டேபிள் செல்லில் டெக்ஸ்ட்:
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைப் பல பக்கங்களுடன் தயாரித்திருப்போம். இதில் ஓரிரு டேபிள்களும் இருக்கும். இறுதியில் தான் ஏதேனும் ஒரு டேபிளில் இன்னும் சில சொற்களைச் சேர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அந்த சொல்லை இணைக்கையில், டேபிள் கட்டம் நீண்டு, அனைத்து அமைப்பும் வீணாகும் நிலை ஏற்படலாம்.
டாகுமெண்ட் அல்லது டேபிள் சற்று கீழாக நீண்டு செல்லும் நிலை ஏற்படலாம். எனவே, செல்லில் டெக்ஸ்ட் அமைக்கையில், அது தானாக அதனுள்ளாகவே சரி செய்திடும் வகையில் இருந்தால், நமக்கு வசதியாக இருக்கும் அல்லவா? இதற்கான வழி ஒன்று வேர்ட் புரோகிராம் தருகிறது. அதனைப் பார்க்கலாம்.
1. நீங்கள் சற்று மாற்றி அமைக்க வேண்டிய நெட்டு வரிசை அல்லது வரிசைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
2. ரிப்பனில் Layout டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இது நீங்கள் மேலே 1ல் சொல்லப்பட்ட செயலை மேற்கொண்டால் தான் கிடைக்கும்.
3. அடுத்து டேபிள் குரூப்பில் Properties டூல் தேர்ந்தெடுக்கவும். இப்போது வேர்ட் Table Properties என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும்.
4. இங்கு Cell டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
5. இனி Options பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் Cell Options டயலாக் பாக்ஸைக் காட்டும்.
6. அடுத்து Fit Text என்னும் செக் பாக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
7. தொடர்ந்து இருமுறை ஓகே கிளிக் செய்திடவும். முதலில் Cell Options, அடுத்து Table Properties டயலாக் பாக்ஸ் மூடப்படும்.
இங்கு வேர்ட் எப்படி செயல்படுகிறது? செல்லில் உள்ள சொல்லின் எழுத்தளவைக் குறைத்துக் கொண்டு ஏற்கனவே வடிவமைத்த கட்டத்திற்குள்ளாக அமைக்கிறது. வேர்ட் டெக்ஸ்ட்டின் அகலத்தைக் குறைத்துக் கொள்கிறது. இதனை தொழில் நுட்ப ரீதியாக "scrunching" என்று சொல்வார்கள்.
டேபிளை முழுமையாக அழிக்க:
வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் ஒன்றை உருவாக்குகிறீர்கள். பின் அதனை முழுமையாக நீக்க நினைக்கிறீர்கள். வேர்ட் புரோகிராம் இதற்கெனச் சில வசதிகளையும் வழிகளையும் தந்துள்ளது. அவை:
1. முழு டேபிளையும் தேர்ந்தெடுக்கவும்.
2. ரிப்பனில், Layout டேப் செல்லவும்.
3. Rows & Columns குரூப்பில் Delete என்பதில் கிளிக் செய்திடவும்.
4. அடுத்து Delete Table அல்லது Delete Rows என்பதில் கிளிக் செய்திடவும்.
இன்னொரு வழி:
ரிப்பனில் ஹோம் டேப்பினை அழுத்தித் திறக்கவும். இதில் Clipboard குரூப் செல்லவும். தொடர்ந்து Cut ஆப்ஷன் தேர்ந்தெடுத்து இயக்கவும். இங்கு Del பட்டனுக்கு மதிப்பிருக்காது. ஆனால், பாரா ஒன்றையும் டேபிளுடன் இணைத்து டெல் கீயை அழுத்தினால், அதுவும் சேர்ந்து அழியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக