சனி, 14 நவம்பர், 2015

ஒரு பௌத்த துறவியும் இரு சிறுபான்மை இனங்களும்

ஜனநாயகம் என்ற விடயதானத்திற்குள் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் உள்வருகின்ற போது அதற்கு சார்பாகவும் கருத்து வெளியிட்டார் என்பதே மிகைப்படுத்தப்படாத மதிப்பீடாகும். இவர் போல எல்லோருக்கும் உண்மையான ஞானம் கிடைத்திருந்தால் இந்நாட்டில் பிரச்சினைகள் என்றோ தீர்க்கப்பட்டிருக்கும். ***

இனவாதிகள் உறைநிலையில் இருக்கின்ற பின்னணியில், ஜனநாயக விரும்பி ஒருவரின் வெற்றிடம் தமது எதிர்காலம் எவ்வாறிருக்கும் என்பதையும் சிந்திக்க வேண்டும்.



ஒவ்­வொரு ஆளு­மை­யையும் வர­லாறு ஒவ்­வொரு வித­மாக பதிவு செய்து வைக்­கின்­றது. ஹிட்­ல­ரையும், முசோ­லி­னி­யையும், இடி அமீ­னையும், சேகு­வே­ரா­வையும், அன்னை தெரே­சா­வையும், இள­வ­ரசி டயா­னா­வையும், மாவீரன் நெப்­போ­லி­ய­னையும், பிடல் கஸ்­ரோ­வையும், மைக்கல் ஜக்­ச­னையும். சரித்­திரக் குறிப்­புக்கள் ஒரே மாதி­ரி­யாக நினைவில் வைத்துக் கொள்­வ­தில்லை.

ஒவ்­வொரு நபரும் இந்த உலக வாழ்வின் எச்­சங்­க­ளாக எவற்­றை­யெல்லாம் விட்டுச் செல்­கின்­றார்­களோ அதைக் கொண்­டுதான் அவர்கள் பற்­றிய தோற்­றப்­பாடும் சரி­தமும் இனி­வரும் தலை­மு­றை­க­ளுக்கு கடத்­தப்­ப­டு­கின்­றது. அந்த வகையில், உள்­நாட்டு ஆளு­மைகள் பற்­றிய குறிப்­புக்­களில் இறு­தி­யாக சோபித தேரரின் மர­ணமும் எழு­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

சமூக நீதிக்­கான மக்கள் இயக்­கத்தின் தலை­வரும் கோட்டே நாக விகா­ரையின் விகா­ரா­தி­ப­தி­யு­மான சங்­கைக்­கு­ரிய மாது­லு­வாவே சோபித தேரர் சிங்­கப்பூர் வைத்­தி­ய­சா­லையில் மர­ண­மானார். பின்னர் இலங்­கைக்கு கொண்டு வரப்­பட்ட அவ­ரது பூத­வுடல் இலட்­சக்­க­ணக்­கான மக்­களின் கண்ணீர் அஞ்­ச­லிக்கு மத்­தியில் நேற்று முன்தினம் வியா­ழக்­கி­ழமை தகனம் செய்­யப்­பட்­டது. எத்­த­னையோ அர­சி­யல்­வா­திகள் இறந்­தி­ருக்­கின்­றார்கள், எத்­த­னையோ பௌத்த துற­விகள் மறைந்­தி­ருந்­தி­ருக்­கின்­றார்கள், எத்­த­னையோ சமூக சீர்­தி­ருத்­த­வா­திகள் கால­மாகி இருக்­கின்­றார்கள். ஆனால் அண்­மைக்­கா­லத்தில் யாருக்­கு­மில்­லாத துக்­கத்தை சோபித தேரரின் மறை­வுக்கு இலங்கை மக்கள் வெளிப்ப­டுத்­தி­யி­ருக்­கின்­றார்கள்.

மக்­களின் அனு­தாபம்

சோபித தேரர் மர­ணித்த செய்­தியை வெறும் செய்­தி­யாக இந்­நாட்டு மக்கள் எடுத்துக் கொள்­ள­வில்லை. நமக்குத் தெரிந்த ஒருவர் மர­ணித்­து­விட்­ட­தாக குறிப்­பிட்டு அவ­ச­ர­மாக அனுப்­பப்­பட்ட ஒரு தந்­தி­போல கரு­தினர். அர­சாங்கம் பூரண அரச மரி­யா­தை­யுடன் தேரரின் இறுதிக் கிரி­யை­களை நடத்த ஏற்­பாடு செய்­தது. இறுதிக் கிரி­யைகள் நடை­பெறும் தினம் தேசிய துக்க தின­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது.

இவ­ரது மரணம் குறிப்­பாக சிறு­பான்மை மக்­களை வெகு­வாக பாதித்­தி­ருக்­கின்­றது என்­பதே இங்கு கவ­னிக்­கப்­பட வேண்­டிய விட­ய­மாகும். தமிழ், முஸ்லிம் பிர­தே­சங்­களில் வெள்ளைக் கொடி­களும் கபில நிறக் கொடி­களும் பறக்க விடப்­பட்­டன. சுவ­ரொட்­டிகள் பதா­கைகள் தொங்­க­வி­டப்­பட்­டன. முன்­னொ­ரு­போதும் இல்­லா­த­வாறு, எந்­த­வொரு முஸ்­லிமோ அல்­லது தமி­ழனோ இதை எதற்­காக செய்­கின்­றீர்கள் என்று விதண்­டா­வாதம் பேச­வில்லை. மாறாக, ஆயி­ரக்­க­ணக்­கான முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் தேரரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்­டனர். தேர­ரிற்கு இந்த அள­விற்கு சிறு­பான்மை சமூ­கங்கள் முக்­கி­யத்­துவம் கொடுப்­ப­தையும் அன்­னாரின் உட­லுக்கு அஞ்­சலி செலுத்த வரு­கின்­ற­வர்­க­ளுக்­காக முஸ்­லிம்கள் தானம் வழங்­கு­வ­தையும் சிங்­கள ஊட­கங்கள் வெகு­வாக படம் பிடித்துக் காட்­டி­யுள்­ளன. சமூக நல்­லி­ணக்­கத்­திற்கு இது நல்­ல­தொரு எடுத்­துக்­காட்டு என்று சிலா­கித்து செய்தி வெளியிட்­டுள்­ளன.

ஆனால் ஒரு அரச தலை­வ­னுக்கு இல்­லாத மதிப்பும் மரி­யா­தையும் துக்கம் அனுஷ்­டித்­த­லையும் சோபித தேர­ருக்கு வழங்க வேண்­டி­யதன் அவ­சி­யம்தான் என்ன? என்று எழு­கின்ற கேள்­விக்கு அவர் ஒரு ஜன­நா­யக விரும்பி என்று சுருக்­க­மாக பதி­ல­ளித்து விட முடியும். அதா­வது, இலங்­கையின் கடந்த 40 வருட அர­சி­யலில் ஜன­நா­யகம் என்று தான் கரு­தி­யதை செய்­வ­தற்­காக மிக சாதுர்ய­மாகப் போரா­டிய ஒரு பௌத்த துறவி. இதில் கடைசிப் பத்து வரு­டங்­களில் பொது­வாக நாட்டு மக்கள் விட­யத்தில் மிகுந்த அக்­க­றை­யுடன் செயற்­பட்­டவர். குறிப்­பாக கடந்த 5 வரு­டங்­களில் சிறு­பான்மை சமூ­கங்­க­ளுக்கு நீதியும் நியா­யமும் கிடைக்க வேண்­டு­மென்­ப­தற்­காக முற்­போக்கு அடிப்­ப­டையில் செயற்­பட்­டவர் என்­பதே அவ­ரு­டைய வகி­பா­கத்தை விளக்­கு­வ­தற்கு போது­மா­னது.

மாது­லு­வாவே சோபித தேரர் அல்­லது இவர் போன்ற ஒரு பௌத்த துற­வியின், ஜன­நா­யக விரும்பி ஒரு­வரின் செயற்­பா­டுகள், சம­கா­லத்தில் வாழ்ந்த சிறு­பான்மை மக்­களின் இருப்­பிலும் வாழ்­விலும் குறிப்­பி­டத்­தக்க தாக்­கங்­களை ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றது என்­பது வெள்ளிடை­மலை. அந்த வகையில், இவர் போன்ற ஒரு முற்­போக்கு சிந்­த­னை­யா­ளனின் வெற்­றிடம் என்­பது எதிர்­கா­லத்தில் தமிழ், முஸ்­லிம்­களின் ஜன­நா­யக ரீதி­யி­லான அபி­லா­ஷை­களை நிறை­வேற்­று­வதில் எவ்­வி­த­மான தேக்க நிலையை ஏற்­ப­டுத்தப் போகின்­றது என்­பது பற்­றியே சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது.

1942 இல் பாதுக்க பிர­தே­சத்தில் பிறந்த இவ­ரு­டைய இயற்­பெயர் பத்­தி­ரகே டொன் ரத்­ன­சே­கர. 11 வயதில் துறவு வாழ்க்­கைக்கு நுழைந்த பிற்­பா­டுதான் அவர் மாது­லு­வாவே சோபித்த தேரர் ஆகின்றார். ஆரம்­பத்தில் கிட்­டத்­தட்ட 25 வரு­டங்­க­ளாக பௌத்த சமயப் பணி­க­ளி­லேயே இவர் ஈடு­பட்­டி­ருந்­தாலும், ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆட்சி 1956 இல் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட போதே அர­சியல் மீதான ஈடு­பாடு தனக்கு ஏற்­பட்டு விட்­ட­தாக அவர் பின்னர் ஒரு தடவை சொல்­லி­யி­ருந்தார். சிங்­கள பெரும்­பான்­மையைக் கொண்ட ஒரு நாட்டில், ஆட்சிச் சூழல் ஒன்றின் முன்­ன­கர்வு எவ்­வா­றி­ருக்­கின்­றது என்­பதை ஒரு பௌத்த மத­குரு உன்­னிப்­பாக அவ­தா­னிப்­பது சாதார­ண­மா­னது. ஆயினும் அவர் பின்­வந்த காலத்தில் அதையும் தாண்டி செயற்­பட்டார் என்­பதே உண்மை.

தொடர்ச்­சி­யான வகி­பாகம்

தேசிய அர­சி­யலில் பல தசாப்­தங்­க­ளாக சோபித தேரர் ஏதா­வது ஒரு அடிப்­ப­டையில் செல்­வாக்குச் செலுத்தி வந்தார் என்று வர­லாற்று ஆசி­ரி­யர்கள் குறிப்­பிட்­டுள்­ளனர். குறிப்­பிட்டுச் சொல்­வது என்றால், 1977 இல் ஜே.ஆர். ஜய­வர்­தன ஜனா­தி­ப­தி­யாக வரு­வ­தற்கு திரை­ம­றையில் உழைத்த சோபித தேரர், ஜே.ஆரின் ஆட்­சியில் கருத்து வெளிப்­பாட்டுச் சுதந்­திரம், சிவில் உரி­மைகள், சட்டம் மற்றும் ஒழுங்கு நடை­மு­றைப்­ப­டுத்தல் என்­ப­வற்றை வலி­யு­றுத்தி குரல் எழுப்பி வந்தார். இலங்கை - இந்­திய ஒப்­பந்­தத்தை தேரர் முழு­மை­யாக ஏற்றுக் கொள்­ள­வில்லை. அயல்­நா­டான இந்­தி­யாவின் ஆதிக்கம் சிங்­களத் தீவில் அதி­க­ரித்­து­விடும் என்று பயந்தார். எனவே அதற்­கெ­தி­ராக வீதிப் போராட்­டங்­களை முன்­னின்று நடத்­தி­ய­வர்­களுள் இவர் முக்­கி­ய­மா­னவர்.

இவ்­வா­றான பின்­ன­ணியில் ஜே.ஆர். ஜய­வர்­த­னவின் ஆட்­சியில் அதி­ருப்தி அடைந்­தி­ருந்த சோபித தேரர் அவ­ரது ஆட்­சியை முடி­வுக்கு கொண்­டு­வந்து, ரண­சிங்க பிரே­ம­தா­சாவை ஜனா­தி­ப­தி­யாக்­கு­வ­தற்கு முன்­னின்று செயற்­பட்டார். உண்­மையில் பிரே­ம­தாச குடும்­பத்­துடன் மிக நெருக்­க­மான உறவை இவர் கொண்­டி­ருந்­த­தாக கூறப்­ப­டு­கின்­றது. பிரே­ம­தாச குண்­டுத்­தாக்­கு­தலில் கொல்­லப்­பட்ட பிற்­பாடு அவ­ரது துணை­வி­யா­ரான ஹேமா பிரே­ம­தா­சவை ஜனா­தி­ப­தி­யாக்­கு­வ­தற்கு ஒரு தரப்­பினர் முயற்சி செய்­தனர். இவ்­வ­ணியில் சோபித்த தேரரும் உள்­ள­டங்­கி­யி­ருந்­த­தாக அப்­போது பேச்­ச­டி­பட்­டது.

ஆனால், இத்­திட்­டங்­களை உய்த்­த­றிந்து கொண்ட அப்­போ­தைய ஓய்­வு­நிலை ஜனா­தி­ப­தி­யான ஜே.ஆர். ஜய­வர்­தன, சபா­நா­யகர் எம்.எச்.முகம்­ம­து­வுக்கு சில ஆலோ­ச­னை­களை வழங்­கி­ய­துடன் சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்­க­வுக்கு கயிற்றைக் கொடுத்தார். இதன்­படி மேலும் கால­தா­ம­த­மின்றி பாரா­ளு­மன்றம் கூட்­டப்­பட்ட வேளையில். டீ.பி. விஜ­ய­துங்க ஜனா­தி­ப­தி­யாக பிரேரிக்­கப்­பட்டு நிய­மிக்­கப்­பட்­ட­தாக ஒரு தனிக்­கதை உள்­ளது.

அதன் பிறகு சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க ஆட்­சி­ய­மைப்­ப­தற்கும் சிங்­கள தேசத்தின் முக்­கி­ய­மான பௌத்த மத­குரு என்ற அடிப்­ப­டையில் சோபித தேரரும் பங்­க­ளிப்புச் செய்­தி­ருந்தார். சந்­தி­ரிகா அம்­மை­யாரின் ஆட்­சியில் பிர­த­ம­ராக யாரை நிய­மிப்­பது என்ற சிக்கல் வந்த போது மஹிந்த ராஜ­ப­க் ஷவை சிபா­ரிசு செய்­த­வர்­களுள் இவரும் ஒருவர் என்று கூறப்­ப­டு­கின்­றது. இது உண்­மை­யாக இருந்­தாலும், மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஜனா­தி­பதி ஆட்­சிக்­காலம் முடி­வ­டை­வ­தற்கும், அவ­ரது ராஜ கன­வு­களை சித­ற­டிப்­ப­தற்கும் முக்­கிய கார­ணி­யாக இருந்­த­வரும் அதே சோபிததேரரே என்­பது அடிக்­கோ­டிட்ட வார்த்­தை­களால் எழு­தப்­பட வேண்­டி­யது.

அதா­வது இன்று நாம் எல்­லோரும் அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கின்ற நல்­லாட்­சியின் கார­ண­கர்த்­தாக்­களுள் ஒரு­வரே மாது­லு­வாவே சோபித்த தேரர். கடந்த ஜனா­தி­பதித் தேர்தலுக்கு முன் - பின்­னான சில வரு­டங்­களில் அவர் மேற்­கொண்ட ஜன­நா­யக ரீதி­யான முயற்­சி­களே, இன்­றைய சமூ­தாயம் இவரை சிலா­கித்துப் பேசு­வ­தற்கும் இவ­ரது மறை­வுக்­காக இத்­தனை தூரம் துக்கம் கொண்­டா­டு­வ­தற்கும் காரணம் என்று குறிப்­பிட முடியும்.

மஹிந்த ஆட்­சிக்கு முடிவு

மஹிந்த ராஜ­ப­க் ஷவின் இரண்­டா­வது ஆட்­சிக்­காலம் எப்­படி இருந்­தது என்­பதை இன்னும் யாரும் மறந்­து­வி­ட­வில்லை. பல்­லாண்டு கால­மாக ஒரு மகா­ரா­ஜாவைப் போல ஆட்­சியில் நிலைத்­தி­ருக்க வேண்டும் என்ற கனவை அவர் கொண்­டி­ருந்தார் என்­ப­தற்கு பின்­னாளில் பல அத்­தாட்­சிகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. அவ்­வாறு நீடித்து நிலைத்­தி­ருப்­ப­தற்கு மஹிந்­தவும் அவ­ரு­டைய சகாக்­களும் சில கரு­வி­களை ஏற்­பாடு செய்­தி­ருந்­தன என்று சொல்­லலாம். அது இல்­லா­விட்டால் இதனைக் கொண்டு ஆட்­சியை நிலை நிறுத்­தலாம் என்ற அடிப்­ப­டையில் ஒரு சில மாற்று ஏற்­பா­டு­களை மஹிந்த கூட்­டணி செய்­தி­ருந்­தது. இன­வா­தமும் அதில் ஒன்று என்­பது. அதற்கு ராஜ­ப­க் ஷாக்கள் வழங்­கிய மறை­முக ஆசீர்­வா­தத்தில் இருந்து புலப்­ப­டு­கின்­றது.

இன­வா­தமும் கடும்­போக்கு சக்­தி­களும் சிறு­பான்மை இனங்­களின் மத அடை­யா­ளங்கள் மீதும் தனி­யு­ரிமை மீதும் கைவைத்­தன. இதற்கு பெரிதும் இலக்­கா­கி­யது முஸ்லிம் மக்­களே. ஹலால் சான்­றிதழ் ஒழிப்பு, அபாயா கட்­டுப்­பாடு என ஆரம்­பித்த இன­வா­தத்தின் ஒடுக்­கு­முறை அளுத்­கம கல­வ­ரத்தில் தன்­னு­டைய ஒட்­டு­மொத்த கோர முகத்­தையும் காட்டி நின்­றது. அது போதாது என்று இந்து மற்றும் கிறிஸ்­தவ மக்­களின் வழி­பாட்டுத் தலங்­களும் இலக்­கு­வைக்­கப்­பட்­டன. சிங்­கள இன­வா­தத்தின் அபத்­தங்­களைக் கண்டு உண்­மை­யான பௌத்த மக்­களே வெட்கித் தலை­கு­னிந்­தனர். சிலர் முகம் சுழித்­தனர், சிலர் குரல் எழுப்­பினர்.

அவ்­வாறு குரல் எழுப்­பி­ய­வர்­களுள் வட்­ட­ரக்க தேரர் போலவே சோபித தேரரும் முக்­கி­ய­மா­னவர். பௌத்­தத்தை அவர் ஆத­ரித்­தாலும், கடும்­போக்­கு­வா­தத்தை கடை­சி கட்­டத்தில் வெறுத்­தொ­துக்­கினார். முஸ்­லிம்­க­ளுக்கு நடக்­கின்ற அநி­யா­யங்­க­ளுக்கு நியாயம் கிடைக்க வேண்­டு­மென்று ஒரு சமயம் குறிப்­பிட்டார். முன்­னைய அர­சாங்­கத்­துடன் நெருக்­கத்தை கொண்­டி­ருந்த பொது பல­சேனா, ராவண பலய போன்ற அமைப்­புக்­களும் பௌத்த துற­வி­களில் ஒரு பிரி­வி­னரும் கடும்­போக்கு பௌத்­தர்­களும் இந்­நாட்டில் வாழ்­கின்ற சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ரான ஒரு நிலைப்­பாட்டை எடுத்­தி­ருக்கும் போது, அதற்­கெ­தி­ராக காவி­யுடை தரித்த ஒருவர் நிற்­பது என்­பது லேசு­பட்ட காரி­ய­மல்ல. இதுவே வேறு யாராக இருந்­தாலும் அவ­ரது விதி வேறு­மா­திரி முடிந்­தி­ருக்கும். ஆனால் சோபித தேரர் விட­யத்தில் அவர் உடுத்­தி­யி­ருந்த காவி­யு­டையும் அவ­ரது சமூக அந்­தஸ்தும் இவ்­வா­றான நிலை­மை­யிலும் அவரை காப்­பாற்­றி­யது.

ஆட்­சியை கையி­லெ­டுப்­ப­தற்­காக பண்­டா­ர­நா­யக்க இன­வா­தத்தை கையி­லெ­டுத்தார் என்­பது வர­லாறு. ஆனால் அவர் அதி­லி­ருந்து சற்று விலகிச் செல்­வ­தாக இன­வா­திகள் எப்­போது கரு­தி­னார்­களோ அப்­போதே அவர் இலக்கு வைக்­கப்­பட்­டு­விட்டார். உண்­மை­யாகச் சொன்னால் அவர் வளர்த்த இன­வாத சிந்­த­னைதான் பிக்கு ஒரு­வரின் வடிவில் துப்­பாக்கி ஏந்தி அவரைச் சுடு­வ­தற்­காக வந்­தி­ருந்­தது. அதுவே மஹிந்த ஆட்­சிக்கும் நடந்­தது. இன­வா­தமே அவ­ரது ஆட்­சிக்கும் உலை வைத்­தது என்­பதை உல­க­றியும்.

மாற்­றத்தை நிகழ்த்­தி­ய­வர்கள் மக்கள் என்­றாலும், மாற்றம் ஒன்று நிக­ழ­வேண்டும் என்­ப­தற்கு வித்­திட்­ட­வர்­களுள் முக்­கி­ய­மா­னவர் இந்த சோபித்த தேரர். ஆட்­சி­யா­ளர்கள் ஆட்சி பீடம் ஏற்­று­வ­தற்கு பங்­க­ளிப்புச் செய்து விட்டு பின்னர் அவர்கள் சரி­யில்லை என்று கருதும் போது ஆட்­சியை மாற்­று­வ­தற்­கான வேலை­களில் ஈடு­ப­டு­பவர் என்று கரு­தப்­படக் கூடிய இவர், மஹிந்த விட­யத்­திலும் அதனைச் செய்தார். நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை ஒழிப்பு, சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் நிய­மனம் உள்­ள­டங்­க­லாக 19ஆவது திருத்­தத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கும் அதேபோல் நல்­லாட்சி சூழலை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் ஆட்­சி­மாற்றம் ஒன்று தேவை என்று ஆரம்­பத்தில் சொன்­னவர் சோபித்த தேரர் ஆவார்.

ஒரு கட்­டத்தில், ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக சோபித்த தேரர் போட்­டி­யி­ட­வுள்­ள­தாக தக­வல்கள் வெளியா­கி­யி­ருந்­தன. மைத்­தி­ரி­பால சிறி­சேன பொது வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­ப­டு­வ­தற்கு சில தினங்­க­ளுக்கு முன்னர், அமெரிக்கா, பாகிஸ்தான், இந்­தியா போன்ற சில நாடு­களின் ஆத­ர­வுடன் மேற்­கொள்­ளப்­பட்ட ஒரு ஆய்வின் முடி­வின்­படி பொது எதி­ர­ணியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­படக் கூடிய இரண்டு மூன்­றுபேரில் சோபித்த தேரரும் உள்­ள­டங்­கி­யி­ருந்தார். ஆனால் ஐக்­கிய தேசியக் கட்­சியின் காய்­ந­கர்த்­தலில் சுதந்­திரக் கட்­சிக்­கா­ர­ரான மைத்­தி­ரி­பால சிறி­சேன பொது வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்­ட­போது, தேரர் அதனை நேரிய மன­துடன் ஏற்றுக் கொண்டார்.

பல வரு­டங்­க­ளாக ஆட்சி உரு­வாக்­கத்­திலும் ஆட்­சியை மாற்­று­வ­திலும் ஈடு­பா­டு­கொண்ட சோபித தேரர் விரும்­பி­யி­ருந்தால், மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நிரா­க­ரித்­தி­ருக்­கலாம். பௌத்த இன­வா­தத்தை கையி­லெ­டுத்து வேறு விதத்தில் ஆட்­சியைப் புரட்­டிப்­போடும் முயற்­சியில் இறங்­கி­யி­ருக்­கலாம். ஆனால், அவர் அதைச் செய்­ய­வில்லை. தான் எதிர்­பார்க்கும் ஜன­நா­யக நோக்­கங்­களை அடைந்து கொள்­வ­தற்கு பொருத்­த­மான எவ­ரையும் ஆட்­சியில் ஏற்­று­வ­தற்கு அவர் தயா­ராக இருந்தார். ஆனால் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யுடன் ஒப்­பந்தம் செய்தே தேர்தலில் ஆத­ர­வ­ளித்தார். நாட்டில் நல்­லாட்சி உரு­வா­னது. 19ஆவது திருத்­தத்தை நிறை­வேற்­று­வ­தற்கும் இன்­ன­பிற வாக்­கு­று­தி­களை செய்து முடிப்­ப­தற்கும் அழுத்தம் கொடுத்தார். இவ்­வா­றான விட­யங்­க­ளுக்­கா­கவே மாது­லு­வாவே சோபித தேரர் சிறு­பான்மை மக்­களால் நன்­றி­யு­ணர்­வோடு நோக்­கப்­ப­டு­கின்றார். இது நல்­ல­தொரு சமிக்ஞையே. அது­மட்­டு­மன்றி நல்­ல­வர்­களை மதித்­தால்தான், இன­வா­தி­களை விமர்­சிக்க முடியும்.

நமது எதிர்­காலம்?

ஆனால், அடிப்­ப­டையில் அவர் சிறு­பான்மை மக்­களின் நலன்­களில் அக்­கறை கொண்­டவர் என்றோ அல்­லது தமிழ், முஸ்­லிம்­க­ளுக்கு ஆத­ர­வாக குரல் கொடுத்­தவர் என்றோ குறிப்­பி­டு­வது மிகைப்­ப­டுத்­தப்­பட்ட புகழ்ச்­சி­யா­கவே இருக்கும். ஏனென்றால், இது சிங்­கள பௌத்த நாடு. அவர் ஒரு பௌத்த துறவி. எனவே இயல்­பா­கவே சில பண்­புகள் தவிர்க்க இய­லா­தவை. அந்­த­வ­கையில் பெரும்­பான்மை இனத்தை முதன்மைப் படுத்­திய போக்­கையே சோபித தேரர் ஆரம்­பத்தில் கொண்­டி­ருந்­த­தாக ஒரு மாற்றுக் கருத்தும் இருப்­பதை இங்கு குறிப்­பிட்­டாக வேண்டும்..

எவ்­வா­றி­ருப்­பினும், அவ­ரது வயது முதிர்ச்­சியும் அர­சியல் பற்­றிய அனு­ப­வமும் அவரை சில விட­யங்­களில் பக்­கு­வப்­பட வைத்­தி­ருந்­தன என்று சொல்­லலாம். அதா­வது சிறு­பான்மை மக்­களை புறக்­க­ணித்து விட்டு இந்த நாட்டில் ஜன­நா­ய­கத்­தையே நல்­ல­தொரு ஆட்சிச் சூழ­லையோ ஏற்­ப­டுத்த முடி­யாது என்ற நிலைப்­பாட்­டிற்கு அவர் வந்­தி­ருக்க வேண்டும். கடைசிக் காலத்தில் சிறு­பான்மை மக்­களின் நியா­ய­மான கோரிக்­கை­க­ளுக்கு ஆத­ர­வாக அவர் குரல் கொடுத்­ததில் இருந்து இதனை அறிந்து கொள்ளக் கூடி­ய­தாக இருந்­தது. இன்னும் அழுத்­த­மாகச் சொன்னால், ஜன­நா­ய­கத்­திற்­காக போரா­டு­ப­வ­ராக அவர் இருந்தார். ஜன­நா­யகம் என்ற விட­ய­தா­னத்­திற்குள் தமிழ், முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னைகள் உள்­வ­ரு­கின்ற போது அதற்கு சார்­பா­கவும் அவர் கருத்து வெளியிட்டார் என்­பதே மிகைப்­ப­டுத்­தப்­ப­டாத மதிப்­பீ­டாகும். அதேபோல் இவர் போல ஞானம் எல்­லோ­ருக்கும் கிடைத்­தி­ருந்தால் இந்­நாட்டில் பிரச்­சி­னைகள் என்றோ தீர்க்­கப்­பட்­டி­ருக்கும்.

சரி, இனி மாது­லு­வாவே சோபித தேரர் இல்லை. அவ­ரது இடை­வெளியை யாராலும் நிரப்­பி­விட முடி­யாது என்று அனு­தா­பப்­ப­டு­கின்ற சிறு­பான்மை மக்கள், இதற்குப் பிறகு தம்­மு­டைய எதிர்­காலம் எதிர்­காலம் எவ்­வாறு அமையப் போகின்­றது என்­பதை சிந்­திக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது.

இவ­ரது மர­ணத்தால் முழு நாடுமே அழு­வது போல ஒரு தோற்­றப்­பாடு இருந்­தாலும், ஜன­நா­யக விரோ­தி­களும், கடும்­போக்­கு­வா­தி­களும் இவ­ரது வெற்­றி­டத்தை எவ்­வாறு நோக்­கு­கின்­றார்கள் என்­பதை சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது. இந்த நாட்டில் வாழ்­கின்ற தமிழ், முஸ்லிம் மக்­களின் அபி­லா­ஷைகள் என்ன? எந்­தெந்த விட­யத்தில் நீதியும் ஜன­நா­ய­கமும் நிலை நாட்­டப்­பட வேண்டும் என்­பதை பெரு­ம­ள­வி­லான சிங்கள மக்களும் பௌத்த மதகுருமாரும் அறிவார்கள் என்பது உண்மையே. ஆனால், கொதித்தெழக்கூடிய இனவாத செயற்பாட்டாளர்கள் உறைநிலையில் இருக்கின்ற ஒரு நாட்டில் மாதுலுவாவே சோபித தேரர், வட்டரக்க தேரர் போன்று எத்தனை சிங்கள ஆளுமைகள் இனிமேல் சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுக்கப் போகின்றன என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது.

தமிழர்களும் முஸ்லிம்களும் தங்கள் தங்கள் இனங்களுக்குள்ளேயே பல பிரிவுகளாக ஆக்கப்பட்டுள்ளதுடன், இரு இனங்களுக்கும் இடையில் இன்னும் நல்லிணக்கம் முழுமையாக ஏற்படவில்லை என்பதே நிதர்சனமாகும். இவ்வாறு இரு சிறுபான்மை இனங்களும் தங்களுக்கு இடையில் ஒற்றுமையை பலப்படுத்தாதிருக்கின்ற ஒரு சூழலில், பெரும்பான்மை சமூகம் சிறுபான்மை மக்களுடன் இணைந்து செயற்படும் என்றும் சிங்கள தேசியவாதிகள் சிறுபான்மையினருக்காக குரல்கொடுப்பார்கள் என்றும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாது. சோபித தேரர் அல்லது அவர் போன்ற ஆளுமைகள் மரணிக்கின்ற போது இந்த வெற்றிடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது என்று கண்ணீர்விட்டு அழுகின்றவர்கள், இந்த வெற்றிடம் எவ்வாறு உருவானது? அதனை எவ்வாறு நிரப்பலாம்? என்று இனிவரும் காலங்களிலாவது சிந்திக்க வேண்டும்.

ஜனாதிபதியும் பிரதமரும் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்கள் என்று சிறுபான்மை சனங்கள் இருப்பது, பொறுப்பற்ற தனமாகும்.

ஏ.எல்.நிப்ஹாஸ் 
வீரகேசரி
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல