ஞாயிறு, 15 நவம்பர், 2015

மாலைதீவுச் சிக்கலுக்குள் மாட்டிக்கொள்ளுமா இலங்கை?

இந்­தியப் பெருங்­க­டலில் சுமார் 1,192 தீவு­களைக் கொண்ட சிறிய நாடான மாலை­தீவில் அண்­மையில் நடந்து வரும் சம்­ப­வங்கள், அயல் நாடான இந்­தி­யாவை மட்­டு­மன்றி, இலங்­கைக்கும் கூட சில ஆபத்­தான சமிக்­ஞை­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

மாலை­தீவு ஜனா­தி­பதி அப்­துல்லா யாமீன் பயணம் செய்த படகில் கடந்த செப்டெம்பர் மாதம் நிகழ்ந்த வெடிப்புச் சம்­பவம் அங்கு பாது­காப்பைக் கேள்­விக்­கு­றி­யாக்­கி­யி­ருக்­கி­றது.



ஜனா­தி­பதி அப்­துல்லா யாமீன் ஹஜ் யாத்­தி­ரையை முடித்து விட்டு திரும்பிக் கொண்­டி­ருந்த போது இந்தச் சம்­பவம் நடந்­தது. இதில் மாலை­தீவு ஜனா­தி­ப­தியின் மனை­விக்கு சிறி­ய­ளவில் காயம் ஏற்­பட்­டது.

அசா­தா­ர­ண­மான இந்த வெடிப்புச் சம்­பவம் குறித்து விசா­ரணை நடத்த இலங்கை, சீனா, சவூதி அரே­பியா, அமெ­ரிக்கா என்று பல நாடுகள் உதவ முன்­வந்­தன.

விசா­ர­ணை­க­ளுக்கு உதவ, குற்றப் புல­னாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரண்டு அனு­பவம் மிக்க அதி­கா­ரி­களை இலங்கை அர­சாங்கம் உட­ன­டி­யா­கவே மாலை­தீ­வுக்கு அனுப்பி வைத்­தது.

அவர்கள் மேற்­கொண்ட விசா­ர­ணையின் முடிவில், நிகழ்ந்­தது குண்­டு­வெ­டிப்பே என்று உறுதி செய்­தனர்.

சவூதி அரே­பிய புல­னாய்வுப் பிரிவும் அவ்­வாறே அறிக்கை கொடுத்­தது.

ஆனால் அமெ­ரிக்கப் புல­னாய்வுப் பிரி­வான எவ்.பி.ஐ, குண்டு வெடிப்பு நடக்­க­வில்லை என்றும் தொழில்­நுட்பக் கோளாறு தான் என்றும் அறிக்கை கொடுத்­தது.

2008ஆம் ஆண்டு நடந்த தேர்தல் மூலம் ஆட்­சியைக் கைப்­பற்­றிய முகமட் நசீட் அர­சாங்­கத்தை, இரா­ணு­வத்தின் உத­வி­யுடன் அப்­துல்லா யாமீன் கவிழ்த்­ததில் இருந்தே, மாலை­தீவில் அர­சியல் வன்­மு­றைகள் நிகழ்ந்து வந்­தன.

மாலை­தீவின் முன்னாள் அதிபர் நஷீட் மீது ஊழல் குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்டு 13 ஆண்டு சிறைத்­தண்­ட­னையும் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த அர­சியல் சூழலால் மாலை­தீவில் இருந்து பலரும் இலங்­கையில் அடைக்­கலம் தேடி­யுள்­ளனர்.

இரு­நா­டு­க­ளுக்கும் இடை­யி­லான நெருக் கம், புவி­யியல் சூழல் என்­பன, அங்­குள்ள அர­சியல் அதி­ருப்­தி­யா­ளர்கள் பலரும், இலங்­கையை நோக்கி வரத் தொடங்­கி­யதில் ஆச்­ச­ரி­ய­மில்லை.

மாலை­தீவு ஜனா­தி­ப­தியின் படகில் நிகழ்ந்த குண்­டு­வெ­டிப்புச் சம்­ப­வத்தின் தொடர்ச்­சி­யாக மாலை­தீவின் துணை அதி­கா­ரி­யாக இருந்த அகமட் அதீப் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

அவ­ரது நெருங்­கிய நண்­ப­ரான- இந்த சதியில் தொடர்­பு­டை­யவர் எனக் கரு­தப்­படும் 18 வயது மாலை­தீவு இளைஞர் ஒரு­வரை, கொழும்பில் தங்­கி­யி­ருந்த வீட்டில் வைத்து கைது செய்த குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்­தினர் அண்­மையில் நாடு கடத்­தி­யி­ருந்­தனர்.

இந்த நாடு கடத்தல் சம்­பவம் சட்­ட­ நெறி­மு­றை­க­ளுக்கு முர­ணா­னது என்று குற்­றச்­சாட்­டுகள் எழுந்­துள்­ளன.

இலங்­கையில் குற்றம் எதையும் இழைக்­காத ஒருவர் எவ்­வாறு நாடு கடத்­தப்­பட்டார்? என்ற கேள்வி எழுந்­தி­ருக்­கி­றது.

மாலை­தீவு தூத­ரகம் விடுத்த வேண்­டு­கோ­ளின்­ப­டியே குறிப்­பிட்ட நபரைக் கைது செய்து நாடு கடத்­தி­ய­தாக குடி­வ­ரவு குடி­ய­கல்வுத் திணைக்­களம் கூறி­யுள்­ளது.

ஆனால் அது அர­சாங்­கத்­துக்கு - குறிப்­பாக வெளி­வி­வ­கார அமைச்­சுக்குத் தெரி­யாமல் நடந்­தி­ருப்­பது தான் ஆச்­ச­ரியம்.

பொது­வாக, இத்­த­கைய நாடு­க­டத்­தல்கள், இரா­ஜ­தந்­திர வழி­மு­றை­களின் ஊடா­கவே கையா­ளப்­பட வேண்டும்.

அத்­த­கைய இரா­ஜ­தந்­திர வழி­மு­றை­களைப் பின்­பற்­றாமல், நேர­டி­யா­கவே பொலிஸ் மற்றும் குடி­வ­ரவு குடி­ய­கல்வுத் திணைக்­க­ளத்­துடன் தொடர்பு கொண்டு மாலை­தீவு தூதுவர் இந்த காரி­யத்தை சாதித்­தி­ருக்­கிறார்.

இது இலங்கை அர­சாங்­கத்தை கடு­மை­யாக சினங்­கொள்ள வைத்­தி­ருக்­கி­றது.

வெளி­வி­வ­கார அமைச்­சுக்கு அழைக்­கப்­பட்ட மாலை­தீவு தூதுவர், இந்த விவ­காரம் தொடர்­பாக கண்­டிக்­கப்­பட்­டி­ருக்­கிறார்.

இதற்­கி­டையே வெளி­வி­வ­கார அமைச்சை எரிச்­ச­ல­டையச் செய்யும் இன்­னொரு சம்­ப­வமும் இடம்­பெற்­றி­ருக்­கி­றது.

கடந்த 24 ஆம் திகதி மாலை­தீவு விமான நிலை­யத்தில் வைத்து இலங்­கையைச் சேர்ந்த 27 வய­து­டைய மது­ஷங்க என்­பவர் கைது செய்­யப்­பட்டார்.

ஒரு வாரம் கழித்தே, மாலை­தீவு ஊட­கங்கள் இது­பற்றி செய்­தியை வெளி­யிட்­டன.

குறிப்­பிட்ட நபர், இலங்கை இரா­ணு­வத்தில் குறி­பார்த்துச் சுடும் அணியில் முன்னர் பணி­யாற்­றி­யவர் என்றும், அவர் மாலை­தீவு ஜனா­தி­ப­தியைக் கொல்ல முயன்­ற­தா­கவும், அந்த நாட்டு ஊட­கங்­களில் செய்­திகள் வெளி­யா­கின.

இது இலங்கை அர­சாங்­கத்­துக்கு அதிர்ச்­சியை அளித்­தது.

காரணம், குறிப்­பிட்ட கைது தொடர்­பாக மாலை­தீவு அர­சாங்கம் முறைப்­படி தெரி­யப்­ப­டுத்­த­வில்லை.

அதே­வேளை. இரா­ணு­வத்தில் பணி­யாற்­றிய ஒருவர் கூலிப்­ப­டை­யாக செயற்­பட முனைந்து கைது செய்­யப்­பட்டால் அதன் விப­ரீ­தங்­க­ளுக்கு அர­சாங்­கமும் பொறுப்­புக்­கூற வேண்­டிய நிலை இருந்­தது.

இந்­த­நி­லையில் மாலை­தீவில் கைது செய்­யப்­பட்­டவர் இரா­ணு­வத்­திலோ, விமா­னப்­படை மற்றும் கடற்­ப­டை­யிலோ பணி­யாற்­றி­யவர் அல்ல என்று உறுதி செய்­தது பாது­காப்பு அமைச்சு.

அவர் மால­பேயைச் சேர்ந்த ஒரு கரு­வாட்டு வர்த்­தகர் என்றும் கூறப்­ப­டு­கி­றது.

ஆரம்­பத்தில் 15 நாட்கள் காவலில் வைக்­கப்­பட்ட அவ­ரது விளக்­க­ம­றி­யலை மாலை­தீவு நீதி­மன்றம் நீடித்­தி­ருக்­கி­றது.

இந்தச் சம்­பவம் நடப்­ப­தற்கு சில நாட்கள் முன்­ன­தா­கவே, மாலை­தீவில் ஆள­ர­வ­மற்ற தீவு ஒன்றில் இருந்து துப்­பாக்­கிகள், சினைப்பர் துப்­பாக்­கியில் பொருத்தும் சாத­னங்கள், ரவைகள் மற்றும் வெடி­பொ­ருட்கள் மீட்­கப்­பட்­டன.

இத­னை­ய­டுத்தே, மாலை­தீவில் கைது செய்­யப்­பட்ட இலங்கை இளைஞர் ஒரு சினைப்பர் வீரர் என்று மாலை­தீவு ஊட­கங்கள் கதை கட்­டின..

முதலில் அவரை முன்னாள் இரா­ணுவச் சிப்பாய் என்று அறி­மு­கப்­ப­டுத்­திய மாலை­தீவு ஊட­கங்கள், பின்னர், மாலை­தீவு ஜனா­தி­ப­தியை கொலை செய்­வ­தற்­காக கூலிக்கு அமர்த்­தப்­பட்ட கொலை­யாளி என்று இப்­போது கூறி­வ­ரு­கின்­றன.

இந்­த­நி­லையில் மாலை­தீவு ஜனா­தி­பதி அவ­ச­ர­காலச் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

அதற்கு இலங்கை, அமெ­ரிக்கா உள்­ளிட்ட நாடுகள் கவ­லையும் கண்­ட­னமும் தெரி­வித்த நிலையில் ஆறு நாட்­களின் பின்னர் இந்த அவ­ச­ர­கா­லச்­சட்டம் விலக்கி கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இப்­போது, அர­சியல் உறு­திப்­பாடு உள்ள இட­மாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட முடி­யாத நிலையை அடைந்­தி­ருக்­கி­றது மாலை­தீவு.

இலங்கைத் தீவிலும் இதன் தாக்கம் எதி­ரொ­லிக்­கி­றது.

மாலை­தீ­வுக்கு இலங்­கைக்கும் இடை­யி­லான நெருக்கம், இந்த தாக்­கத்­துக்கு முக்­கிய காரணம்.

மாலை­தீவு ஜனா­தி­ப­தியைக் கொல்ல முயன்ற குற்­றச்­சாட்டு உண்­மை­யானால், அதில் இலங்­கை­யர்­களின் தொடர்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்டால், அர­சாங்­கத்­துக்கும் அது சிக்­க­லான ஒரு விடயம் தான்.

ஏற்­க­னவே 1988ஆம் ஆண்டு, புளொட் அமைப்பு மாலை­தீவு அர­சியல் புள்ளி ஒரு­வரின் கூலிப்­ப­டை­யாகச் செயற்­பட்டு, அங்கு ஆட்­சிக்­க­விழ்ப்­புக்கு முயற்­சித்­தது.

அதற்­கி­டையில் இந்­தியா தனது படை­களை அனுப்பி, அந்த ஆட்­சிக்­க­விழ்ப்புத் திட்­டத்தை முறி­ய­டித்­த­துடன், அதில் ஈடு­பட்ட புளொட் உறுப்­பி­னர்­க­ளையும் கைது செய்­தது.

அவர்கள் பின்னர் கொழும்­புக்கு அனுப்­பப்­பட்டு ஆயுள் தண்­ட­னையும் வழங்­கப்­பட்­டது.

பின்னர், அவர்­களை புளொட் தலைவர் சித்தார்த்தன் அரசாங்கத்துடன் பேசி விடுவித்திருந்தார்.

மாலைதீவின் அரசியல் உறுதிப்பாடு ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஆயுதக் கிளர்ச்சிக்கான சூழ்நிலைகள் மெதுவாகத் தென்படுகின்றன.

இதனை அமெரிக்காவோ, இந்தியாவோ, சீனாவோ விரும்பப் போவதில்லை. இலங்கையும் கூட அதனை விரும்பாது.

ஏனென்றால், இது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் அமைதிக்கு ஆபத்தானது.

இலங்கையைப் பொறுத்தவரையில் அத்தகையதொரு கிளர்ச்சியின் விளைவை நேரடியாகவே அனுபவிக்க நேரிடலாம்.

இதனால் இலங்கை அரசாங்கம் மாலைதீவு விவகாரத்தை கவனமாகவே கையாள முனையும்.

ஆனால், இருநாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டு வரும் இடைவெளி, இலங்கைக்கு சாதகமான ஒன்றாக இருக்காது என்றே கருதப்படுகிறது.

-ஹரிகரன்
வீரகேசரி
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல