள்ளைகளும் இது போன்ற துஷ்பிரயோகச் செயல்களுக்கு இலக்காகலாம்.
எனவே, இது தொடர்பில் உங்கள் பிள்ளைகளை நீங்கள் அறிவுறுத்துவது
எப்படி?
துஷ்பிரயோகத்துக்கு ஆளாகக்கூடிய நான்கு வழிகளையும் இனங்காட்டுதல்
1. பாலியல் துஷ்பிரயோகம்
2. உடல் ரீதியான துஷ்பிரயோகம்
3. உள ரீதியான துஷ்பிரயோகம்
4. கவனயீனத்தால் ஏற்படுபவை
* துஷ்பிரயோகம் என்பது உடல் தொடுகை மூலமோ, உடல் தொடுகை அல்லாத வழிகளிலிலோ நடைபெறலாம்.
* வயதில் பெரியவர் ஒருவர் உங்களது உடம்பை அநாவசியமான முறையில் தொடுவதாக இருக்கலாம். அல்லது உங்கள் மூலம் தனது உடம்பை தொடச் செய்வதாக இருக்கலாம். இவை இரண்டுமே உடல் ரீதியான துஷ்பிரயோகத்திற்குள் அடங்கும்.
* எவரேனும் உங்களுக்கு ஆபாசமான, கூடாத படங்களை, காட்சிகளை, வீடியோக்களை காட்டுவதற்கு முயற்சிக்கக்கூடும். இப்படியானவை உடலை தொடாமல் செய்யும் உள ரீதியான துஷ்பிரயோகமாகும்.
* இப்படிச் செய்பவர்களில் நமக்குத் தெரிந்தவர்களும் இருக்கலாம், தெரியாதவர்களும் இருக்கலாம் என்ற வித்தியாசங்களை பிள்ளைகளுக்கு தெளிவுபடுத்துங்கள்.
பெண்பிள்ளைகளுக்கு மாத்திரமல்ல, ஆண்பிள்ளைகளும் இச்சம்பவங்களால் பாதிக்கப்படலாம்.
நல்லது எது கெட்டது எது என வேறுபடுத்திக் காட்டுதல்
* எவராவது நம்மை தொடும் விதத்தில் அவர் நல்ல எண்ணத்துடன் அவ்வாறு செய்கின்றாரா? தீய எண்ணத்துடன் அவ்வாறு செய்கின்றாரா? என்பதை உணரக்கூடியதாக இருக்க வேண்டும்.
* நல்ல எண்ணத்துடன் தொடுவதென்பது நமது தாய், தந்தையர் நம்மை அன்புடன் தொடுவதைப் போன்றது.
* உடலின் சில அங்கங்களை வேறொருவர் தொடும் போது அது அசௌகரியமாக இருக்குமென்றால், அது தீய எண்ணத்துடனான தொடுகை.
* நம்மை நோகச் செய்வதாகவோ, நாம் விரும்பாத அங்கத்தில் எவரேனும் தொடுகின்றார் என்றால், யாரேனும் தங்கள் உடம்பின் ஓர் அங்கத்தை தொடுமாறு நம்மை கட்டாயப்படுத்தினால், அதுவும் கூடாத செயலாகவே கருதப்படுகின்றது.
* எவரேனும் ஒருவர் நமது உடலை தொடுவதுடன் அதனை யாரிடமும் கூறவேண்டாம் என்று கூறினால், அல்லது தவறாக அவ்வாறு நடந்துவிட்டு அதனை யாரிடமாவது கூறும் சந்தர்ப்பத்தில் உங்களை தண்டிப்பதாக கூறினால் அதுவும் கூடாத செயலே என்பதை உணரச் செய்யுங்கள்.
இவ்வாறு இடம்பெற்றால் என்ன செய்யலாம்?
* உங்கள் உடல் உங்களுக்கு மட்டுமே உரிமையானது என்பதை கூறுங்கள்.
* நமது உடலை தொடுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை, அப்படி செய்தால் வேண்டாம் என்று எதிர்ப்பை காட்டுங்கள்
* நமக்கு பாதுகாப்பற்ற இடமென்று தோன்றுகின்ற இடங்களில் அல்லது நம்முடன் தவறாக நடந்துகொள்வார்கள் என்று நினைக்கின்ற நபர்கள் இருக்கின்ற இடங்களில் தனியாக இருப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்
* பயமுறுத்தும் வகையிலோ, அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையிலோ யாராவது நம்மை தொடுவதற்கு முயற்சிப்பார்களாயின், வேண்டாமென்று தடுத்து விடுங்கள். எதிர்த்து விடுங்கள். விருப்பமின்மையை உணர்த்துங்கள்
* யாராவது தவறான விதத்தில் தொட்டுவிட்டால் உடனடியாக தயக்கமின்றி உங்களுக்கு நம்பிக்கையான ஒருவரிடம் கூறுங்கள். அதனை இரகசியம் என நினைத்து வெளியில் கூறாமல் இருந்து விடவேண்டாம்..
* யாருடைய அச்சுறுத்தலுக்கும் பயப்படாது துணிவாக எதிர்கொள்ளுங்கள்என சில முக்கியமான வழிகாட்டலுக்கு உங்களது பிள்ளைகளை பழக்கப்படுத்துங்கள்.
இதுவே பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளை இவ்வாறான ஆபத்துக்களிலிருந்து பாதுகாக்கக்கூடியதான வழிவகைகள்.
"ஏதேனுமொரு விதமாக நீங்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்காகுமிடத்து அது ஒரு போதும் உங்கள் தவறன்று. ஒரு போதும் நீங்கள் தவறு செய்ததாக எண்ண வேண்டாம்.
பாலியல் துஷ்பிரயோகமானது எப்பொழுதும் வளர்ந்தவர்களினால் அல்லது பலம் மிக்கவர்களினால் புரியப்படுகின்ற தவறான செயலாகும். நீங்கள் வருந்துவதன் மூலம் குற்ற உணர்ச்சிக்கு இடமளிக்காதீர்கள்.
மேலும் மற்றவர்கள் உங்கள் மீது குற்றம் சுமத்த இடமளிக்கவும் வேண்டாம்" இவ்வாறான சந்தர்ப்பங்க ளில் உங்களுக்கோ அல்லது உங்களது நண்பருக்கோ ஏதேனும் பிரச்சினை இருப்பின் 1929க்கு தொடர்பு கொள்ளுங் கள்.
18 வயதிற்கு குறைந்த அனைவருமே சிறுவர்களாகவே கருதப்படுகின்றனர். இனம், மதம், மொழி, வயது போன்ற பேதங்களின்றி, அனைவரும் இந்த சமுதாயத்தில் வாழ்வதற்கு உரிமை பெற்றவர்களே.
தங்கள் குழந்தைகளுக்கு மாத்திரமன்றி, அனைத்து குழந்தைகளையும் தங்கள் குழந்தைகளாக எண்ணி செயற்படுங்கள். அவற்றை குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுங்கள்.
சிறந்த எதிர்காலத்தை தங்கள் குழந்தைகளுக்கு வழங்குவது உங்கள் கைகளில் தரப்பட்டுள்ளது.
சிறுவர்களின் பாதுகாப்பின் பேரில் இவற்றை செயற்படுத்த முன்வரவேண்டும் என்பதை இச்சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்வது அவசியமாகும்.
ரெ.தேவிகா
வீரகேசரி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக