இலங்கைக்கு வருகைதந்துள்ள காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஐ.நா. குழு எதிர்வரும் 18ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தாம் மேறகொண்ட விசாரணைகள் குறித்த இறுதி முடிவை தெரியப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பில் காணாமல் போனோர்களின் உறவுகளை சந்தித்த ஐ.நா. குழுவினார் காணாமல் போனவர்களிடமிருந்து பெறப்பட்ட சாட்சியங்கள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன்,
தங்களால் காணாமல் போனோரை கண்டுபிடித்து தரமுடியாது எனவும் ஆனால் காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் குறித்து கவனம் செலுத்தி அதற்கான குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, இந்த நாட்டில் உண்மையும் நீதியும் நியாயமும் நிலைநாட்டப்படவேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தி கூறுவதாக காணாமல்போன உறவுகளிடம் வாக்குறுதியளித்துச் சென்றுள்ளனர்.
இதே நேரம் எதிர்வரும் 18ம் திகதி காணாமல் போனோர்களை விசாரணை செய்யும் ஐ.நா.குழுவினரால் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடாத்தப்படவுள்ளதாகவும் அதில் இலங்கையில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியிடப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
newjaffna

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக