வெள்ளி, 13 நவம்பர், 2015

ஓரிரு கிளிக்குகளில் யூ-டியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்யணுமா?

குழந்தையின் அழுகை விடாமல் கேட்கிறது. அடுத்த அறையில் படித்துக்கொண்டிருக்கும் ஓர் இளம்பெண் வெளியில் வந்து பார்க்கிறாள். அக்காவின் இரண்டு வயது குழந்தைக்கு தன் அம்மா படாதபாடுபட்டு சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்ததைப் பார்த்த அந்தப் பெண் ‘இப்படி கொடும்மா, நான் சாப்பாடு ஊட்டறேன்’ என்று சொல்லி குழந்தையையும் சாப்பாட்டுக் கிண்ணத்தையும் அறைக்குள் எடுத்துச் செல்கிறாள்.



சின்ன சிணுங்கல்கூட இல்லை. அப்படி என்னதான் மாயம் செய்கிறாள் என அவர் அறையை எட்டிப் பார்க்கிறார். காலை நீட்டி குழந்தையை படுக்கையில் போட்டு வாயில் ஸ்பூனால் உணவைக் கொடுக்க சிரித்தபடி குழந்தை சாப்பிடுகிறது. அருகில் வந்து பார்த்தவர் திகைக்கிறார். தன் மகளின் தலையில் கட்டி இருந்த செல்போனில் கார்ட்டூன் வீடியோவைப் பார்த்தபடி சாப்பிட்டுக்கொண்டிருந்தது குழந்தை. இது உண்மையில் நடந்த ஒரு நிகழ்வு.

இதே போன்று ஒரு செல்போன் நிறுவன விளம்பரத்தில், நீண்ட கியூவில் கைக்குழந்தையை தோளில் சாய்த்தபடி நின்றுகொண்டிருப்பார் ஓர் இளம்பெண். நெரிசல், வியர்வை போன்ற காரணங்களால் சிணுங்கத் தொடங்கிய அந்தக் குழந்தை சில நிமிடங்களில் கதறத் தொடங்கும். என்னென்னவோ செய்து பார்ப்பார் குழந்தையின் அம்மா. ம்ஹும். அழுகை நின்றபாடில்லை.

அவருக்கு பின் நின்றிருந்த ஒருவர் தன் மொபைலில் கார்ட்டூன் வீடியோவை ப்ளே செய்து காண்பிக்க, குழந்தை அழுகையை நிறுத்தி வெகு சீரியஸாக வீடியோவை கவனிக்க ஆரம்பிப்பதாக முடியும் அந்த விளம்பரம்.

இப்படி கைக்குழந்தையைக்கூட கவரும் வீடியோக்களின் புகலிடமாக இருப்பது யூ-டியூப். இன்டர்நெட்டில் வெப்சைட்டுகளிலும், சமூக வலைதளங்களிலும் நாம் பார்க்கின்ற பெரும்பாலான வீடியோக்கள் யு-டியூபில்தான் பதிவாக்கப்பட்டிருக்கும். உலகப் புகழ்பெற்ற ‘ஒய் திஸ் கொலை வெறி’ பாடல் பிரபலமாகக் காரணமாக இருந்ததும் யூ-டியூபினால்தான்.

நித்தம் நாம் பயணம் செய்யும் இன்டர்நெட்டின் வெர்ச்சுவல் உலகில் வெப்சைட்டுகளில் ஏராளமான வீடியோக்கள் நம்மைக் கடந்து செல்கின்றன. அவை அனைத்தையும் உடனுக்குடன் நாம் பார்ப்பதற்கு நேரம் இருக்காது. அப்படியே பார்த்தாலும் அதிலுள்ள விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்வதும் கடினம்.

மேலும், இன்டர்நெட் தொடர்பு இருக்க வேண்டும், சிக்னல் சரியாக கிடைக்க வேண்டும் அப்படி இருந்தால்தான் யூ-டியூபில் நேரடியாக வீடியோக்களைப் பார்க்க முடியும். நம் கம்ப்யூட்டரில் வீடியோ லைப்ரரி உருவாக்கி அதில் வீடியோக்களை சேகரித்து வந்தால் தேவைப்படும் நேரத்தில் எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம். இவற்றைப் பார்வையிட இன்டர்நெட் தொடர்பு தேவைப்படாது.

இன்டர்நெட்டில் புகைப்படங்களை டவுன்லோட் செய்வது சுலபம். மவுசின் வலப்புற பட்டனை கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில் Save As என்ற விவரத்தை கிளிக் செய்து டவுன்லோட் செய்துவிடலாம். ஆனால் யூ-டியூப் வீடியோக்களை அவ்வாறு ஒரே கிளிக்கில் டவுன்லோட் செய்ய முடியாது. கீழ்க்காணுமாறு ஓரிரு கிளிக்குகளில் யூ-டியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்ய முடியும்.



யூ-டியூபில் எந்த வீடியோவை டவுன்லோடு செய்ய வேண்டுமோ, அந்த வீடியோ இயங்கிக் கொண்டிருக்கும்போது, பிரவுசரின் அட்ரஸ் பாரில் இருந்து அதன் முகவரியை காப்பி (Ctrl + C) செய்துகொள்ள வேண்டும். உதாரணத்துக்கு யூ-டியூபில் Compcare Pathuga Pattabishegam என்ற தலைப்பிலான வீடியோவை இயக்கிக்கொள்வோம்.



இதன் முகவரியை (https://www.youtube.com/watch?v=RePhnVy9OO0) காப்பி செய்துள்ளோம்.



இப்போது பிரவுசரில் புதிய டேபில், இந்த லிங்கை பேஸ்ட்(Ctrl+V) செய்து கொண்டு youtube என்ற வார்த்தைக்கு முன் SS என்ற வார்த்தையை சேர்க்க வேண்டும். https://www.SSyoutube.com/watch?v=RePhnVy9OO0



இப்போது Savefrom.net என்ற தலைப்பிலான திரையில் நாம் பேஸ்ட் செய்த லிங்கின் பெயர் வெளிப்படும். இதில் Download என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

இந்த பட்டனுக்கு அருகில் உள்ள பாக்ஸை கிளிக் செய்தால் ஏராளமான வீடியோ ஃபைல் ஃபார்மேட்டுகள் வெளிப்படும். நமக்குத் தேவையானதை தேர்ந்தெடுத்து டவுன்லோட் செய்யலாம். எந்த ஃபைல் ஃபார்மேட்டையும் செலெக்ட் செய்யாமல் டவுன்லோட் பட்டனை கிளிக் செய்தால், முதலாவதாக உள்ள MP4 என்ற ஃபார்மேட்டில் வீடியோ டவுன்லோட் ஆகும்.



உடனடியாக நாம் தேர்ந்தெடுத்த வீடியோ நம் கம்ப்யூட்டரில் டவுன்லோடு ஆகி விடும். வீடியோவில் சைஸிற்கு ஏற்ப டவுன்லோடு ஆகும் நேரமும் வேறுபடும். நம் கம்ப்யூட்டரில் டவுன்லோடு ஆனவுடன் அதை வழக்கம்போல கிளிக் செய்து இயக்கிப் பார்க்கலாம்.

குறிப்பு: இன்டர்நெட்டில் இருந்து டவுன்லோட் செய்யும் வீடியோக்களை நம் பெர்சனல் பயன்பாட்டுக்காக மட்டுமே பயன்படுத்தலாம். அவற்றை நம் பிசினஸுக்காகவோ, நம்முடைய வேறேதேனும் படைப்பின் இடையே இணைத்தோ கமர்ஷியலாகப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். மீறினால் அந்த படைப்பின் உரிமையாளர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

இன்டர்நெட் பயணத்தில் நம் செய்கைகள் ஒவ்வொன்றும் கண்காணிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். பிறர் படைப்புகளை பார்த்தும், கேட்டும், படித்தும் பயன் அடைவதோடு நிறுத்திக்கொண்டால்தான் நம் பயணம் இனிமையாக அமையும்.

vikatan.com
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல